/* */

திருவொற்றியூர் குடியிருப்போர் நல சங்கத்தில் 22 லட்சம் முறைகேடு

முறைகேடு தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு விசாரணை நடத்திட நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது

HIGHLIGHTS

திருவொற்றியூர் குடியிருப்போர் நல சங்கத்தில் 22 லட்சம் முறைகேடு
X

பைல் படம்

திருவொற்றியூர் குடியிருப்போர் நல சங்கத்தில் ரூ. 22 லட்சம் முறைகேடு தொடர்பாக வழக்கு பதிவு விசாரணை நடத்திட நீதிமன்றம் உத்தரவு

சென்னை திருவொற்றியூரில் குடியிருப்போர் நல சங்கத்தில் ரூ. 22 லட்சம் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறப்பட்ட புகாரில் உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திட திருவொற்றியூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருவொற்றியூர் அஜாக்ஸ் பேருந்து நிலையம் எதிரே ஹன்சா கோர்ட் யார்டு அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இங்கு 265 வீடுகள் அமைந்துள்ளன. இங்கு குடியிருப்போர் நல சங்கம் அமைக்கப்பட்டு ஒவ்வொரு வீட்டின் உரிமையாள ரிடமிருந்தும் மாதந்தோறும் பராமரிப்பு பணிகளுக்காக சந்தா செலுத்துகின்றனர்.

இந்நிலையில் கட்டடங்களை புதுப்பித்து வர்ணம் பூசுதல், பாதாள சாக்கடை இணைப்பு, குடிநீர் உள்ளிட்டவைகளுக்காக ஒவ்வொரு வீட்டு உரிமையாளரிடமிருந்தும் தலா ரூ.55 ஆயிரம் ரூ. 1.30 கோடி சில ஆண்டுகளுக்கு முன்பு வசூலிக்கப்பட்டதாகவும், இதில் ரூ. 22 லட்சம் நிதியை நல சங்க நிர்வாகிகளாக செயல்பட்டு வந்த இளங்கோ, கருப்பையா, மகேஸ் ஆகிய மூன்று பேர் முறைகேடு செய்துவிட்டனர். இவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி திருவொற்றியூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குடியிருப்போர் நல சங்க உறுப்பினர்கள் எஸ்.சுகுமார், எம்.டி.சேகர் ஆகியோர் வழக்குத் தொடர்ந்தனர்.

இது குறித்து விசாரணை நடத்திய குற்றவியல் நடுவர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் சரவணக்குமார் வழக்கில் முறைகேடு நடைபெற்றிருப்பதற்கான முகாந்திரம் இருப்பதால், இது குறித்து உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என திருவொற்றியூர் காவல் நிலைய போலீஸாருக்கு புதன்கிழமை உத்தரவிட்டார். இதனையடுத்து திருவொற்றியூர் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 3 Jun 2023 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  2. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...
  3. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  4. வீடியோ
    கொள்ளையடிக்க திட்டமிடும் Congress ! பாஜக நடக்கவிடாது !#congress #bjp...
  5. வீடியோ
    ஆந்திராவில் ஆரம்பித்த நில புரட்சி பூதானம் பஞ்சமி போன்றது !#Rsrinivasan...
  6. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  7. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  8. தொழில்நுட்பம்
    Realme C65 5G புதிய பட்ஜெட் போன்... சக்தி அதிகமா?
  9. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
  10. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்