/* */

அரியலூர் மாவட்டத்தில் நாளை 423 இடங்களில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்

அரியலூர் மாவட்டத்தில் 11வது கட்டமாக 423 இடங்களில் நாளை கொரோனா தடுப்பூசி முகாம். மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தகவல்.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் நாளை 423 இடங்களில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்
X

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில், அரியலூர் மாவட்டத்தில் 11-வது கட்டமாக 423 இடங்களில் நாளை (25.11.2021) மாபெரும் கொரோனா தடுப்பூசி நடைபெறவுள்ளது என தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுரையின்படி, அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்களில் 47,125 நபர்களுக்கும், இரண்டாம் தடுப்பூசி முகாம்களில் 17,944 நபர்களுக்கும், மூன்றாம் தடுப்பூசி முகாம்களில் 50,914 நபர்களுக்கும், நான்காம் தடுப்பூசி முகாம்களில் 33,311 நபர்களுக்கும, ஐந்தாம் கட்ட தடுப்பூசி முகாமில் 48,8031 நபர்களுக்கும், ஆறாம் கட்ட தடுப்பூசி முகாமில் 43,390 நபர்களுக்கும், ஏழாம் கட்ட தடுப்பூசி முகாமில் 41,141 நபர்களுக்கும், எட்டாம் கட்ட தடுப்பூசி முகாமில் 25,135 நபர்களுக்கும், ஒன்பதாம் கட்ட தடுப்பூசி முகாமில் 24,881 நபர்களுக்கும், பத்தாம் கட்ட தடுப்பூசி முகாமில் 38,834 நபர்களுக்கும் என மொத்தம் 3,71,506 கொரோனா வைரஸ் நோய் தடுப்பூசிகள் செலுத்துப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் 11-வது கட்டமாக 25.11.2021 அன்று மாபெரும் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தும் பணி மாவட்டத்தில் 6 ஒன்றியங்களுக்குட்பட்ட 311 இடங்களிலும், 2 பேரூராட்சிகளுக்குட்பட்ட 6 இடங்களிலும், 2 நகராட்சிகளுக்குட்பட்ட 37 இடங்களிலும், நடமாடும் கொரோனா தடுப்பூசி வாகனங்கள் மூலமாக 26 இடங்களிலும், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு தலைமை மருத்துவமனை, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட 43 இடங்களிலும் என மொத்தம் 423 இடங்களில் சிறப்பு தடுப்பூசி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெறவுள்ளது.

எனவே 18-வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும், தங்கள் வீடுகளில் உள்ளவர்கள் மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ளவர்களிடம் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்த வேண்டும் எனவும், மேலும், தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் பயன்கள் குறித்து அருகிலுள்ள பொதுமக்களுக்கும் தெரிவித்து 100 சதவீதம் கொரோனா செலுத்தப்பட்ட மாவட்டமாக அரியலூர் மாவட்டத்தை மாற்றிட அனைத்து பொதுமக்களுக்கும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Updated On: 24 Nov 2021 1:26 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முள்ளுக்குள் மலர்ந்த ரோஜா, அப்பா..!
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. லைஃப்ஸ்டைல்
    தூக்கமின்மைக்குத் தீர்வளிக்கும் உணவுகள்
  4. லைஃப்ஸ்டைல்
    அனுபவ வயல்களின் அறுவடை, முதிர்ச்சி..!
  5. ஆன்மீகம்
    அளவற்ற அன்பை அள்ளித் தருபவர் நபிகள் நாயகம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடிய முத்துராமலிங்க தேவர்..!
  7. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!
  8. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  9. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  10. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...