/* */

தருமபுரியில் சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட 15வது மாநாடு

தருமபுரியில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட 15வது மாநாடு நடைபெற்றது.

HIGHLIGHTS

தருமபுரியில் சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட 15வது மாநாடு
X

தருமபுரி மாவட்ட 15வது மாநாடு தருமபுரி ஆர்.டி. நகரில் உள்ள ஊரகவளர்ச்சித்துறை அலுவலகர்கள் சங்க கட்டடத்தில் நடைபெற்றது. 

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் தருமபுரி மாவட்ட 15வது மாநாடு தருமபுரி ஆர்.டி. நகரில் உள்ள ஊரகவளர்ச்சித்துறை அலுவலகர்கள் சங்க கட்டடத்தில் நடைபெற்றது. மாவட்டதுணைத்தலைவர் பி.மகேஸ்வரி தலைமை வகித்தார்.

மாவட்ட துணைத்தலைவர் ஜி.வளர்மதி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாவட்டணைத்தலைவர் டி.தேவேந்திரன் வரவேற்றார்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஏ.சேகர் மாநாட்டை துவக்கிவைத்து பேசினார். மாவட்டசெயலாளர் சி.காவேரி வேலை அறிக்கை வாசித்தார். மாநிலதுணைத்தலைவர் கே. அண்ணாதுரை சிறப்புறையாற்றினார். மாவட்ட பொருளாளர் கே.தேவகி வரவு செலவு அறிக்கையை வைத்தார்.

அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் கே.புகழேந்தி, வேளாண்மைத்துறை அமைச்சு பணியாளர் சங்க மாவட்ட தலைவர் ஆர்.ஜெயவேல் ஓய்வுபெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்ட தலைவர் இ.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

மாநிலசெயலாளர் ஆர்.எம்.மஞ்சுளா நிறைவுறையாற்றினார். ஓய்வு பெற்ற நிர்வாகிகளுக்கு பணிநிறைவு பாராட்டுவிழா நடைபெற்றது. முன்னதாக சங்கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வுசெய்யப்பட்டனர்.

மாவட்ட தலைவராக சி.காவேரி, மாவட்ட செயலாளராக கே.தேவகி, மாவட்ட பொருளாளராக பி.வளர்மதி, மாவட்ட துணைத் தலைவர்களாக ஜி.வளர்மதி, எஸ்.அனுசுயா, ராமன், மாவட்ட இணை செயலாளர்களாக சி.கலைவாணி, ஜெயலட்சுமி, மாநில செயற்குழு உறுப்பினராக பி.மகேஷ்வரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கவேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் என்ற பெயரில் மாதம் ரூ.2000 வழங்குவதை ரத்து செய்துவிட்டு அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் குடும்ப ஓய்வூதியம் வழங்கவேண்டும்.

ஓய்வு கால பலனை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.10 லட்மாக உயர்த்தி வழங்கவேண்டும். சத்துணவு மையங்களில் காலிபணியிடங்களை நிரப்பவேண்டும். ஊதிய உயர்வு கடந்த 5 ஆண்டுகளாக வழங்கவில்லை உடனடியாக வழங்க மாவட்ட நிர்வாகம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தகுதி வாய்ந்த சமையலர், சமையல் உதவியாளர்களுக்கு பதவிஉயர்வு அளிக்கவேண்டும். தருமபுரியில் சிப்காட் அமைக்கும் பணியை தொடங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாவட்டதுணைத்தலைவர் பி.வளர்மதி நன்றி கூறினார்

Updated On: 6 Feb 2022 6:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  4. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  5. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  6. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  7. ஈரோடு
    சித்தோடு அருகே 810 கிலோ தங்கம் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து
  8. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்