பாலியல் தொல்லை: அரியலூர் அரசு பள்ளி தலைமை ஆசிரியர், தமிழாசிரியர் கைது

அரயலூரில் அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த தமிழாசிரியர், மறைக்க முயன்ற தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பாலியல் தொல்லை: அரியலூர் அரசு பள்ளி தலைமை ஆசிரியர், தமிழாசிரியர் கைது
X

பாலியல் புகார் கூறப்பட்ட அரசு பள்ளியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாய அன்பரசு விசாரணை நடத்தினார்.

அரியலூர் மாவட்டம் காட்டுபிரிங்கியம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 8ஆம் வகுப்பு மாணவியிடம் தமிழ்ஆசிரியர் அருள்செல்வன் என்பவர் நேற்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதனையடுத்து அவர் பொறுப்பு தலைமை ஆசிரியர் லதாவிடம் புகார் கொடுத்துள்ளார். இதனையடுத்து பொறுப்பு தலைமை ஆசிரியர் லதா பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகளை அழைத்து விசாரனை நடத்தியுள்ளார்.

இதில் அச்சம்பவம் உண்மை என்று தெரிந்ததையடுத்து மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு தவகல் அளித்துள்ளார். இந்நிலையில் தமிழ்ஆசிரியர் அருள்செல்வன் இன்று காலை பள்ளிக்கு வந்ததையடுத்து காட்டுப்பிரிங்கியம் கிராமமக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். இதனையடுத்து அரியலூர் டி.எஸ்.பி மதன்,இன்ஸ்பெக்டர் சகாய அன்பரசு ஆகியோர் பள்ளிக்கு சென்று விசாரணை மேற்கொண்டார்.

அப்போது தமிழ்ஆசிரியர் அருள்செல்வன் கடந்த மாதம் 10 ஆம் வகுப்பு மாணவியிடமும் பாலியல் தொந்தரவு செய்ததாக மற்றொரு மாணவியும் புகார் கொடுத்தார். இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி குற்றத்தை மறைக்க முயற்சி செய்து மாணவியை சமாதானம் படுத்தியதாக கூறப்பகிறது.

இதன்பின்னர் பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் துரை முருகன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.

இதனையடுத்து பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தமிழ்ஆசிரியர் அருள்செல்வனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைதுசெய்துள்ளனர். மேலும் குற்றத்தை மறைத்ததாக பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரியையும் கைதுசெய்துள்ள போலீசார் அவரிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.Updated On: 24 Nov 2021 12:57 PM GMT

Related News

Latest News

 1. திருச்சிராப்பள்ளி மாநகர்
  லஞ்ச ஒழிப்பு போலீசில் சிக்கிய திருச்சி துணை கலெக்டரின் வங்கி கணக்கு...
 2. தமிழ்நாடு
  அதிமுக உட் கட்சி தேர்தல் 7ம் தேதி நடக்கிறது: தலைமை அதிரடி அறிவிப்பு
 3. ஸ்ரீரங்கம்
  திருச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
 4. ஸ்ரீரங்கம்
  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுந்த ஏகாதசி பெருவிழா நாளை தொடக்கம்
 5. திருவெறும்பூர்
  திருச்சியில் கொலை செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ. குடும்பத்திற்கு நிதி உதவி
 6. பெரம்பலூர்
  மாடு மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டியிடம் 4 பவுன் செயின் பறிப்பு
 7. தமிழ்நாடு
  வில்லங்கச் சான்று விவரங்களை திருத்த எளிய வழி: அரசு அதிரடி அறிவிப்பு
 8. கடலூர்
  கடலூர் அருகே தனியார் பேருந்து கண்ணாடியை உடைத்த 3 ரவுடிகள் கைது
 9. கடலூர்
  கடலூர்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காவல் ஆய்வாளர் நிவாரண...
 10. கடலூர்
  ஒமிக்ரான் எதிரொலி: கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு எச்சரிக்கை