மாமியாரின் கள்ளக்காதலனை வெட்டிய மருமகன் கைது

மாமியாரின் கள்ளக்காதலனான ஆட்டோ டிரைவரை வெட்டி விவகாரத்தில் மருமகன் மற்றும் நண்பர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
மாமியாரின் கள்ளக்காதலனை வெட்டிய மருமகன் கைது
X

பைல் படம்

சென்னை புளியந்தோப்பு கே எம் கார்டன 13வது தெருவைச் சேர்ந்தவர் மணிவண்ணன். இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். இன்று காலை 7 மணி அளவில் புளியந்தோப்பு கே எம் காலனி 13வது தெருவில் ஆட்டோ ஓட்டி கொண்டு வரும்போது இரண்டு நபர்கள் வழிமறித்து மணிவண்ணனை சரமாரியாக வெட்டினர்.

இதில் ரத்த வெள்ளத்தில் மணிவண்ணன் சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலை வலது தோள்பட்டை மார்பு உள்ளிட்ட இடங்களில் பலத்த காயமடைந்த மணிவண்ணன் அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்

இது குறித்து வழக்குப்பதிவு செய்த புளியந்தோப்பு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் புளியந்தோப்பு சூளை தட்டாங்குளம் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் வயது 23 என்ற நபரின் மாமியார் ஈஸ்வரி.

மணிவண்ணன் இருக்கும் அதே பகுதியில் வசித்து வருவதாகவும் மணிவண்ணன் அடிக்கடி தனது மாமியார் வீட்டிற்கு சென்று வருவாராம். இதனால் இருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனை பலமுறை பிரகாஷ் கண்டித்தும் மணிவண்ணன் தொடர்ந்து பிரகாஷின் மாமியாருடன் பழகி வந்தார். இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ் இன்று காலை தனது நண்பர் சரத் சந்திரன் என்பவருடன் சேர்ந்து மணிவண்ணனை வெட்டியதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரகாஷ் மற்றும் சரத் சந்திரன் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 24 Nov 2021 3:04 PM GMT

Related News

Latest News

 1. கோவை மாநகர்
  சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட முயன்ற இருவர் கைது
 2. கோவை மாநகர்
  வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் குழந்தை உயிரிழப்பு: தாய் மீது...
 3. வழிகாட்டி
  பிப்ரவரியில் குரூப் 2, மார்ச்சில் குரூப்-4 தேர்வு: டிஎன்பிஎஸ்சி...
 4. தென்காசி
  ஆரியங்காவு அருகே நிலச்சரிவு: கேரளாவுக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து
 5. ஈரோடு
  சத்தி: உடும்பை வேட்டையாடி சமைத்த 2 வாலிபர்கள் கைது
 6. திருநெல்வேலி
  அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் போட்டியின்றி தேர்வு: நெல்லை அதிமுகவினர்...
 7. நாகப்பட்டினம்
  ஓ.பி.எஸ், இ.பி.எஸ். தேர்வு: நாகையில் இனிப்பு வழங்கிய அ.தி.மு.க.வினர்
 8. ஈரோடு
  நம்பியூர் மின்வாரிய ஊழியர் வீட்டில் ரூ.70 ஆயிரம் திருட்டு
 9. சங்கரன்கோவில்
  சங்கரன்கோவிலில் குண்டும் குழியுமான சாலைகள்: போலீசாருடன் சரி செய்த...
 10. சேலம் மாநகர்
  சேலத்தில் களைகட்டும் ஒட்டகப்பால் டீ விற்பனை: அசத்தும் இளைஞர்கள்