/* */

செந்துறை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு

அரியலூர் மாவட்டம் செந்துறை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை மாவட்ட கலெக்டர் பெ.ரணம சரஸ்வதி நேரில் பார்வையிட்டு ஆய்வு.

HIGHLIGHTS

செந்துறை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு
X

அரியலூர் மாவட்டம் செந்துறை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை மாவட்ட கலெக்டர் பெ.ரணம சரஸ்வதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியத்திற்குட்பட்ட பொன்பரப்பி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சத்துணவு மையத்தை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

செந்துறை ஒன்றியம், பொன்பரப்பி கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மாவட்ட கலெக்டர் பெ.ரணம சரஸ்வதி நேரில் பார்வையிட்டு மகப்பேறு பரிசோதனைக்கு வரும் தாய்மார்களுக்கு போதிய அளவில் இரும்புசத்து மாத்திரை, தடுப்பூசிகள் அளிக்கப்படுகிறதா என கர்ப்பிணித்தாய்மார்களிடம் கேட்டறிந்து, கர்ப்பிணித்தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்.

பின்னர், மருத்துவமனையில் அரசு ஏற்படுத்தி உள்ள அனைத்து மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஊசி, மருந்து, மாத்திரைகள் போதிய அளவில் இருப்பில் வைக்கப்பட்டு உள்ளதா என ஆய்வு மேற்கொண்டார். மேலும் அங்கு சிகிச்சைக்கு வந்த பொதுமக்களிடம் மருத்துவர்கள் உரிய நேரத்திற்கு வருகை தந்து, சிகிச்சை மேற்கொள்கின்றனரா, பொதுமக்களுக்கு தேவையான உரிய மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அதற்குரிய முடிவுகள் உரிய நேரத்தில் வழங்கப்பட்டு, சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறதா என்பது குறித்து கேட்டறிந்து, கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதை மாவட்ட கலெக்டர் பெ.ரணம சரஸ்வதி பார்வையிட்டார்.

சிகிச்சைக்கு வந்த கர்ப்பிணித்தாய்மார்களிடம் அரசு வழங்கும் நலத்திட்டங்களான டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின்கீழ் பயன்பெற்று வருகின்றனரா, கர்ப்பிணித்தாய்மார்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதா, மேலும், கிராம செவிலியர்கள் மூலம் கர்ப்பிணித்தாய்மார்கள் தொடர்ந்து கண்காணிப்பட்டு வருகின்றனரா, அவர்களுக்கு தேவையான ஸ்கேன் பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ உதவிகள் வழங்கப்படுகிறதா என்பது குறித்தும், அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்திற்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என மருத்துவர்கள் மற்றும் பொதுமக்களிடம் மாவட்ட கலெக்டர் பெ.ரணம சரஸ்வதி கேட்டறிந்தார்.

அதனைத்தொடர்ந்து, பொன்பரப்பி அரசு மேல்நிலைப்பள்ளியை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர் பெ.ரணம சரஸ்வதி, அரசு தெரிவித்துள்ள உணவு அட்டவணையின்படி வருகை தந்துள்ள மாணவர்களின் வருகைக்கேற்ப சத்துணவு தயார் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்தும், மழைக்காலங்களில் மாணவர்களுக்கு சுகாதாரமான முறையில் உணவினை தயார் செய்து வழங்கிடவும், சேதமடைந்த வகுப்பறைகளுக்கு மாற்றாக புதிய வகுப்பறைகளை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் பெ.ரணம சரஸ்வதி அறிவுறுத்தினர்.

இந்த ஆய்வின்போது, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) கீதாராணி, வட்டார மருத்துவ அலுவலர் ரேவதி மற்றும் மருத்துவ பணியாளர்கள், ஊழியர்கள் உடனிருந்தனர்.

Updated On: 1 Dec 2021 7:14 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  6. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  7. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  9. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்