/* */

தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தில் தொழில் முனைவோர் விண்ணப்பிக்கலாம்

புதிய தொழில் முனைவோர், தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் தருமபுரி கலெக்டர் திவ்யதர்ஷினி கூறியுள்ளார்.

HIGHLIGHTS

தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தில் தொழில் முனைவோர் விண்ணப்பிக்கலாம்
X

இது குறித்து, தருமபுரி கலெக்டர் திவ்யதர்ஷினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசின் முதல் தலைமுறை பட்டதாரி, பட்டய தொழில் கல்வி படித்த தொழில் முனைவோருக்காக புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் என்ற சுயதொழில், தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தருமபுரி மாவட்ட தொழில் மையத்தின் மூலம், இத்திட்டத்தின் கீழ், 2021-22 ஆம் ஆண்டிற்கென 21 நபர்களுக்கு ரூ.209.00 லட்சம் மானியம் வழங்க கடன் இலக்கு நிர்ணயிக்கப்படடுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற தகுதியுள்ளதாக ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட இனங்களுடன், கூடுதலாக போர்வெல் ரிக், கண்டெயினர் லாரி, ரோட் ரோலர், கான்க்ரீட் கலவை இயந்திரங்கள், நடமாடும் உணவகங்கள், அழகு நிலையம், மருத்துவமனை உபகரணங்கள் போன்ற சேவைத் தொழில்கள் மற்றும் ஆயத்த ஆடை, ரூபிங் ஸீட்ஸ், பால் மற்றும் வேளாண் பொருட்களில் இருந்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள், பர்னிச்சர் தயாரித்தல், பவர்லூம், சிறுதானிய பொருட்களில் இருந்து பிஸ்கட் மற்றும் இதர பொருட்கள் தயாரித்தல் ஆகியன, இத்திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் கீழ், திட்ட மதிப்பீடு குறைந்த பட்சம் ரூ.10 இலட்சத்திற்கு மேல் அதிகபட்சமாக ரூ.5 கோடி வரை கடனாக வழங்கப்படும் அனைத்து உற்பத்தி மற்றும் சேவை தொழில்கள் தொடங்கலாம். தொழில் முனைவோர் பங்களிப்பாக பொது பிரிவினர் திட்ட முதலீட்டில் 10 விழுக்காடு சிறப்பு பிரிவினர் 5 விழுக்காடு செலுத்த வேண்டும். இளநிலை பட்டதாரிகளாகவோ, பட்டயம் பெற்றவராகவோ, ஐடிஐ தொழிற் பயிற்சி பெற்றவர்களாகவோ அல்லது அதற்கு மேற்பட்ட கல்வி தகுதி பெற்றவராகவோ இருக்க வேண்டும்.

பொதுப் பிரிவினர் 21 வயது முதல் 35 வயதுக்குட்பட்டவர்களாகவும், சிறப்பு பிரிவினர் அதிகபட்சம் 45 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். தொழில் துவங்க ஆர்வமுள்ள தொழில் முனைவோர் www.msmeonline.tn.gov.in/என்ற இணையதள முகவரியில் இலவசமாக விண்ணப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில மையம், தருமபுரி அவர்களை அணுகவும். தொலை பேசி எண்கள்: 04342- 230892,8925533941 , 8925533942. அணுகலாம்.

Updated On: 17 July 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?