/* */

ஔவையார் விருது விண்ணப்பிக்க கலெக்டர் அறிவிப்பு

தர்மபுரி மாவட்டத்தில் 2021-22-ஆம் ஆண்டிற்கான ஔவையார் விருதுக்கு தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்க கலெக்டர் அறிவிப்பு

HIGHLIGHTS

ஔவையார் விருது விண்ணப்பிக்க கலெக்டர் அறிவிப்பு
X

தர்மபுரி கலெக்டர் ச.திவ்யதர்சினி

பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு 2021-22-ஆம் ஆண்டிற்கான ஔவையார் விருது 08.03.2022 உலக மகளிர் தின விழாவில் முதல்வரால் வழங்கப்படும். இவ்விருதுக்கு ரொக்கப்பரிசு, தங்கப்பதக்கம், சான்று மற்றும் சால்வை வழங்கப்படும்.

மேற்படி விருதுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்திகுறிப்பில்,

2022-ம் ஆண்டு ஔவையார் விருது வழங்கும் பொருட்டு கருத்துருக்கள் அனுப்புவதற்கான விதிமுறைகள்:

தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.

சமூக நலனைச் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில்; மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றுபவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் தர்மபுரி மாவட்ட சமூகநல அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்று கருத்துரு (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்), நிழற்படம்-2 ஆகியவைகளுடன் புத்தக வடிவில் இரண்டு (அசல்-1 மற்றும் நகல்-1) கருத்துக்கள் 27.12.2022க்குள் மாவட்ட சமூக நல அலுவலகம், கூடுதல் கட்டடம், மாவட்ட ஆட்சியர் வளாகம், தர்மபுரி மாவட்டம் என்ற முகவரியில் சமர்ப்பிக்குமாறு தெரிவித்துள்ளார்.

Updated On: 14 Dec 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  2. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  3. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  4. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?
  5. இந்தியா
    சர்வதேச செவிலியர் தினம்: இந்திய ராணுவம் கொண்டாட்டம்
  6. தொழில்நுட்பம்
    3டி அச்சிடப்பட்ட ராக்கெட் எஞ்சினை வெற்றிகரமாக சோதித்த இஸ்ரோ: 3டி...
  7. தொழில்நுட்பம்
    எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சி, e200..! ஐஐடி மெட்ராஸ் சாதனை..!
  8. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலிருந்து எலக்ட்ரானிக் சாதனங்களை பாதுகாப்பது எப்படி?
  9. ஈரோடு
    எடப்பாடி பழனிசாமி 70வது பிறந்த நாள்: பெருந்துறையில் நடமாடும் வாகனம்...
  10. வணிகம்
    விரைவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வழக்கமான விமான சேவையை தொடரும்:...