/* */

10 சதவிகித இட ஒதுக்கீடு வாய்ப்பு இல்லை: தமிழக அரசு உறுதி

10 சதவிகித இட ஒதுக்கீடு வாய்ப்பு இல்லை: தமிழக அரசு உறுதி
X

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10 சதவிகித இட ஒதுக்கீட்டை வரும் கல்வியாண்டில் தமிழகத்தில் அமல்படுத்த முடியாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மத்திய, மாநில கல்வி நிலையங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. மேலும் கடந்த ஆண்டு முதல் அனைத்து கல்வி நிலையங்களிலும் 10% இட ஒதுக்கீடு அமலுக்கு வந்தது. இந்நிலையில் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தனுடன் காணொலி வாயிலாக மாநில மருத்துவக்கல்வி இயக்குநர் நாராயணபாபு ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக்கூட்டத்தில் நீட் தேர்விருந்து தமிழகத்திற்கு இந்த கல்வியாண்டில் விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்ப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. 2021-2022 ஆம் ஆண்டு, மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் 10 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்த இயலாது என்று தமிழக அரசு சார்பில் திட்டவட்டமாக கூறப்பட்டது. மேலும் எதிர்காலத்திலும் இந்த நிலை தொடரும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

Updated On: 10 April 2021 6:22 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  6. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  8. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  10. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!