/* */

சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான விழிப்புணர்வு முகாம்

அரியலூரில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான மாவட்ட அளவிலான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான விழிப்புணர்வு முகாம்
X

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி, இந்தியன் வங்கி, உடையார்பாளையம் கிளையின் மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ.10.15 இலட்சம் கடனுதவிக்கான வங்கி வரைவோலை வழங்கினார்.


அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான மாவட்ட அளவிலான விழிப்புணர்வு முகாம் மாவட்ட ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது.

இந்த முகாமில், மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களான படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம், முதலீட்டு மானியம், ஜெனரேட்டர் மானியம் மற்றும் குறைந்தழுத்த மின் மானியம் குறித்த விளக்கக்காட்சி (Power point Presentation) மற்றும் திட்ட விளக்கவுரை அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர், வங்கியாளர்களிடம் நிலுவையிலுள்ள தகுதிவாய்ந்த தொழில் முனைவோர்களின கடன் விண்ணப்பங்களை உடனடியாக பரிசீலனை செய்து கடன் வழங்கிட வேண்டும் என்றும், தொழில்முனைவோர்கள் தங்களது உற்பத்தி பொருட்களின் தரம் மற்றும் சந்தைப்படுத்துதலில் முக்கியத்துவம் செலுத்துவதன் மூலம் அதிக லாபம் பெறலாம் என்று பேசினார்.

மேலும், இக்கூட்டத்தில் தொழில் மையம் மூலம் பயனடைந்த தொழில்முனைவோர்கள் திவெண்ணிலவன் மற்றும் உபனா ஆகியோர்கள் கலந்து கொண்டு, புதிய தொழில்முனைவோர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் சிறப்புரையாற்றி, மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களில் மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் பெற்று பயன்பெறுமாறு தொழில்முனைவோர்களை கேட்டுக்கொண்டனர்.

மேலும், இந்த விழிப்புணர்வு முகாமில், முன்னோடி வங்கி மேலாளர், பாரத ஸ்டேட் வங்கி, அரியலூர் அவர்கள் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் செயல்படுத்தபடும் திட்டங்களில் வங்கியின் பங்கு மற்றும் வங்கியின் இதர சேவைகள் குறித்து விளக்கம் அளித்தார்கள்.

இக்கூட்டத்தில் உதவி பொது மேலாளர், நபார்டு வங்கி, திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மற்றும் [ மாவட்ட வங்கி மேலாளர்கள் கலந்து கொண்டனர். இம்முகாமில் 65 தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.

இச்சிறப்பு முகாமின் மூலமாக அரியலூர்மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி, இந்தியன் வங்கி, உடையார்பாளையம் கிளையின் மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ.10.15 இலட்சம் கடனுதவிக்கான வங்கி வரைவோலை வழங்கினார்.

மேலும், அரியலூர் மாவட்டத்திற்கு அதிகப்படியாக கொடுக்கப்பட்ட இலக்கீட்டினை எய்தும் பொருட்டு சுய தொழில் தொடங்க ஆர்வமுள்ள அனைவரும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கும்படியும், கூடுதல் விபரங்கள் பெற பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், வாலாஜாநகரம், அரியலூ, அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது 04329-228555, 8925533925, 8925533926 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ தொடர்புகொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதிதெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) சு.சுந்தர்ராஜன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர்ஆ.லட்சுமி, முன்னோடி வங்கி மேலாளர் லியோனல் பெனடிக், நபார்டு வங்கி மேலாளர் நவீன்குமார், மற்றும் தொழில் முனைவோர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 27 Aug 2021 1:07 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  2. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  3. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  4. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  5. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  6. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  7. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  8. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...
  9. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  10. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...