/* */

சென்னை விமானத்தில் தங்கம் கடத்தல் : வசமாய் பிடிப்பட்ட பெண் பயணிகள்

சென்னைக்கு வந்த விமானத்தில் தங்கம் கடத்தி வந்த பெண் பயணிகள் பிடிப்பட்டனர். அவர்களை கைது செய்து தங்கத்தை சுங்கத்துறையினர் கைப்பற்றினர்.

HIGHLIGHTS

சென்னை விமானத்தில் தங்கம் கடத்தல் : வசமாய் பிடிப்பட்ட பெண் பயணிகள்
X

விமானத்தில் தங்கம் கடத்திய 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னைக்கு குவைத், சார்ஜா,இலங்கையிலிருந்து விமானங்களில் கடத்தி வரப்பட்ட ரூ.48 லட்சம் மதிப்புடைய 1.1 கிலோ தங்கத்தை சென்னை விமானநிலையத்தில் சுங்கத்துறை பறிமுதல் செய்து,2 பெண்கள் உட்பட 3 பயணிகளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சா்வதேச விமான நிலையத்திற்கு குவைத்தில் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் இன்று அதிகாலை வந்தது.அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்கத்துறையினா் கண்காணித்தனர். அப்போது தன்னிடம் சுங்கத்தீா்வை செலுத்தும் பொருட்கள் இல்லை என்று கூறி, வெளியே செல்ல முயன்ற சென்னையை சோ்ந்த 32 வயது பெண் பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது.

அவரை நிறுத்தி,பெண் சுங்கத்துறையினா் தனி அறைக்கு அழைத்து சென்று சோதனையிட்டனா். அப்போது அவா் தன்னிடம் கவரிங் நகைகள் இருப்பதாக எடுத்து காட்டினாா். இதனால் சந்தேகம் கொண்ட அதிகாரிகள் சோதனை செய்ததில் அவைகள் தங்க நகைகள் என்று தெரியவந்தது. ரூ. 19.5 லட்சம் மதிப்புடைய 470 கிராம் தங்க நகைகளை கைப்பற்றினார்கள்.அதோடு பெண் பயணியை கைது செய்தனா்.

இதையடுத்து சார்ஜாவில் இருந்து ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இன்று அதிகாலை சென்னை சா்வதேச விமானநிலையம் வந்தது.அதில் வந்த பயணிகளை சோதனை செய்தபோது, கடலூரை சோ்ந்த 35 வயது பெண் பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது.

அந்த பெண் பயணி உடமைகளில், பெண்கள் தலைக்கு அணியும் ஹெர் பேண்ட்,ஸ்லைடு போன்றவைகள் தங்கத்தில் செய்து நிக்கல் முலாம் பூசியிருந்ததை கண்டுப்பிடித்தனா். ரூ.16.5 லட்சம் மதிப்புள்ள 367 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

இதையடுத்து இலங்கையிலிருந்து ஶ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் விமானம் சென்னை சா்வதேச விமானநிலையம் வந்தது.அதில் வந்த பயணிகளை சோதனையிட்டபோது சென்னையை சோ்ந்த 28 வயது ஆண் பயணியின் உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த தங்க மாத்திரைகள் போன்ற தங்க உருண்டைகளை கைப்பற்றினா். அவரிடம் இருந்து ரூ. 12 லட்சம் மதிப்புடைய 263 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்.

சென்னை விமானநிலையத்தில் ஓரே நாளில் அடுத்தடுத்து 3 விமானங்களில் வந்த 2 பெண் பயணிகள் உட்பட 3 பேரிடமிருந்து,ரூ.48 லட்சம் மதிப்புடைய 1.1 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

Updated On: 10 Nov 2021 8:27 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  2. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  3. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  4. வீடியோ
    ஜின்னாவின் பிளவு மனப்பான்மையில் பயணிக்கும்...
  5. தொழில்நுட்பம்
    எச்.எம்.டி பல்ஸ்: சுயமாக சரிசெய்யும் ஸ்மார்ட்போன்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  7. ஈரோடு
    தாளவாடி அருகே வனத்துறை வைத்த கூண்டில் சிக்கிய ஆண் சிறுத்தை
  8. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா
  9. சினிமா
    உண்டா: யதார்த்தத்தின் அழுத்தமான பிரதிபலிப்பு!
  10. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...