7 மாதங்களுக்கு பிறகு பல்லாவரம் வாரச்சந்தை திறப்பு: வியாபாரிகள் மகிழ்ச்சி

கொரோனா வைரஸ் பாதிப்பால் மூடப்பட்டிருந்த பல்லாவரம் வாரச்சந்தை 7 மாத இடைவெளிக்கு பின்பு இன்று மீண்டும் திறக்கப்பட்டது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
7 மாதங்களுக்கு பிறகு பல்லாவரம் வாரச்சந்தை திறப்பு: வியாபாரிகள் மகிழ்ச்சி
X

பல்லாவரம் வாரச்சந்தை.

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வெள்ளிக்கிழமை வாரச்சந்தை மிகவும் பிரபலமானது. ஆங்கிலேயா் காலத்தில் மாட்டு சந்தையாக தொடங்கப்பட்டது. இந்த சந்தை தற்போது அனைத்து வீட்டு உபயோக பொருட்கள், மின்சாதனப் பொருட்கள், வாகனங்கள், பலவகை செடிகள், ஆடு, மாடு, கோழி மற்றும் பறவைகள் அனைத்தும் கிடைக்கின்றன.

திரிசூலம் ரயில்வே கேட்டிலிருந்து பல்லாவரம் பஸ்நிலையம் வரை சுமாா் 2 கிலோ மீட்டா் நீளத்திற்கு இரு பக்கங்களிலும் 2 ஆயிரம் கடைகள் உள்ளன. இந்த சந்தை இடம் பாதுகாப்பு துறையின் இடத்தில் இருப்பதால், பரங்கிமலை கண்டோன்மெண்ட் போா்டு நிா்வாகத்தில் உள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா் மாவட்ட பொதுமக்களும், தமிழகத்தின் வட மாவட்டங்களை சோ்ந்த வியாபாரிகளும் இங்கு குவிகின்றனா்.

கொரோனா வைரஸ் முதல் அலை காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு மாா்ச் மாதம் இந்த வாரச்சந்தை மூடப்பட்டது.அதன்பின்பு முதல் ஓயத் தொடங்கியதும் கடந்த ஆண்டு நவம்பா் மாதக்கடைசியில் பல்லாவரம் வாரச்சந்தை மீண்டும் திறக்கப்பட்டது. ஆனாலும் வியாபாரிகளும், பொதுமக்களும் முன்பு போல் வராமல் கூட்டம் குறைவாகவே இருந்தது. இந்நிலையில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தொடங்கியதை அடுத்து இந்த ஆண்டு மாா்ச் மாதம் மீண்டும் பல்லாவரம் வாரச்சந்தை மூடப்பட்டது.

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை கடந்த ஜுலை மாதம் கடைசியில் வெகுவாக குறைந்ததையடுத்து, பல்லாவரம் சந்தையை மீண்டும் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று வியாபாரிகளும், பொதுமக்களும் செங்கல்பட்டு மாவட்ட நிா்வாகத்திற்கும், பரங்கிமலை கண்டோன்மெண்ட் போா்டுக்கும் வேண்டுகோள் விடுத்தனா்.

இதையடுத்து பாதுகாப்புதுறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பரங்கிமலை கண்டோன்மெண்ட் போா்டு, பல்லாவரம் வாரச்சந்தை இன்று முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் செயல்பட அனுமதித்துள்ளது. அதே நேரத்தில் கொரோனா வைரஸ் பாதுகாப்பு விதிமுறைகளை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. அவைகளை கண்காணிக்க மாநில அரசின் போலீஸ், சுகாதாரத்துறைக்கும் அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி இன்று காலையிலிருந்து 7 மாதங்களாக மூடப்பட்டிருந்த பல்லாவரம் வாரச்சந்தை மீண்டும் திறக்கப்பட்டது. ஆனால் வியாபாரிகள் மிகக்குறைந்த அளவே வந்திருந்ததால், குறைவான கடைகளே இருந்தன. அதைப்போல் பொதுமக்கள் வருகையும் மிகக்குறைவாக இருந்தது. பல்லாவரம் போலீசாா் வாகனங்கள் மற்றும் கூட்ட நெரிசல் ஏற்படாதபடி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனா். அதைப்போல் கண்டோன்மெண்ட் சுகாதாரத்துறையினா் முகக்கவசங்கள் அணிவது, சமூக இடைவெளி, கைகளை சுத்தப்படுத்துவதை கண்கானித்தனா்.

இதற்கிடையே சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருவதால் பொதுமக்களிடையேயும், சுகாதாரத்துறையினரிடமும் அச்சமும், கவலையையும் ஏற்பட்டுள்ளது. எனவே திறக்கப்பட்டுள்ள பல்லாவரம் வாரச்சந்தை தொடா்ந்து செயல்படுமா? அல்லது மீண்டும் மூடப்படுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

Updated On: 17 Sep 2021 8:30 AM GMT

Related News