/* */

42197 பேருக்கு விலையில்லா வேஷ்டி, சேலை வழங்கும் பணி :அமைச்சர் துவக்கிவைத்தார்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 42197 பேருக்கு விலையில்லா வேஷ்டி சேலை வழங்கும் திட்டத்தினை அமைச்சர் சிவசங்கர் துவக்கிவைத்தார்

HIGHLIGHTS

42197 பேருக்கு விலையில்லா வேஷ்டி, சேலை வழங்கும் பணி :அமைச்சர் துவக்கிவைத்தார்
X

அரியலூரில் விலையில்லா வேஷ்டி, சேலை வழங்கும் திட்டத்தை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். 

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், வருவாய்த்துறையின் சார்பில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் மாதாந்திர உதவித்தொகை பெறும் 42,197 நபர்களுக்கு தீபாவளி பண்டிகயை முன்னிட்டு விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தினை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த நபர்களுக்கு அடிப்படை தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் உள்ளிட்டவைகளை நிறைவேற்றிடும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

அதன் அடிப்படையில், கிராமப்புறங்களில் வாழும் சமூக பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் மாதாந்திர உதவித்தொகை பெறும் பயனாளிகள் பயன்பெறும் வகையிலும், மேலும் நெசவு தொழிலில் ஈடுபட்டு வரும் நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்படும் வேட்டி, சேலைகளை அரசால் கொள்முதல் செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும் வகையில் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டம் செயல்பட்டு வருகிறருது.

அதன் அடிப்படையில், அரியலூர் வட்டத்தில் 3912 பேருக்கு வேட்டிகளும், 9292 பேருக்கு சேலைகளும், உடையார்பாளையம் வட்டத்தில் 5172 பேருக்கு வேட்டிகளும், 9966 பேருக்கு சேலைகளும், செந்துறை வட்டத்தில் 2588 நபர்களுக்கு வேட்டிகளும், 5444 நபர்களுக்கு சேலைகளும், ஆண்டிமடம் வட்டத்தில் 4035 நபர்களுக்கு வேட்டிகளும், 1788 நபர்களுக்கு சேலைகளும் என மொத்தம் 42,197 நபர்களுக்கு விலையில்லா வேட்டி, சேலைகளை வழங்கும் பொருட்டு, இன்று மவாட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 10 நபர்களுக்கு விலையில்லா வேட்டி, சேலைகளை வழங்கி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன், துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) குமார், மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் பொ.சந்திரசேகர் வட்டாட்சியர் (ச.பா.தி) விக்டோரியா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 24 Oct 2021 9:13 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  3. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  4. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  5. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  6. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  7. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்
  8. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  9. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  10. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்