/* */

வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு அனுப்பப்படும் தண்ணீர் நிறுத்தம்

வீராணம் ஏரியின் நீர்மட்டம் தற்போது வெகுவாக குறைந்துள்ளதால் சென்னைக்கு குடிநீருக்காக அனுப்பப்படும் தண்ணீர் முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது

HIGHLIGHTS

வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு அனுப்பப்படும் தண்ணீர் நிறுத்தம்
X

வீராணம் ஏரி

வீராணம் ஏரி தமிழ்நாட்டின், கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோயில் வட்டம் லால்பேட்டை முதல் தொடங்கி சேத்தியாதோப்பு அருகில் உள்ள பூதங்குடி கிராமத்தில் முடிவடைந்து இதனுடைய உதிரி நீரானது சேத்தியாதோப்பில் செல்லும் வெள்ளாற்றில் கலக்கின்றது. இதன் அருகில் உள்ள நகரம் சேத்தியாத்தோப்பு 2 கி.மீ. வீராணம் ஏரி சிதம்பரத்திலிருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ளது. இது கி.பி. 907 முதல் 953 வரை சோழர்கள் காலத்தில் வெட்டிய ஏரியாகும். இந்த ஏரி இராஜாதித்ய சோழன் என்னும் இளவரசரால் வெட்டப்பட்டது. இராஜாதித்ய சோழன் தந்தையான முதலாம் பராந்தக சோழனின் இயற்பெயர் வீரநாராயணன் ஆகும். இப்பெயரே வீரநாராயணன் ஏரி என அழைக்கப்பட்டது, கால போக்கில் இப்பெயர் வீராணம் ஏரி என அழைக்கப்பட்டது. இந்த ஏரி 11 கி.மீ. நீளமும், 4 கி.மீ. அகலமும் கொண்ட மிகப்பெரிய ஏரி ஆகும். [1]. இதன் கொள்ளளவு 1465 மில்லியன் கனஅடி ஆகும்.

கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கி வரும் இந்த ஏரிக்கு சாதாரண காலங்களில் கீழணையில் இருந்து வடவாறு வழியாகவும், மழைக்காலங்களில் வீராணம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை நீர் செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை, வெண்ணங்குழி ஓடைவழியாக வரும்.

இந்த ஏரியின் மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. வீராணம் ஏரி சென்னையிலிருந்து 235 கி.மீ. தொலைவில் உள்ளது. இவ்வேரியிலிருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டுவர 1968-ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்டு பல்வேறு காரணங்களால் அது நிறைவேறவில்லை. பின் புதிய வீராணம் திட்டம் என்ற பெயரில் சென்னைக்கு நாள் ஒன்றுக்கு 180 மில்லியன் லிட்டர் குடிநீர் கொண்டு வரும் திட்டம் 2004-இல் நிறைவடைந்தது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரியில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு, குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

வீராணம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1,465 மில்லியன் கனஅடியாகும். மேட்டுர் அணை திறக்கப்பட்டு, அதன்மூலம் வீராணம் ஏரிக்கு காவிரி நீர் வந்தபோது ஏரி முழுக் கொள்ளளவை எட்டியது. சென்னைக்கு தினந்தோறும் 76 கனஅடி நீர் குடிநீருக்காக வீராணம் ஏரியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் வீராணம் ஏரியின் நீர்மட்டம் தற்போது வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக, வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீருக்காக அனுப்பப்படும் தண்ணீர் முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

Updated On: 28 Feb 2024 3:58 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை தொடர் உயர்வு
  2. லைஃப்ஸ்டைல்
    தோல்வி கண்டு துவளாதீர்..! வீழ்ச்சி எழுச்சிக்கான முயற்சி..!
  3. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  4. வீடியோ
    சினிமா படத்தில்ல இருக்கிறது எல்லாம் நல்லவா இருக்கு? ...
  5. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!
  6. பொன்னேரி
    ஆற்றில் சட்டவிரோதமாக மணல் கொள்ளை
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் 8 தேர்வு மையங்களில் நாளை நீட் தேர்வு
  8. ஈரோடு
    ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்கம், ஈரோடு ஆத்மா மின்மயான அறக்கட்டளை...
  9. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் MLA ரூபி மனோகரன் செய்தியாளர் சந்திப்பு | Ruby...
  10. வீடியோ
    அதெல்லாம் அவுங்க விருப்பம்!மிஷ்கினுக்கு அறிவுரை சொன்ன முதியவர்! சொல்ல...