/* */

தருமபுரியில் 7 நாட்கள் வரலாற்று புகைப்படக் கண்காட்சி

தருமபுரியில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாழ்க்கை வரலாற்று புகைப்படக் கண்காட்சி மற்றும் பல்துறை பணிவிளக்க கண்காட்சி நடைபெறுகிறது.

HIGHLIGHTS

தருமபுரியில் 7 நாட்கள் வரலாற்று புகைப்படக் கண்காட்சி
X

பைல் படம்.

தருமபுரி மாவட்டத்தில் சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவையொட்டி சுதந்திர போராட்ட தியாகிகளின் வாழ்க்கை வரலாற்று புகைப்படக் கண்காட்சி மற்றும் பல்துறை பணிவிளக்க கண்காட்சி நடைபெறுகிறது.

தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வரும் 24.03.2022 முதல் 30.03.2022 வரை 7 நாட்கள் நடைபெற உள்ளது. இக்கண்காட்சியில் நாள்தோறும் வண்ணமிகு கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி வெளியிட்டுள்ள அறிக்கையில், தருமபுரி மாவட்டத்தில் 75-வது சுதந்திர தின விழா "சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா (Azadi Ka Amrit Mahotsav) செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாழ்க்கை வரலாற்று புகைப்படக் கண்காட்சி மற்றும் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த 20-க்கும் மேற்பட்ட அரங்குகள் கொண்ட பல்துறை பணிவிளக்க கண்காட்சி தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வருகின்ற 24.03.2022 வியாழக்கிழமை அன்று முதல் 30.03.2022 புதன்கிழமை வரை 7 நாட்கள் நடைபெற உள்ளது.

இக்கண்காட்சியில் இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட தேசத் தலைவர்கள், பல்வேறு சுதந்திர போராட்டங்களில் பங்கு கொண்ட சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் பல்வேறு சுதந்திர போராட்டங்களில் பங்குபெற்ற தருமபுரி மாவட்டதைச் சேர்ந்த அறிந்தும், அறியப்படாத தியாகிகளின் புகைப்படங்கள் அடங்கிய சுதந்திர போராட்ட தியாகிகளின் வாழ்க்கை வரலாற்று புகைப்படக் கண்காட்சி அமைக்கப்படுகின்றது.

மேலும், செய்தி மக்கள் தொடர்புத்துறை, காதி கிராப்ட், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, வேளாண்மைத் துறை, கூட்டுறவுத்துறை, பள்ளிக்கல்வித் துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண் பொறியியல் துறை, சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் தொழில்நெறி வழிகாட்டு மையம், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, உணவு பாதுகாப்புத்துறை, ஆவின், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் விளக்க கண்காட்சி அரங்குகள் அமைக்கப்படுகின்றது. இக்கண்காட்சி நடைபெற உள்ள 24.03.2022 வியாழக்கிழமை அன்று முதல் 30.03.2022 புதன்கிழமை வரை 7 நாட்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை, கல்லூரி கல்வி இயக்ககம், கலைப் பண்பாட்டுத்துறை சார்பில் வண்ணமிகு கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

எனவே தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வருகின்ற 24.03.2022 முதல் 30.03.2022 வரை 7 நாட்கள் நடைபெற உள்ள 75-வது சுதந்திர தின விழா "சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா" (Azadi Ka Amrit Mahotsav) சுதந்திர போராட்ட தியாகிகளின் வாழ்க்கை வரலாற்று புகைப்படக் கண்காட்சி மற்றும் பல்துறை பணிவிளக்க கண்காட்சி மற்றும் வண்ணமிகு கலைநிகழ்ச்சிகளை கண்டுகளித்திட தருமபுரி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள், பெரியோர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட அனைவரும் வருகைதருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி தெரிவித்துள்ளார்.

Updated On: 22 March 2022 2:39 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?