/* */

அரியலூரில் அரசு மானியத்துடன் ஆடு வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு

விதவைகள் / கணவனால் கைவிடப்பட்ட / ஆதரவற்ற பெண்களுக்கு 5 ஆடுகள் விண்ணப்பிக்க மாவட்ட கலெக்டர் அறிவிப்பு.

HIGHLIGHTS

அரியலூரில் அரசு மானியத்துடன் ஆடு வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு
X

2021-22-ஆம் ஆண்டிற்கான ஊரக ஏழ்மை நிலையிலுள்ள விதவைகள் / கணவனால் கைவிடப்பட்ட / ஆதரவற்ற பெண் பயனாளிகளுக்கு 100 சதவீத மானியத்தில் 5 வெள்ளாடுகள் / செம்மறி ஆடுகள் வழங்கி பெண்களை தொழில்முனைவோராக உருவாக்கும் திட்டத்தின் கீழ், ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 100 பெண் பயனாளிகள் வீதம், அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 600 பெண் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு தலா 5 வெள்ளாடுகள் / செம்மறி ஆடுகள் கொள்முதல் செய்து வழங்கப்பட உள்ளது.

திட்டம் பற்றிய விவரங்கள்: இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கும் பெண்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவராக இருத்தல் வேண்டும். கணவனை இழந்த அல்லது கணவனால் கைவிடப்பட்ட / ஆதரவற்ற பெண்களாகவும், தொடர்புடைய கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராகவும் இருத்தல் வேண்டும். 60 வயதிற்கு உட்பட்டவராகவும், நிலமற்றவராகவும் (குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் நிலம் இருத்தல் கூடாது), தற்போது மாடு / ஆடு வைத்திருக்காதவராகவும் இருத்தல் வேண்டும்.

முந்தைய ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட இலவச கறவைப் பசுக்கள் மற்றும் இலவச வெள்ளாடுகள் / செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டம் மற்றும் ஊரக புறக்கடை கோழி வளர்ப்புத் திட்டங்களில் பயன்பெறாதவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் எவரும் மத்திய அரசு / மாநில அரசு / கூட்டுறவு துறைகளில் பதவியில் இருத்தல் கூடாது. இத்திட்டத்தில் வழங்கப்படும் ஆடுகளை குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு வைத்து பராமரிப்பவராக இருத்தல் வேண்டும். இத்திட்டத்தின் கீழ் 30 சதவீத பயனாளிகள் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்களாக தேர்வு செய்யப்படுவர்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் தகுதியான பெண்கள், அவர்களது பகுதிக்கு அருகாமையில் உள்ள அரசு கால்நடை மருந்தகத்தின் கால்நடை உதவி மருத்துவரை அணுகி விண்ணப்பம் பெற்று, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை 09.12.2021-க்குள் கால்நடை உதவி மருத்துவரிடம் அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பெ.ரமண சரஸ்வதி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Updated On: 1 Dec 2021 6:52 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  2. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  3. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  4. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  5. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  7. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  8. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  9. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!
  10. லைஃப்ஸ்டைல்
    வாழை இலை பரோட்டா செய்வது எப்படி?