/* */

கோவையில் பள்ளி படிப்பை பாதியில் விட்ட மாணவர்களுக்கு கவுன்சிலிங்

கோவை மாநகரில் 286 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆய்வு செய்யப்பட்டதில் 894 மாணவ-மாணவிகள் தங்களது படிப்பை பாதியில் கைவிட்டது தெரியவந்தது.

HIGHLIGHTS

கோவையில் பள்ளி படிப்பை பாதியில் விட்ட மாணவர்களுக்கு கவுன்சிலிங்
X

கோப்புப்படம்

கோவை மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளில் படித்து பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக பள்ளி படிப்பை பாதியில் விட்டு இடைநின்ற மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மாணவர்களுக்கு தேவையான மருத்துவ வசதி, கல்வி உள்ளிட்ட அடிப்படை உதவிகள் குறித்து மாநகர காவல் துறையின் தனி சிறுவர் காவல் உதவி பிரிவு, சட்டம் ஒழுங்கு பிரிவு ஆகியவை ஒருங்கிணைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கோவை மாநகரில் 286 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆய்வு செய்யப்பட்டதில் 894 மாணவ-மாணவிகள் தங்களது படிப்பை பாதியில் கைவிட்டது தெரியவந்தது. இதில், 226 மாணவர்களை சம்பந்தப்பட்ட காவல்துறையினர் நேரில் சந்தித்து படிப்பை பாதியில் விட்டதற்கான காரணம் குறித்து கேட்டறிந்தனர். தொடர்ந்து அவர்களுக்கு தகுந்த கவுன்சிலிங் வழங்கப்பட்டது.

இதில், 91 மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு செல்ல தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இவர்கள் நடந்து முடிந்த முழு ஆண்டு தேர்வையும் எழுதினர். இதில் 12 பேருக்கு பள்ளி கட்டண உதவியும், 4 பேருக்கு மருத்துவ உதவியும் தன்னார்வ அமைப்புகள் மூலம் வழங்கப்பட்டன.

கோவை மாநகரில் 702 மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் உள்ளது கண்டறியப்பட்டது. இவர்களில் 316 பேரை கடந்த மார்ச் 1-ந் தேதி முதல் கடந்த 10-ந் தேதி வரை நேரில் சந்தித்து அவர்களின் குறைகள் குறித்து கேட்டறிந்தனர். இதில் 43 பேருக்கு பள்ளி கட்டணம், 5 பேருக்கு மருத்துவ உதவி செய்யப்பட்டதுடன், 2 பேரின் பெற்றோருக்கு வேலை வாய்ப்பும் வழங்கப்பட்டது.

இதுதவிர குழந்தைகள் பாதுகாப்பு, இணைய வழி குற்றங்கள் குறித்து பள்ளிகளுக்கு நேரடியாக சென்று காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதுதவிர கொலை குற்ற வழக்குகள், சாலை விபத்து வழக்குகள், போக்சோ வழக்குகள், குடும்ப பிரச்சினைகள் உள்ளிட்டவற்றில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களது குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கும் கடந்த 2022-ம் ஆண்டு முதல் மனநல ஆலோசகர்கள் உதவியுடன் 131 பேருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

Updated On: 14 May 2023 7:03 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    ஸ்டாலின் கைது செய்யப்படுவார்: கெஜ்ரிவால் திடீர் கண்டு பிடிப்பு
  2. வீடியோ
    மூன்று வருட திமுக ஆட்சி நிறைவு | சவுக்கு சங்கர் கைது | மக்களின் மனநிலை...
  3. இந்தியா
    4ம் கட்டமாக 96 நாடாளுமன்ற தொகுதி, ஆந்திர சட்டசபைக்கு நாளை தேர்தல்
  4. கல்வி
    கல்லூரி சேர்க்கையில் வெளிமாநில மாணவர்களால் பாதிப்பா?
  5. நாமக்கல்
    நீர்நிலைகளை மறைத்து சிப்காட்: தடுப்பு அணையில் நின்று விவசாயிகள்...
  6. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. லைஃப்ஸ்டைல்
    மனம் விட்டுப் பேசு... மனமே லேசு!
  10. லைஃப்ஸ்டைல்
    உங்கள் மனைவியுடன் சண்டையிட்ட பிறகு சமாதானம் செய்வது எப்படி?