/* */

தர்மபுரியில் ஜுன் 24 முதல் புத்தக திருவிழா தொடக்கம்

தர்மபுரி அரசுக் கலை கல்லூரி மைதானத்தில் வரும் ஜுன் 24 முதல் ஜுலை 4 வரை 11 நாட்கள் புத்தகத்திருவிழா நடைபெறவுள்ளது

HIGHLIGHTS

தர்மபுரியில் ஜுன் 24 முதல் புத்தக திருவிழா தொடக்கம்
X

காட்சி படம் 

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட நிர்வாகம், தகடுர் புத்தக பேரவை மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து தர்மபுரி அரசு கலைக்கல்லுரி மைதானத்தில் வரும் ஜுன் 24ஆம் தேதி தொடங்கி ஜூலை 4 வரை 11 நாட்கள் புத்தக திருவிழா நடைபெற உள்ளது.

இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் திவ்யர்ஷினி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆட்சியர் திவ்யதர்ஷினி கூறியதாவது: கைபேசியை விடு புத்தகத்தை எடு என்ற கருப்பொருளை மையமாக கொண்டு தர்மபுரி அரசுக் கலை கல்லூரி மைதானத்தில் வரும் ஜுன் 24ஆம் தேதி தொடங்கி ஜூலை 4 வரை 11 நாட்கள் மாபெரும் புத்தக திருவிழா நடைபெறும்.

புத்தகத்திருவிழாவை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் துவங்கி வைக்கிறார். இந்த புத்தக திருவிழாவில் தமிழகத்தின் முன்னணி பதிப்பாளர்கள், நூல் விற்பனையாளர்கள் பங்கேற்று இலக்கியம், வரலாறு, மானுடவியல், அரசியல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் புத்தகங்களும், சிறுவர்களுக்கான நூல்களும், முன்னணி எழுத்தாளர்களின் புனைவு இலக்கியங்களும், போட்டி தேர்வுகளுக்கான நூல்களையும் இடம்பெறும் என்று கூறினார்

இந்த புத்தகத்திருவிழா நாள்தோறும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும்.

நாள்தோறும் பகல் நேரத்தில், இலக்கிய அமைப்புகள் நடத்தும் கலந்துரையாடல்களும், இலக்கிய கூட்டங்களும் நடைபெறும்.

மாலை 6 மணி முதல் 8 மணி வரை முன்னணி எழுத்தாளர்கள், பல்துறை ஆளுமைகள், அறிவுசார் சான்றோர் ஆகியோரின் சொற்பொழிவு நிகழ்வுகளும் நடைபெற உள்ளன.

புத்தக திருவிழாவையொட்டி, மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லுரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான பேச்சுப்போட்டிகள், ஓவியப்போட்டிகள், கட்டுரைப்போட்டிகள் நடத்தப்பட உள்ளன. வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழும் வழங்கப்படும்.

Updated On: 28 April 2022 5:14 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...