/* */

தொண்டாமுத்தூர் அரசு மகளிர் பள்ளி மாணவிகள் சாதனை: டாக்டர் சிவக்குமார் பாராட்டு..!

தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற தொண்டாமுத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி சாதனை மாணவிகள் நிவேதா, அட்சயதேவி ஆகியோரை இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்றத் தலைவர் டாக்டர் சிவக்குமார் பாராட்டினார்.

HIGHLIGHTS

தொண்டாமுத்தூர் அரசு மகளிர் பள்ளி மாணவிகள் சாதனை: டாக்டர் சிவக்குமார் பாராட்டு..!
X
தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற கோவை, தொண்டாமுத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி சாதனை மாணவிகள் நிவேதா, அட்சய தேவி.

தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற தொண்டாமுத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி சாதனை மாணவிகள் நிவேதா, அட்சயதேவி ஆகியோருக்கு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்றம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசால் கல்வி உதவித்தொகைக்கான தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில், கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் நிவேதா, அட்சயதேவி ஆகியோர் பங்கேற்றனர். இதையடுத்து, இந்த தேர்வில் இரு மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். இதைத்தொடர்ந்து, போட்டித் தேர்வில் வெற்றி பெற்ற இரு மாணவிகளுக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியர் மாலா வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் காரணமாக இருந்து மாணவிகளுக்கு பயிற்றுவித்த அனைத்து ஆசிரியர்களுக்கும் தமது பாராட்டுகளை தலைமை ஆசிரியர் மாலா தெரிவித்தார். இனிவரும் வருடங்களில் போட்டி தேர்வுகளுக்கான பயிற்சிகளை மேம்படுத்தி இன்னும் சிறப்பான முறையில் மாணவர்களை பயிற்றுவிக்கப்படும் எனவும், அதிக அளவில் இந்த பள்ளியில் இருந்து மாணவர்களை வெற்றி பெறச் செய்யப்படும் எனவும், இதற்கான முயற்சிகள் பள்ளி ஆசிரியர்கள் ஒத்துழைப்புடன் எடுக்கப்படும் எனவும் தொண்டாமுத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மாலா குறிப்பிட்டார்.

இதையடுத்து, பாராட்டு நிகழ்வில், வெற்றி பெற்ற மாணவிகளுக்கும், ஆசிரியர்களுக்கும், தலைமையாசிரியருக்கும் தொண்டாமுத்தூர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்றத் தலைவர் டாக்டர் சிவக்குமார், செயலாளர் ஷைனி சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள் நெகிழ்ச்சியுடன் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Updated On: 4 July 2022 10:32 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தூக்கமின்மைக்குத் தீர்வளிக்கும் உணவுகள்
  2. லைஃப்ஸ்டைல்
    அனுபவ வயல்களின் அறுவடை, முதிர்ச்சி..!
  3. ஆன்மீகம்
    அளவற்ற அன்பை அள்ளித் தருபவர் நபிகள் நாயகம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடிய முத்துராமலிங்க தேவர்..!
  5. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!
  6. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  7. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  8. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  9. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  10. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?