கோயம்பேடு மேம்பாலத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார், ஒருவர் பலி

கோயம்பேடு மேம்பாலத்தில் சென்றுக்கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் பயணி ஒருவர் உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கோயம்பேடு மேம்பாலத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார், ஒருவர் பலி
X

கோயம்பேடு மேம்பாலத்தில் கார் திடீரென தீப் பிடித்து எரிந்ததில் பயணி ஒருவர் பரிதாபமாக இறந்தார்.

சென்னை : கோயம்பேடு மேம்பாலத்தில் சென்றுக்கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்ததில் பயணி ஒருவர் உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.

சென்னை வேலப்பன்சாவடியை சேர்ந்த பெயிண்டர் அர்ஜுனன் என்பவர் சூளைமேட்டில் பணியாற்றுவதற்காக வாடகை காரில் சென்றுள்ளார்.

கோயம்பேடு மேம்பாலத்தில் 100 அடி இணைப்பு சாலையில் அந்த கார் திரும்பும் போது திடீரென தீப்பற்றி எரிந்தது. காரை ஓட்டி வந்த ஓட்டுநர் சுனில்குமார் முதுகில் ஏற்பட்ட தீக்காயங்களுடன் காரில் இருந்து குதித்து உயிர்தப்பிய நிலையில் பின் இருக்கை கதவுகளை திறக்க முடியாததால் பெயிண்டர் அர்ஜுனன் காரில் பரிதவித்துள்ளார்.

அதற்குள் கார் முழுமையாக தீப்பற்றி எரிந்ததில் பெயிண்டர் அர்ஜுனன் உடல் கருகி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கீழ்பாக்கம் மருத்துவமனையில் தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ள ஓட்டுநர் சுனில்குமாரிடம் விசாரணை நடத்தியதில் காரில் இருந்த தின்னர், வார்னிஷ் கொட்டிய வாசனை வீசியதால் ஏசியை அணைத்துவிட்டு கார் கண்ணாடியை திறந்து விட்டதாகவும் அப்போது திடீரென கார் தீப்பிடித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Updated On: 2021-06-29T00:07:36+05:30

Related News