/* */

உங்கள் குழந்தை இராணுவக்கல்லூரியில் பயில வேண்டுமா? இதனை படியுங்கள்

உங்கள் குழந்தை இராணுவக்கல்லூரியில் பயில வேண்டுமா? இதனை படியுங்கள் என அரியலூர் கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

உங்கள் குழந்தை  இராணுவக்கல்லூரியில் பயில வேண்டுமா? இதனை படியுங்கள்
X

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் டேராடூனில் உள்ள இராஷட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியில் 2023 ஜனவரி பருவத்தில் சேருவதற்கான 2022ம் ஆண்டு ஜூன் மாதம் 4-ம் தேதியில் நடத்தப்பெறும் தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பதாரர்களின் பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர் 11 ½ வயது நிரம்பியவராகவும் 13 வயதை அடையாதவராகவும் இருத்தல் (02.01.2010 முன்னதாகவும் 01.07.2011க்கு பின்னதாகவும் பிறந்திருத்தல் கூடாது) வேண்டும். வயது வரம்பில் தளர்வு கிடையாது. விண்ணப்படிவம் மற்றும் தகவல்கள் http://www.rimc.gov.in/ என்ற இணையதளம் மூலம் பெற்றுக்கொள்ளவும்.

பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் (இரட்டையாக) தேர்வுக்கட்டுப்பாடு அலுவலர், தமிழ்நாடு அரசுப்பணியாளர், தேர்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையச்சாலை, பூங்கா நகர், சென்னை -600 003 என்ற முகவரிக்கு 25.04.2022க்குள் சேர வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு அரியலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல துணை இயக்குநர் அவர்களை (தொலைப்பேசி எண்.04329-221011) அணுகி பயன்பெறுமாறு அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Updated On: 7 April 2022 8:43 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  2. வீடியோ
    😎உருவாகிறது ஆட்டோகாரன் New Version ! 🔥தெறிக்கப்போகும் Opening Song🔥...
  3. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  4. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  5. ஈரோடு
    பிளஸ் 2 பொதுத்தேர்வு: மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த ஈரோடு...
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...
  9. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  10. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...