/* */

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 50 மாணவிகளுக்கு கொரோனா தொற்று

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 50 மாணவிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் விடுதி மூடப்பட்டது.

HIGHLIGHTS

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 50 மாணவிகளுக்கு கொரோனா தொற்று
X

மாணவிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக விடுதி மூடப்பட்டது.

கொரோனா மூன்றாம் அலை பரவ தொடங்கியுள்ள நிலையில் உருமாறிய ஓமைக்ரான் மற்றும் கொரானா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது.கடலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக 250க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் பல்வேறு விடுதிகள் உள்ளன. இதில் பல்லாயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் கல்லூரிகளுக்கு வருகிற 31ந் தேதி வரை விடுமுறை. அறிவிக்கப்பட்டது. இதனால் பெரும்பாலான மாணவர்கள் விடுதிகளை காலி செய்து விட்டு சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர்.

இந்நிலையில் பல்கலைக் கழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த துறை மாணவிகள் சில விடுதிகளில் தங்கி உள்ளனர். சிதம்பரம் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தாமரை இல்லம் விடுதியில் 200க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவிகள் தங்கி படித்து வந்த நிலையில் சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

கடந்த சில தினங்களில் அடுத்தடுத்து மருத்துவத் துறை படிப்பு சார்ந்த மாணவிகள் சுமார் 50 பேருக்கும் மேல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து மாணவிகள் தங்கியிருந்த தாமரை இல்லம் மூடப்பட்டது.

இங்கு தங்கியிருந்த மாணவிகள் சொந்த ஊர்களுக்கு திரும்பி செல்கின்றனர் மேலும் சில மாணவிகள் வேறு ஒரு விடுதிக்கு மாற்றப்பட்டு உள்ளனர். இதையடுத்து தாமரை இல்லம் விடுதியின் வாயில் மூடப்பட்டது.

மேலும் மருத்துவ கல்லூரிக்கு வருகிற 23ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது, மேலும் மருத்துவ கல்லூரி வளாகத்தில் அதிகளவில் மாணவர்களுக்கு தொற்று நோய் ஏற்பட்டது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 16 Jan 2022 6:16 AM GMT

Related News

Latest News

  1. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  2. வீடியோ
    Muslim என்று மோடி சொன்னாரா ? கொந்தளித்த இராம ஸ்ரீனிவாசன் !#muslim...
  3. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  4. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  5. கோவை மாநகர்
    விபத்தில் மரணமடைந்த பாஜக நிர்வாகி ; வானதி சீனிவாசன் அஞ்சலி
  6. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற டேங்கர் லாரி
  7. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  8. தமிழ்நாடு
    சதுப்பு நிலம் அடையாளம் காணும் பணி துவக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட்...
  9. காஞ்சிபுரம்
    சுடுகாடு எங்கே ? தேடி அலைந்த இருளர் குடியிருப்பு வாசிகள்!
  10. காஞ்சிபுரம்
    உள்துறை அமைச்சர் பதவிக்கு தகுதியற்றவர் ஸ்டாலின் - ஜெயக்குமார்!