/* */

10.5 சதவீத இட ஒதுக்கீடு வழக்கு: தி.மு.க.விற்கு டாக்டர் ராமதாஸ் பாராட்டு

10.5 சதவீத இட ஒதுக்கீடு வழக்கை தமிழக அரசு சரியாக நடத்துகிறது என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தி.மு.க.வை பாராட்டினார்.

HIGHLIGHTS

10.5 சதவீத இட ஒதுக்கீடு வழக்கு: தி.மு.க.விற்கு டாக்டர் ராமதாஸ் பாராட்டு
X

கடலூரில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் பா.ம.க. ஆலோசனை கூட்டம் நடந்தது.

கடலூர் மாவட்ட பா.ம.க. ஒருங்கிணைந்த நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் கடலூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றுது. இதில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்,கட்சித்தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்க தலைவர் கு.தா அருள்மொழி ஆகியோர் பங்கேற்னர்.

கூட்டத்திற்கு தலைமை தாங்கி ராமதாஸ் பேசும்போது

நாம் யாருக்கு போராடி இட ஒதுக்கொடி பெற்று தந்தோமோ அவர்கள் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு கொடுக்க கூடாது என வழக்கு தொடர்ந்து இருக்கிறார்கள். ஆனால் தமிழக அரசு மேல் முறையீடு செய்து சரியாகவே செல்கிறது, நல்ல வழக்கறிஞர்களை கொண்டு வழக்கை நடத்திகொண்டே இருக்கிறார்கள். தீர்ப்புக்கான தடை உத்தரவு கிடைக்கும் என நிச்சயமாக நம்புகிறோம்.

நாம் தமிழ்நாட்டை ஆள வேண்டும், அன்புமணி முதல்வராக வேண்டும் என்ற எண்ணத்தோடு வீடு, வீடாக, திண்ணை திண்ணையாக இளைஞர்கள் சென்று பிரச்சாரம் செய்யவேண்டும். தமிழகத்தில் 60 இடங்களில் சுலபமாக வெற்றிபெற்றால் அன்புமணி ராமதாஸ் முதல்வராக ஆள முடியும்.

42 ஆண்டுகள் மக்களுக்காக பாடுபட்டு இருக்கிறேன். அன்புமணி போல ஒரு திறமையானவர் யாரும் இல்லை, ஏன் மக்கள் ஆட்சியை கொடுக்க தயங்குகிறார்கள் அனைவரும் வீடு வீடாக, சென்று வஞ்சகம் உள்ள கட்சிகளுக்கு வாக்கு போட்டு விட்டீர்கள் ஒரு முறை பா.ம.க.விற்கு வாக்கு சொலுத்துங்கள் என திண்ணை பிரச்சாரத்தை செய்யுங்கள்.

அதேபோல் சமூக வலைதளங்கள் மூலமும் பிரச்சாரம் செய்யுங்கள். அப்படி செய்யும் போது ஆட்சி கட்டிலை நோக்கி செல்ல முடியும். கோட்டையில் பா.ம.க. கொடி பறக்கும், அதை நோக்கி யூகங்கள், உழைப்புகள் இருக்க வேண்டும் அன்புமணியை கோட்டையில் அமர வைப்பது உங்கள் கையில் உள்ளது. அன்புமணியை கோட்டையில் அமர வைப்போம் என உறுதி ஏற்றுக்கொள்ளுங்கள் என்றார்

முந்திரி ஆலை ஊழியர் கோவிந்தராஜ் வழக்கை நான் கையில் எடுத்து இருக்கிறேன். நிச்சயமாக தவறு செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்கும், காவல்துறை சரியான நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்ற ராமதாஸ் சட்டமன்ற தேர்தலிலும் உள்ளாட்சி தேர்தலிலும் தோல்வியை தழுவியுள்ளது பா.ம.க. இதறக்கு காரணம் மாவட்ட செயலாளர்கள் தான்.உங்களால் முடியவில்லை என்றால் ஒர் மாடு மேய்ப்பவனிடம் 1 லட்சம் வாக்கு வாங்க முடியுமா என்று கேட்பேன் முடியும் என்றால் அவனையே மாவட்ட செயலாளராக போட்டுகொள்வேன் என மேலும் குறிப்பிட்டார்.

கூட்டத்தில் கடலூர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் முத்துகிருஷ்ணன் உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Updated On: 26 Nov 2021 3:53 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!