அரியலூர் மாவட்டத்தில் ஊரடங்கு கூடுதல் கட்டுப்பாடுகள் 31வரை நீட்டிப்பு

அரியலூர் மாவட்டத்தில் ஊரடங்கு கூடுதல் கட்டுப்பாடுகள் ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
அரியலூர் மாவட்டத்தில் ஊரடங்கு கூடுதல் கட்டுப்பாடுகள் 31வரை நீட்டிப்பு
X

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அரியலூர் மாவட்டத்தில் தமிழக அரசின் உத்தரவுபடி பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நடைமுறையில் உள்ள கோவிட்-19 கட்டுப்பாடுகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அரசாணையின்படி10.01.2022 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கும், ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கும் தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது.

அரியலூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலும், பரவி வரும் உருமாறிய கொரோனா- ஒமைக்ராகன் வைரஸ் நோயைக் கருத்தில் கொண்டும் மற்றும் பொதுமக்கள் நலன் கருதியும் எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பொதுமக்கள் ஒரேநேரத்தில், ஒரே இடத்தில் கூட்டம் கூடுவதால் நோய்த் தொற்றுபரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு பின் வரும் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் 31.01.2022 வரை நடைமுறைப்படுத்தப்படுகிறது.

14.01.2022 முதல் 18.01.2022 வரை அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. 16.01.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்லும் பொதுமக்கள் நலன் கருதிபொது பேருந்துகளில் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் 75 சதவீதம் மட்டும் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். தற்போது ஊரடங்கு காலத்தில் தடைசெய்யப்பட்ட மற்றும் அனுமதிக்கப்பட்ட இதர செயல்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும்.

இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறும், முதல் தவணை தடுப்பூசி செலுத்தியிருந்து, இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் உடனடியாக இரண்டாம் தவணை தடுப்பூசியையும் செலுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகத்தில் மூலம் கேட்டுக்கொள்ளப்டுகிறது.

அனைத்துகடைகளின் நுழைவு வாயில்களிலும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் கட்டாயமாக வைப்பதோடு, உடல் வெப்பநிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும். கடைகளில் பணிபுரிவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்மந்தப்பட்ட நிர்வாகம் உறுதிசெய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வணிக வளாகங்கள் மற்றும் கடைகளில் பணிபுரிபவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று வைத்திருக்க வேண்டும். அனைத்து கடைகளிலும், குளர்சாதன வசதி இல்லாமல் செயல்படுவதோடு, கடைகளில், சமூக இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்கவும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட வேண்டும். இந்த நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், மருத்துவ அவசர சேவைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல் தவிர, இதர செயல்பாடுகளுக்கு அனுமதி இல்லை. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், தீவிரமாக நோய்க் தொற்று பரவலை, வீடு வீடாக கண்காணிக்க சுகாதாரத்துறையின் மூலம் குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்படும்.

கொரோனா நோய்த் தொற்று கட்டுப்பாட்டு நடைமுறைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, விதிமீறல்களில் ஈடுபடுவர்கள் மீதுஅபராதம் விதிக்கப்படும்.

அரியலூர் மாவட்டத்தில் மருத்துவத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்களுக்கு சென்று தடுப்பூசியினை கட்டாயம் செலுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் தொடர்ந்து செயல்பட்டு வரும் வணிக நிறுவனங்கள், கடைகளை மூட மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை மேற்ககொள்ளப்படும். பொதுமக்கள் அத்தியாவசியக் காரணங்களுக்காக மட்டும் வீட்டை விட்டு வெளியே செல்லுமாறும், கூட்டம் கூடுவதைத் தவிர்க்குமாறும்,பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியினை கண்டிப்பாக கடைப்பிடிக்குமாறும், பொதுமக்கள் நலன் கருதி அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 14 Jan 2022 11:45 AM GMT

Related News

Latest News

 1. வேளச்சேரி
  மாஜி அமைச்சர் வீட்டுக்கு சென்ற அதிகாரிகளுக்கு ஏமாற்றம்- காரணம் இதுதான்
 2. செங்கல்பட்டு
  செங்கல்பட்டு இராமகிருஷ்ணா குழுமப்பள்ளி சார்பில் தேசிய இளைஞர் தினவிழா
 3. அரசியல்
  2024ம் ஆண்டில் ராகுல் பிரதமர் ஆக முடியுமா ? ( ஒரு அரசியல் அலசல்)
 4. மயிலாடுதுறை
  மயிலாடுதுறை அருகே சிதிலமடைந்த வீட்டில் வசித்த மூதாட்டிக்கு உதவி
 5. திருவள்ளூர்
  திருவள்ளூர் அருகே பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து பணம் கொள்ளை
 6. கோவில்பட்டி
  கோவில்பட்டி அருகே ஸ்ரீ அம்மா பூமாதேவி ஆலய பால்குட ஊர்வலம் துவக்கி...
 7. கோவில்பட்டி
  கோவில்பட்டி: விவசாய நிலத்தில் குவாரி அமைப்பதை எதிர்த்து ஆர்.டி.ஓ.விடம் ...
 8. வீரபாண்டி
  சேலத்தில் கனிம வளத்துறை அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை
 9. திருநெல்வேலி
  நெல்லை மாவட்டத்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி சிறப்பு முகாம்
 10. நாமக்கல்
  நாமக்கல் சொசைட்டியில் ரூ.1 கோடி மதிப்பு பருத்தி ஏலம் மூலம் விற்பனை