/* */

படியில் தொங்கியபடி மாணவர்கள் பயணம்: கூடுதல் பேருந்து இயக்க கோரிக்கை

பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள் கூட்ட நெரிசலில் பயணித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

படியில் தொங்கியபடி மாணவர்கள் பயணம்: கூடுதல் பேருந்து இயக்க கோரிக்கை
X

செங்கல்பட்டில் ஆபத்தான பயணம் செய்யும் மாணவர்கள்.

தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்பு கருதி, தனியார் பள்ளி வாகனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. வேகக் கட்டுப்பாட்டு கருவி, அனுபவமும், திறமையும் வாய்ந்த ஓட்டுநர், ஜன்னல் கம்பிகளில் இரும்பு வலை, அவசர கால வழி, குறிப்பிட்ட அளவுக்கு மேல் மாணவர்களை ஏற்றக் கூடாது. மாணவர்களுடன் வேனில் ஒரு பொறுப்பான நபர் பயணம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை வகுத்து மாணவர்களின் பாதுகாப்பு சிறப்பாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருவது பாராட்டத்தக்கது.

ஆனால், கொரோனா ஊரடங்கு முடிந்து ஒரு வாரகாலமாக பள்ளிகள் திறந்த போதிலும், அரசுப் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு குறித்து அரசும், கல்வித் துறையும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாதது பல தரப்பினரை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. அரசுப் பள்ளிகளில் பெரும்பாலும் கிராமப்புற மாணவர்களே படித்து வருகின்றனர். அதிலும் செங்கல்பட்டை சுற்றியுள்ள கிராமப்புறங்களுக்கு காலை, மாலைகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதனால், மாணவர்கள் அரசுப் பேருந்துகளில் கூட்ட நெரிசலில் பயணம் செய்யும் நிலை உள்ளது. மேலும், இளங்கன்று பயமறியாது என்பதற்கேற்ப மாணவர்கள் கொரோனாவின் ஆபத்தை உணராமல் கூட்டத்தில் சிக்கியபடி படிக்கட்டுகளில் தொங்கி பயணிக்கின்றனர்.

பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்யும் மாணவர்களின் இலவச பேருந்து அட்டை திரும்பப் பெறப்படும் என கல்வித் துறை எச்சரிக்கை விடுத்தும், மாணவர்கள் தொடர்ந்து ஆபத்தான நிலையில் பயணம் செய்து வருகின்றனர். இதற்கு போதிய அளவு பேருந்துகளை அரசு இயக்காததே காரணம் என மாணவர்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுகிறது. இதற்குத் தீர்வாக, கிராமப்புற மாணவர்களைக் கணக்கெடுத்து, பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும்.

எனவே, இதுகுறித்து தமிழக அரசும், கல்வித் துறையும் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Updated On: 7 Sep 2021 5:43 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  2. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  3. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  4. வீடியோ
    ஜின்னாவின் பிளவு மனப்பான்மையில் பயணிக்கும்...
  5. தொழில்நுட்பம்
    எச்.எம்.டி பல்ஸ்: சுயமாக சரிசெய்யும் ஸ்மார்ட்போன்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  7. ஈரோடு
    தாளவாடி அருகே வனத்துறை வைத்த கூண்டில் சிக்கிய ஆண் சிறுத்தை
  8. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா
  9. சினிமா
    உண்டா: யதார்த்தத்தின் அழுத்தமான பிரதிபலிப்பு!
  10. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...