/* */

அரியலூர் மாவட்டத்தில் 16 புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அரிசி, மளிகை தொகுப்பு நிவாரணம் வழங்கல்

அரியலூர் மாவட்டத்தில் புலம்பெயர்ந்த வெளி மாநில தொழிலாளர்களுக்கு அரிசி, மளிகை தொகுப்பை நிவாரணமாக மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி வழங்கினார்.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் 16 புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அரிசி, மளிகை தொகுப்பு நிவாரணம் வழங்கல்
X

அரியலூரில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான கொரோனா நிவாரணமாக அரிசி, மளிகை தொகுப்பை கலெக்டர் ரமண சரஸ்வதி வழங்கினார்.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தொழிலாளர் நலத்துறையின் சார்பில் 16 புலம்பெயர்ந்த வெளி மாநில தொழிலாளர்களுக்கு நிவாரண தொகுப்புகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வழங்கினார்.

கொரோனா நோய் தொற்றுக் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை குறைக்கும் வகையிலும், பெருந்தொற்று நேரத்தில் பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையிலும் பொதுவிநியோகத் திட்ட அரிசி பெறும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.4000 மற்றும் 14 மளிகைப் பொருட்களின் தொகுப்பு ஆகியவை வழங்கப்பட்டது.

மேலும், வெளி மாநிலங்களிலிருந்து வேலை நிமித்தமாக அரியலூர் மாவட்டத்தில் உணவகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் பணியாற்றி வரும் பணியாளர்களின் நலனுக்காக கொரோனா பெருந்தொற்று காலத்தில் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில்,

தமிழ்நாடு முதலமைச்சரால் தொழிலாளர் நலத்துறையின் சார்பில் உணவுப் பொருட்கள் தொகுப்புகள் வழங்க உத்தரவிட்டார்.

இத்தொகுப்பில் ஒவ்வொரு நபர்களுக்கும் தலா 15 கிலோ அரிசி, 1 கிலோ துவரம் பருப்பு, 1 லிட்டர் சமையல் எண்ணெய் ஆகியவை வழங்கப்படுகிறது. அதன்படி, அரியலூர் மாவட்டத்தில் உள்ள 16 புலம் பெயர்ந்த வெளி மாநில தொழிலாளர்களுக்கு உணவு பொருட்கள் தொகுப்புகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வழங்கினார்.

மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெய்னுலாப்தீன், தொழிலாளர் உதவி ஆய்வாளர் குருநாதன் கலந்துகொண்டனர்.

Updated On: 30 Jun 2021 9:40 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  4. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  6. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  7. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  8. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்
  9. காஞ்சிபுரம்
    கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !
  10. வீடியோ
    🔴LIVE : மீண்டும் அயோத்தியில் பாரத பிரமர் மோடி || PM Modi performs...