/* */

அப்பாடா...தொற்று சதவீதம் குறைந்தது! உற்சாகத்தில் சென்னை மாநகராட்சி!!

சென்னையில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளதால் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உற்சாகமடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

அப்பாடா...தொற்று சதவீதம் குறைந்தது! உற்சாகத்தில் சென்னை மாநகராட்சி!!
X

சென்னை மாநகராட்சி அலுவலகம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சென்னை மருத்துவமனைகளில் கடந்த இரண்டு நாட்களாக அனுமதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சியின் சிறப்பான நிர்வாகத்தினால் மே இரண்டாவது வாரத்தில் ஆக்சிசன் தேவையற்ற நோயாளிகளின் எண்ணிக்கை 14 ஆயிரத்திலிருந்து 13307 ஆக குறைந்துள்ளது. புதியதாக தொற்று எண்ணிக்கையில் கணக்கிடும் போது கடந்த ஞாயிற்றுக்கிழமைை 5169 வழக்குகள் பதிவான நிலையில் அந்த எண்ணிக்கை தற்போது 2779 ஆக குறைந்துள்ளது.

நோய் தொற்று குறைந்து வருவதே நோயாளிகளின் குறைவிற்கு காரணம் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் மே முதல் வாரத்தில் 1500 படுக்கைகள் இருந்த நிலையில் தற்போது 60 சதவீதம் படுக்கைகள் கூடுதலாக ஏற்படுத்தி தற்போது 2136 படுக்கைகள் உள்ளது எனவும் நாளொன்றுக்கு 30 ஆயிரம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

Updated On: 28 May 2021 6:27 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!