/* */

சிறுமுகை லிங்காபுரம் பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ள பாகுபலி யானை: மக்கள் அச்சம்

பாகுபலி என பொதுமக்களால் அழைக்கப்பட்டு வந்த இந்த யானை இதுவரை மனிதர்களை தாக்கியதில்லை என கூறப்படுகிறது

HIGHLIGHTS

சிறுமுகை லிங்காபுரம் பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ள  பாகுபலி  யானை: மக்கள் அச்சம்
X

மாதிரி படம்

கோவை : சிறுமுகை லிங்காபுரம் பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ள " பாகுபலி " யானையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளான ஓடந்துறை, ஊமப்பாளையம், நெல்லித்துறை உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்களில் புகுந்து ஒற்றை காட்டு யானை விவசாய நிலங்களில் சாகுபடி செய்த பயிர்களை நாசப்படுத்தியோடு மனிதர்களையும் அச்சுறுத்தி வந்தது." பாகுபலி " என பொதுமக்களால் செல்லமாக அழைக்கப்பட்டு வந்த இந்த யானை இதுவரை மனிதர்களை தாக்கியதில்லை.

இந்த நிலையில் இந்த யானையினை பிடித்து அடர் வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்ற வனத்துறை இந்த யானையினை பிடித்து அதன் கழுத்தில் ரேடியோ காலர் பொருத்தி அதன் நடவடிக்கையினை தீவிரமாக கண்காணிக்கும் வகையில் ஆபரேஷன் பாகுபலி என்ற திட்டத்தை கையில் எடுத்தது.

இதற்காக ஆனைமலை கோழிகமுத்தி முகாமில் இருந்து 3 கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டு பாகுபலியினை பிடிக்க முயற்சி மேற்கொண்டது வனத்துறை.ஆனால்,வனத்துறையினரின் கண்களில் சிக்காமல் போக்கு காட்டி வந்த பாகுபலி ஒரு கட்டத்தில் அதுவே அடர்வனப்பகுதிக்குள் சென்றதால் வனத்துறை அத்திட்டத்தை கைவிட்டது.

இந்நிலையில் கடந்த பல மாதங்களாகவே பாகுபலியின் நடமாட்டம் தென்படாமல் இருந்து வந்த நிலையில் சில நாட்களாகவே மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட சமயபுரம்,குரும்பனூர்,தாசம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் ஊருக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்துவதோடு மனிதர்களையும் அச்சுறுத்தி வருகிறது. மேலும்,வனத்துறையினரின் தொடர் முயற்சியால் தற்போது பாகுபலி மேட்டுப்பாளையம் வனப்பகுதியை விட்டு வெளியேறி தற்போது தற்போது சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட லிங்காபுரம் பகுதியில் முகாமிட்டுள்ளது. இதனால் விவசாயிகளும்,பொதுமக்களும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Updated On: 14 May 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  2. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  3. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  4. வீடியோ
    ஜின்னாவின் பிளவு மனப்பான்மையில் பயணிக்கும்...
  5. தொழில்நுட்பம்
    எச்.எம்.டி பல்ஸ்: சுயமாக சரிசெய்யும் ஸ்மார்ட்போன்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  7. ஈரோடு
    தாளவாடி அருகே வனத்துறை வைத்த கூண்டில் சிக்கிய ஆண் சிறுத்தை
  8. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா
  9. சினிமா
    உண்டா: யதார்த்தத்தின் அழுத்தமான பிரதிபலிப்பு!
  10. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...