/* */

தர்மபுரி செய்திகள்: பேரூராட்சி மன்ற கூட்டம் புறக்கணிப்பு, வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை

தர்மபுரி மாவட்ட இன்றைய செய்திகளின் தொகுப்பு

HIGHLIGHTS

தர்மபுரி செய்திகள்: பேரூராட்சி மன்ற கூட்டம் புறக்கணிப்பு, வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை
X

பேரூராட்சி கூட்டத்தை புறக்கணித்த உறுப்பினர்கள்

மாரண்டஅள்ளி பேரூராட்சி மன்ற கூட்டம் புறக்கணிப்பு: உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 5 கவுன்சிலர்கள்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சியில் மன்ற கூட்டம் பேரூராட்சி தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு செயல் அலுவலர் ஆயிஷா முன்னிலை வகித்தார். தலைமை கணக்கர் சம்பத் வரவு-செலவு குறித்த அறிக்கையை வாசித்தார்.

அதனை தெடர்ந்து வடிகால் வசதி, தெருவிளக்கு, குடிநீர் பராமரிப்பு, விளையாட்டு மைதானம், ஆடு அடிக்கும் தொட்டி, சுற்று சுவர், நீரேற்றும் மின் மோட்டார், சமுதாய கூட கட்டிடம் பராமரிப்பு, நான்கு ரோட்டில் உள்ள அரசுக்கு சொந்தமான சத்திரத்தை மீட்பது உள்ளிட்டவை தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன.

இதில் அரசு சத்திரம் மீட்பு மற்றும் துரியோதனன் படுகள இடத்தில் சமுதாய கூடம் கட்டும் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திகா பன்னீர் செல்வம் தலைமையில் சத்யா சிவகுமார், அபிராமி காந்தி, அனிதா ரமேஷ் ஆகியோர் கூட்டத்தை வெளிநடப்பு செய்து பேரூராட்சி அலுவலக வாயிலில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆளுங்கட்சியை சேர்ந்த பேரூராட்சி துணைத் தலைவர் உள்ளிட்டவர்கள் மன்ற கூட்டத்தை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தீயணைப்பு துறையினர் மாதிரி ஒத்திகை

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில், வடகிழக்கு பருவ மழை பேரிடர் கால முன்னெச்சரிக்கை தீ பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை மாதிரி குறித்து ஒத்திகை பயிற்சி நடந்தது.

தர்மபுரி மாவட்ட வருவாய் அலுவலர் கீதா ராணி தலைமையில் மாவட்ட தீயணைப்பு துறை சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை பயிற்சி நடத்தப்பட்டது.

பருவமழை காலங்களில் பொதுமக்களை காப்பாற்றவும், வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கவும் ரப்பர் படகு, உயர் கோபுர விளக்கு, மிதவை மற்றும் உடை, விபத்து ஏற்படும் பொழுது இரும்பு பொருட்களை வெட்டுவதற்கான நவீன இயந்திரம், ஹைட்ராலிக் முறையில் இயங்கும் கருவி, மிதவை பம்பு. வாகனங்களின் அடியில் சிக்கியர்வளை மீட்க உதவும் பொருட்களின் செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து தீ பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், உயர் மாடி கட்டடங்களில் மாடிப்படி வழியாக வரமுடியாத சமயத்தில் கயிறு மூலமாக மீட்பது, கூட்ட நெரிசலில் விழுந்தால் தற்காத்துக் கொள்வது, ஆடைகள் தீப்பற்றி கொண்டால் தற்காத்து கொள்வது தலை மற்றும் கைகால் பகுதிகளில் ஏற்படும் காயங்களுக்கு எவ்வாறு கட்டு போடுவது என்ற செயல் வழி விளக்கம் செய்து தீயணைப்பு வீரர்கள் மூலமாக செயல் விளக்கங்கள் மூலம் செய்து காண்பிக்கப்பட்டது.

Updated On: 17 Oct 2023 3:56 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...