/* */

முழு ஊரடங்கு: மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய வட சென்னை சாலைகள்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கு காரணமாக, வட சென்னையில் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

HIGHLIGHTS

முழு ஊரடங்கு: மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய வட சென்னை சாலைகள்
X

முழு ஊரடங்கால் வடசென்னையில் உள்ள சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.  

கொரோனா பரவலை கட்டுப்படுத்த, இன்று ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நேற்று இரவு 10 மணியில் இருந்து, நாளை திங்கள் காலை 5 மணி வரை, 31 மணிநேரம் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், சென்னை நகரின் பல பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. குறிப்பாக வடசென்னையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பல இடங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

பெரம்பூர் பேருந்து நிலையம், பெரம்பூர் ரயில் நிலையம், மூலக்கடை சந்திப்பு, .வியாசர்பாடி ஜீவா மேம்பாலம், கணேசபுரம் மேம்பாலம், புளியந்தோப்பு பகுதி, கொளத்தூர் 200 அடி சாலை, பேப்பர் மில்ஸ் ரோடு உள்ளிட்ட பல பகுதிகளில், போலீசார் தடுப்புகள் அமைத்து, இரு சக்கர வாகனத்தின் செல்பவர்களிடம் அதற்கான காரணங்களை கேட்டு அனுப்பி வைத்து வருகின்றனர். உணவு டெலிவரி செய்பவர்கள் மட்டும் வாகனங்களில் செல்லக் கூடிய காட்சிகளைக் காண முடிகிறது. மேலும் ரயில் நிலையங்கள் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து வரும் பயணிகளை வீட்டிற்கு அழைத்துச் செல்ல, ஆட்டோ மற்றும் கால் டாக்ஸி உள்ளிட்டவற்றுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Updated On: 23 Jan 2022 6:04 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  2. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  3. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  4. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
  5. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
  6. வீடியோ
    பெயிலில் வெளியே சுத்தும் ராகுல் மற்றும் சோனியா காந்தி !#Rsrinivasan...
  7. மேலூர்
    மதுரை மக்களிடம் விடைபெற்று பூப்பல்லக்கில் மலைக்கு புறப்பட்டார்...
  8. லைஃப்ஸ்டைல்
    நிறம் மாறும் மனிதர்கள்..! ஆபத்தானவர்கள்..!
  9. திருவள்ளூர்
    கோடை வெயிலின் காரணமாக 25 அடியாக குறைந்த பூண்டி நீர்த்தேக்க நீர்மட்டம்
  10. திருப்பரங்குன்றம்
    பாஜக வின் பி டீம் தேர்தல் ஆணையம்: மாணிக்கம் தாகூர் எம்பி...