/* */

பிற கட்சியினர் பாஜக கொள்கைகளை பிடித்து இணைகின்றனர் : வானதி சீனிவாசன்

Coimbatore News- கட்சி கொள்கைகளை பிடித்து விட்டதால், உன்னதமான உணர்வோடு இணைகின்றனர் என்று வானதி சீனிவாசன் கூறினார்.

HIGHLIGHTS

பிற கட்சியினர் பாஜக கொள்கைகளை பிடித்து இணைகின்றனர் : வானதி சீனிவாசன்
X

Coimbatore News- வானதி சீனிவாசன்

Coimbatore News, Coimbatore News Today- நாடு முழுவதும் ரயில் நிலையங்களை மேம்படுத்தும் திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.

இதன் ஒரு பகுதியாக கோவை வடகோவை ரயில் நிலையத்தில் நடைபெற்ற விழாவில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.

விழாவில் வானதி சீனிவாசன் பேசும் முன்பாக "பாரத் மாதாகீ ஜே" என்றார். பதிலுக்கு பெரிய சப்தம் வராத நிலையில், விழாவில் பங்கு பெற்ற மாணவ, மாணவிகளை பார்த்து சத்தம் வரவில்லை. எல்லாரும் சொல்லுங்கள் என வலியுறுத்தினர். அவர்கள் பாரத் மாதாகீ ஜே என்று சொன்னவுடன் பேச்சை துவங்கினார்.

இதனைதொடர்ந்து செய்தியாளர்களுக்கு வானதி சீனிவாசன் பேட்டியளித்தார். அப்போது பிரதமர் உரையில் இருந்த அம்சங்களை குறிப்பிட்டு பேசினார். தொடர்ந்து பேசிய அவர், “கோவை வடக்கு ரயில் நிலைய மேம்பாடு மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்தது. அது நிறைவேற துவக்கி உள்ளது. இங்கே உட்காரும் வசதி, லிப்ட் வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் என 12 கோடி மதிப்பீட்டில் வசதிகள் செய்யப்படுகிறது. இதனால் நெருக்கடிகள் குறைக்கப்படும். நீண்ட காலமாக இருந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு இருப்பதற்கு நன்றி. என்னென்ன அடிப்படை வசதிகள் தேவைபடுகின்றதோ அது தொடர்பாக ரயில்வே நிர்வாகத்திடம் வலியுறுத்தப்படும். ராணிகமலாவதி ரயில் நிலையம் போல கோவை ரயில் நிலையம் மேம்படுத்தப்படும்” எனத் தெரிவித்தார்.

கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகம் தொடர்பாக ஐ.எஸ்.ஓ சான்றிதழ் சர்ச்சைக்குள்ளானது தொடர்பாக எழுப்பபட்ட கேள்விக்கு, நானும் அதை பார்த்தேன். எந்த ஐஎஸ்ஓ நிறுவனம் தகுதியாக இருக்கின்றதோ அந்த நிறுவனத்தை எனது அலுவலகத்திற்கு அனுப்புங்கள்” எனப் பதிலளித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “ரயில் நிலையங்களில் ஒவ்வொரு கட்டமாக பணிகளை செய்து கொண்டு இருக்கிறோம். இதனை தேர்தலுக்காக செய்யவில்லை. பா.ஜ.கவில் பிற அரசியல் கட்சியினர் இணைவதற்கு பின்னணியில் பண பேரம் நடைபெறுவதாக கூறப்படுகின்றது என்பதை மறுத்தார். கட்சி கொள்கைகளை பிடித்து, உன்னதமான உணர்வோடு இணைகின்றனர். இதை பொறுக்க முடியாமல் பணபேரம் என்கின்றனர். மற்ற கட்சியினரை இழுக்குறோம் என்றால் அவர்கள் விருப்பம் இல்லை என்றால் வர முடியாதே?

அடுத்து பா.ஜ.க ஆட்சிதான் அமைகின்றது என்பதை உணர்த்து இருக்கின்றனர். இதில் இணைந்தால் அரசியல் லட்சியங்களை நிறைவேற முடியும் என்பதால் இணைகின்றனர். காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்த விஜயதாரணிக்கு உழைப்பு, திறமை அடிப்படையில் அங்கீகாரம் கிடைக்கும். மக்கள் பிரதிநிதியாக இருந்து மன அழுத்தம், உட்கட்சி பிரச்சினை போன்ற காரணங்கள் இங்கே வந்திருக்கலாம். பா.ஜ.கவை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தாலும், நாளை பா.ஜ.கவில் இணைந்தால் தேசியத்திற்காக இணைத்து பணியாற்றுவோம். தேர்தல் தொடர்பாக கட்சி என்ன முடிவு எடுக்கின்றதோ அதற்கு உடன்படுவேன். வானதி சீனிவாசன் போட்டியிடுகின்றாரா இல்லையா என்பதற்குள் போகவில்லை.

மோடி வருகையால் பா.ஜ.கவினர் பயங்கர உற்சாகத்துடன் இருக்கின்றனர். இப்பவே கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வர துவங்கி விட்டனர். பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு கொடி, பலூன் காட்டியவர்கள் இன்று வரவேற்பு தெரிவித்து கொண்டு இருக்கின்றனர். மதுரை எய்ம்ஸ் குறித்த கேள்விக்கு பல முறை பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர்கள் பதில் சொல்லி இருக்கின்றோம். ஒரு செங்கல்லை வைத்து 3 வருடமாக சுற்றி கொண்டு இருந்தவர்கள் ஏன் எய்ம்ஸ்க்கு எதுவும் செய்யவில்லை?’ எனத் தெரிவித்தார்.

Updated On: 26 Feb 2024 9:45 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. சேலம்
    மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிப்பு
  3. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிவு
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. கலசப்பாக்கம்
    கலசப்பாக்கத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு
  8. கோவை மாநகர்
    கோவை நகரில் நள்ளிரவு பெய்த மிதமான மழை: மின்னல் தாக்கி தீப்பிடித்த...
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 89.25 சதவீத மாணவர்கள் தேர்ச்சி