/* */

அரூரில் 3 நகைக்கடைகளில் கொள்ளை முயற்சி: பூட்டை உடைக்கும் சிசிடிவி காட்சி

அரூரில் 3 நகைக்கடைகளில் பூட்டை உடைத்து முகமூடி திருடர்கள் கொள்ளையடிக்க முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

அரூரில் 3 நகைக்கடைகளில் கொள்ளை முயற்சி: பூட்டை உடைக்கும் சிசிடிவி காட்சி
X

நகைக்கடையின் பூட்டை உடைக்கும் மர்ம நபரின் சிசிடிவி காட்சி.

தருமபுரி மாவட்டம், அரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள கடைவீதி பஜாரில் நகைக்கடை, ஜவுளிக்கடை, தனியார் தங்க நகை கடன் வங்கிகள் என நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

இந்த நிலையில் நள்ளிரவு சுமார் ஒரு மணியளவில் 3 நகைக் கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்த மாறுவேடத்தில் வந்த முகமூடி கொள்ளையர்கள், ஞானவேல் என்பவருக்கு சொந்தமான ஒரு நகைக் கடையில் மட்டும் சட்டரின் பூட்டை உடைத்து அதில் இருந்த சுமார் ரூ. 2 இலட்சம் மதிப்பிலான இரண்டரை கிலோ வெள்ளி நகைகளை மட்டும் கொள்ளையடித்தனர்.

மேலும் லாக்கரை உடைக்க முயற்சித்த கொள்ளையர்கள் லாக்கரை உடைக்க முடியாததால் வெள்ளி நகைகளை மட்டும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். மீதமுள்ள இரண்டு கடைகளில் இருந்த சுமார் ஒரு கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் பறிபோகமல் காப்பாற்றப்பட்டன.

தகவலறிந்து வந்த காவல்துறையினர் சிசிடிவி கேமராவை சோதனை செய்தபோது இளைஞர் ஒருவர் முகத்தில் முககவசம் அணிந்து, தலையில் மங்கி குல்லா மற்றும் கைகளுக்கு கையுறை உள்ளிட்டவைகளை பயன்படுத்தி கொள்ளை அடிக்க முயற்சித்திருப்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த திருட்டு சம்பவத்தால் கடைவீதி பஜாரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Updated On: 3 April 2022 6:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பனை நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  2. அரசியல்
    சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட ரூ.4 கோடி தொடர்பான வழக்கு
  3. லைஃப்ஸ்டைல்
    இனிப்பு பெருஞ்சீரகம் செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    அப்பா ஒரு ஆழ்கடல்..! கன்னட மொழியில் அப்பா மேற்கோள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதலை ஆரத்தழுவி காலைப்பொழுதுக்கு ஒரு வணக்கம்..!
  6. திருப்பூர்
    போதைப் பொருள்களை ஒழிக்க மக்களின் போராட்டமே தீா்வு; இந்து முன்னணி...
  7. திருப்பூர்
    வெள்ளக்கோவில் நகராட்சி; ஒரே நாளில் ரூ.1 கோடி வரி வசூல் செய்து சாதனை
  8. லைஃப்ஸ்டைல்
    கொரோனா ஒன்றே போதும் செவிலியர் புகழ் பாட..!
  9. லைஃப்ஸ்டைல்
    6th wedding anniversary quotes- 6 வருட திருமண வாழ்க்கையின் வெற்றிக்கான...
  10. தூத்துக்குடி
    விரைவில் தூத்துக்குடி பாலக்காடு விரைவு ரயில் சேவை!