/* */

முதலில் இந்தியை திணித்தார்கள், இப்போது இந்திக்காரனை திணிக்கிறார்கள் : சீமான் குற்றச்சாட்டு

Coimbatore News- பாராளுமன்றத்தில் ஆங்கிலம், சமஸ்கிருதம் இந்தி மொழியில் கல்வெட்டு இருக்கும் பொழுது, மூத்த மொழி தமிழில் ஏன் கல்வெட்டு இல்லை என கோவையில் சீமான் கேள்வி எழுப்பினார்.

HIGHLIGHTS

முதலில் இந்தியை திணித்தார்கள், இப்போது இந்திக்காரனை திணிக்கிறார்கள் : சீமான் குற்றச்சாட்டு
X

Coimbatore News- கோவையில் சீமான் வாக்கு சேகரிப்பு

Coimbatore News, Coimbatore News Today- கோவை கணபதி பகுதியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், “பத்தாண்டு கால பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் ஒரு நல்ல திட்டம் கூட கொண்டு வரவில்லை. சர்க்கஸ்காரர்கள் போயிட்டு வருவதை போல ரோட்ஷோ நடத்துகின்றனர். இவ்வளவு சாதனைகள், பயன் தருகின்ற திட்டங்களை கொடுத்திருக்கிறோம் என்று ஒரு திட்டத்தை பா.ஜ.கவினரால் சொல்ல முடியாது. கடந்த 10 ஆண்டுகளில் என்ன நடந்தது? ஒரே இரவில் பணம் செல்லாது என்று சொன்னார்கள். ஊழல், லஞ்சம், கருப்பு பணம், பயங்கரவாதம் ஓழியும் என்றார்கள், ஆனால் எதுவும் நடக்கவில்லை. தேர்தல் பத்திரத்தில் ஆறாயிரம் கோடிக்கு மேல் பணம் வாங்கிய ஊழல் பெருத்த கட்சி பாஜக ஆட்சி. அமலாக்கத்துறை சோதனை நடந்த முதலாளிகள் வீடுகளில் எல்லாம் பணம் வாங்கி இருக்கிறார்கள்

தேர்தல் பத்திரத்தில் 6000 கோடி பணம் வாங்கியது குறித்து இங்கு போட்டியிடும் நேர்மையாளரின் கருத்து என்ன? தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து, ஆட்சி அமைத்துக் கொடுத்தது பாஜக கட்சி. இவர்கள் ஊழலை ஒழிப்பதாக நேர்மை பேசுவார்கள். என்னைப் போன்று தனியாக கட்சி துவங்கி ஆண்மகனாக நின்று காட்டு. மோடியின் நிழலில் நின்று ஆடுகிறாய். மாநில தலைவர் பதவியில் இருந்து தூக்கிப் போட்டால் உன்னை எவரும் மதிக்க மாட்டார்கள். பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசைக்கு இருக்கும் மரியாதை கூட உனக்கு இருக்காது. ஓட்டுக்கு காசு குடுக்க மாட்டேன் என்றால் நான்கு கோடி ரூபாயை ரயிலில் கொண்டு போனது யார்?

மோடியை பார்த்து அரசியல் செய்ய வந்திருக்கிறாய். நான் பிரபாகரனை பார்த்து வந்தவன். ஐந்து வயதில் இருந்து அரசியல் களத்தில் இருப்பவன். சிவகங்கையில் ஐந்து வயது சிறுவனாக கம்யூனிஸ்ட் கொடி எடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திக்கு முற்றுகைக்கு போனவன் நான்.

இஸ்லாமியர்களை எதிர்ப்பதை தவிர அந்த கட்சிக்கு ஏதாவது ஒரு கோட்பாடு இருக்கிறதா? புதிதாக கட்டி எழுப்பப்பட்ட பாராளுமன்றத்தில் ஆங்கிலம், சமஸ்கிருதம் இந்தி மொழியில் கல்வெட்டு இருக்கும் பொழுது, மூத்த மொழி தமிழில் ஏன் கல்வெட்டு இல்லை.

பணம் செல்லாது என்பதும், ஜிஎஸ்டியும் தான் நாட்டின் வீழ்ச்சிக்கு தள்ளியது. வளரும் நாடுகளின் பட்டியலிலேயே இந்தியா இல்லை. ஓட்டை எண்ணுவதற்கு 44 நாட்கள் ஏன் ஆகிறது? ஸ்மார்ட் சிட்டிகளில் சாலை போடப்பட்டு இருக்கிறதா? தண்ணீர், கல்வி தரம் எல்லாம் உயர்ந்திருக்கிறதா? ஏன் ஸ்மார்ட் வில்லேஜ் வரமாட்டேன் என்கிறது. ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் ஸ்ரீ ராம் என்று எல்லாத்தையும் சொன்னால் போதுமா? எனக்கு ஓட்டு போடு, போடாதே. ஆனால் இவர்களுக்கு ஓட்டு போட்டு விடாதீர்கள். இந்த நச்சு செடியை நம் நாட்டில் வளர விட்டு விடாதீர்கள். அவன் வந்தால் ஒன்றரை கோடி ஹிந்தி காரன் வந்து விடுவான். இந்த நாட்டின் அரசியலை அவன் தீர்மானிப்பான். முதலில் இந்தியை திணித்தார்கள். இப்போது இந்திக்காரனை திணிக்கிறார்கள். திமுக எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது இந்தி தெரியாதுபோடா என்பார்கள் கோபேக் மோடி என்பார்கள். ஆட்சிக்கு வந்து விட்டால் எதுவும் பேச மாட்டார்கள்

திராவிட திருடர்களிடம் நாட்டை கொடுத்துவிட்டு 1000 ,500 ரூபாய்க்கு ஓட்டை போட்டால், சோடா சோடா ஹே, படாஹே என்று உன்னை மொத்தமாக முடித்து விடுவார்கள். நாடு தான் தமிழ்நாடு இருக்கும் அதிகாரம் உனக்கானது அல்ல. கச்சத்தீவு மீட்பு அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். அருணாச்சலப் பிரதேசத்தில் 11 மாவட்டத்திற்கு சைனீஸ் பெயர் வைத்திருக்கிறானே? அதைப் பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன. அவன் உண்மையான ராணுவம் வைத்திருக்கின்றான். இஸ்லாமியர்கள் கிறித்தவர்களுக்கு எதிராக பேசுவது கோட்பாடு இல்லை. மதம் கடந்து மனிதன் பேசுவது தான் அரசியல். கோயம்புத்தூரில் பிஜேபி தாங்க, கன்னிநாகுமரில் பிஜேபிதாங்க என்பவர்கள் ஓட்டு போட்டதற்காக தலைகுனிய போகின்றீர்கள். இரண்டு பேர் நாட்டை விற்கின்றனர் இரண்டு பேர் நாட்டை வாங்குகின்றனர் நான்கு பேருமே குஜராத்திகள்.

அண்ணாமலை தமிழ்நாட்டு ஒட்டுமொத்த ரவுடிகளையும் பிடித்து ஜெயிலில் போடுவதற்கு பதிலாக கட்சியில் சேர்த்து இருக்கிறார். இரண்டு பேரும் அயோத்தி கோவிலுக்கு சென்று சத்தியம் போடுவோம். ஓட்டுக்கு ஒரு ரூபாய் கூட செலவு செய்ய மாட்டேன் என சத்தியம் செய்வோம். சீமானின் சின்னத்தை எடுத்ததற்கும் எனக்கும் சம்மந்தமில்லை என ஒரு சத்தியம். இந்த தேர்தலில் விழிப்புணர்வுடன் இருங்கள். சாதி, மதத்தை காப்பாற்றி எதை சாதிக்க போகிறீர்கள்? மண்ணையும் மக்களையும் காப்பாற்ற ஒரு துளி சிந்தியுங்கள். வலி தாங்கி நிக்கும் பிள்ளைகளுக்கு இந்த ஒலி வாங்கி சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Updated On: 9 April 2024 4:00 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  7. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு