/* */

குடிபோதையில் தகராறு செய்த மகனை கத்தியால் குத்தி கொன்ற தந்தை கைது

கோவை அருகே குடிபோதையில் தகராறு செய்த மகனை கத்தியால் குத்தி கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

குடிபோதையில் தகராறு செய்த மகனை கத்தியால் குத்தி கொன்ற தந்தை கைது
X

கைது செய்யப்பட்ட மாயன்

கோவை பேரூர் அருகேயுள்ள கரடிமடை பகுதியைச் சேர்ந்தவர் மாயன் (வயது45). இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி முத்தம்மாள் கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு முகேஷ் (21), முத்துக்குமார் (19) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று மாயன் மாலை ஆடு மேய்த்து விட்டு வீட்டிற்கு வந்து உள்ளார். இரவு சுமார் 8.30 மணிக்கு மாயன் அவரது மனைவி முத்தம்மாள் இரண்டாவது மகன் முத்துக்குமார் ஆகியோர் வீட்டில் இருந்து உள்ளனர்.

அப்போது மாயன் முட்டை வறுத்துக் கொண்டு இருந்த போது, மூத்த மகன் முகேஷ் குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் வெளியே இருந்த செம்பை எடுத்து மாயனின் தலையில் ஓங்கி அடித்து உள்ளார். அதில் தந்தை மகன் இருவருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த மாயன் தனது மகனை தாக்கி உள்ளார்.

மனைவி முத்தம்மாள் இருவரையும் தடுத்து உள்ளார். பின்னர் மனைவி முத்தம்மாள் வெங்காயம் வெட்ட வைத்து இருந்த சிறிய கத்தியால் மாயன் தனது மகன் முகேஷ் இடது கழுத்தில் மற்றும் முதுகு, கால் பகுதியில் குத்தி உள்ளார். வலி தாங்க முடியாமல் மகன் கீழே விழுந்து துடித்து உள்ளார். பின்னர் இரண்டு சக்கர வாகனத்தில் அவரது தம்பி முத்துக்குமார் தனது நண்பர்களுடன் சிகிச்சைக்காக தொண்டாமுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொண்டு சென்று அனுமதித்தனர். இந்நிலையில் இன்று சிகிச்சை பலன் அளிக்காமல் முகேஷ் உயிரிழந்தார். இதை அடுத்து கத்தியால் குத்திய தந்தை மாயனை போலீசார் கைது செய்தனர்.

Updated On: 25 April 2024 9:02 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    இந்தியாவின் சூப்பர்சானிக் டர்பீடோக்கள்..! கதறும் சீனா, அலறும்...
  2. சினிமா
    பாடல்களுக்கு ராயல்டி! பணத்தாசை பிடித்தவரா இளையராஜா?
  3. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் கைது : மக்கள் என்ன சொல்றாங்க தெரியுமா..?
  4. தமிழ்நாடு
    வறட்சியின் பாதிப்பு :உயிரிழக்கும் கால்நடைகள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    வாங்க டீ சாப்பிடலாம்..! அன்பின் உபசரிப்பு..!
  6. நாமக்கல்
    களங்காணி அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள்; 25 ஆண்டுக்கு பின்...
  7. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  8. நாமக்கல்
    ப.வேலூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு: முன்னாள் அமைச்சர்...
  9. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்