/* */

கருணாநிதியின் புகைப்பட திறப்பை அதிமுக புறக்கணித்தது தவறு - அழகிரி

கருணாநிதியின் புகைப்பட திறப்பை அதிமுக புறக்கணித்தது தவறு என்று காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்தார்.

HIGHLIGHTS

கருணாநிதியின் புகைப்பட திறப்பை அதிமுக புறக்கணித்தது தவறு - அழகிரி
X

சென்னையில் பேட்டி அளித்த காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி

சென்னை சத்தியமூர்த்தி பவனில் சுதந்திர போராட்ட தியாகி சுப்பிரமணிய சாஸ்திரியார் காங்கிரஸ் தலைவராக பதவியேற்று 100 ஆண்டுகள் நிறைவுவிழாவையொட்டி தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கே.எஸ்.அழகிரி

இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இடஒதுக்கீடு பாஜக வழங்கியதாக கூறுவது ஏற்புடையதல்ல நேரு பிரமராக இருந்த போதே பிற்படுத்தபட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

இட ஒதுக்கீடு என்பது காங்கிரஸ் கட்சி கொண்டுவரப்பட்டது இட ஒதுக்கீட்டின் கதாநாயகனே நாங்கதான் 27 சதவீத இட ஒதுக்கீடு நீண்டநாள் கோரிக்கை நீண்ட நாட்களாக ஓபிசி பிரிவினர் காத்திருந்தனர் இதற்கு பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் தவிர நன்றி தெரிவிக்கக் கூடாது.

கருணாநிதியின் புகைப்பட திறப்பை அதிமுக புறக்கணித்தது தவறு என்றும் உழைப்பின் மூலமாக அரசியலில் உயரத்திற்கு வந்தவர்.

அரசியல் கட்சிகளிடையே பல கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் தனி மனிதனாக ஒருவரின் அரசியல் உயர்வை நாம் பாராட்ட வேண்டும் புகழ வேண்டும், எனவே அதிமுக இப்பொழுதுகூட பெருந்தன்மையுடன் கலந்து கொள்ளலாம் அதுதான் முறை என்பது எனது கருத்து என தெரிவித்தார்.

ஜெயலலிதாவின் புகைப்பட திறப்பை காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்தது குறித்த கேள்விக்கு, முதலில் கருத்து தெரிவிக்க மறுத்த கே.எஸ்.அழகிரி பின்னர் அவர் நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர், அதில் சட்ட சிக்கல் இருந்தது என்பதால் அந்த நிகழ்ச்சியை புறக்கணித்ததாக பதிலளித்தார்.

காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைமை மாற்றப்பட உள்ளதாக செய்தி வெளியானது குறித்த கேள்விக்கு அத்தைக்கு மீசை முளைக்காட்டும் பார்க்கலாம் என தெரிவித்தார்.

Updated On: 2 Aug 2021 5:44 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  5. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  7. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  8. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு
  9. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சித்திரை மாத சிறப்பு அபிஷேகம்
  10. நாமக்கல்
    காந்தமலை முருகன் மற்றும் செல்வ விநாயகர் கோயில்களில் குரு பெயர்ச்சி...