அரியலூர்: பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞருக்கு வாழ்நாள் ஆயுள் தண்டனை

அரியலூர் அருகே பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
அரியலூர்: பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞருக்கு வாழ்நாள் ஆயுள் தண்டனை
X

சித்தரிக்கப்பட்ட படம்

அரியலூர் அடுத்த ஒட்டக்கோவில் காலனித்தெருவைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (24). இவர், கடந்த 2018 ம் ஆண்டு, பக்கத்து வீட்டில் வசிக்கும் 16 வயது மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி, திருச்சிக்கு அழைத்துச்சென்று திருமணம் செய்து, அங்கேயே தங்க வைத்து குடும்பம் நடத்தியுள்ளார். இதனால் மாணவி கர்ப்பமடைந்துள்ளார்.

இந்நிலையில், மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், அதே ஆண்டில் தட்சிணாமூர்த்தியை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இதற்கு உடந்தையாக இருந்த தட்சிணாமூா்த்தியின் அக்கா செல்வி, அவரது கணவர் பெரியசாமி ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை முடிந்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன், சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்து கர்ப்பமாக்கிய தட்சிணாமூர்த்திக்கு வாழ்நாள் முழுவதும் ஆயுள் தண்டனையும், ரூ.40,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும், மாணவிக்கு ரூ. 5 லட்சம் நிவாரண தொகை வழங்க அரசுக்கு உத்தரவிட்டார். குற்றம் நிரூபிக்கப்படாததால் செல்வி மற்றும் அவரது கணவர் பெரியசாமி விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் போலீசார் தரப்பில் அரசு வழக்கறிஞர் ராஜா ஆஜராகி வாதாடினார்.

Updated On: 24 Nov 2021 1:32 PM GMT

Related News

Latest News

 1. கோவை மாநகர்
  சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட முயன்ற இருவர் கைது
 2. கோவை மாநகர்
  வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் குழந்தை உயிரிழப்பு: தாய் மீது...
 3. வழிகாட்டி
  பிப்ரவரியில் குரூப் 2, மார்ச்சில் குரூப்-4 தேர்வு: டிஎன்பிஎஸ்சி...
 4. தென்காசி
  ஆரியங்காவு அருகே நிலச்சரிவு: கேரளாவுக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து
 5. ஈரோடு
  சத்தி: உடும்பை வேட்டையாடி சமைத்த 2 வாலிபர்கள் கைது
 6. திருநெல்வேலி
  அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் போட்டியின்றி தேர்வு: நெல்லை அதிமுகவினர்...
 7. நாகப்பட்டினம்
  ஓ.பி.எஸ், இ.பி.எஸ். தேர்வு: நாகையில் இனிப்பு வழங்கிய அ.தி.மு.க.வினர்
 8. ஈரோடு
  நம்பியூர் மின்வாரிய ஊழியர் வீட்டில் ரூ.70 ஆயிரம் திருட்டு
 9. சங்கரன்கோவில்
  சங்கரன்கோவிலில் குண்டும் குழியுமான சாலைகள்: போலீசாருடன் சரி செய்த...
 10. சேலம் மாநகர்
  சேலத்தில் களைகட்டும் ஒட்டகப்பால் டீ விற்பனை: அசத்தும் இளைஞர்கள்