/* */

அரியலூரில் இளைஞர்கள் வேலைவாய்ப்புக்கு இணையதளம் : கலெக்டர் ரத்னா தகவல்

அரியலூரில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க இணையதள சேவை உருவாக்கப்பட்டுள்ளது என கலெக்ர் ரத்னா தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

அரியலூரில் இளைஞர்கள் வேலைவாய்ப்புக்கு இணையதளம் : கலெக்டர் ரத்னா தகவல்
X

அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா (கோப்பு படம்)

அரியலூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க இணையதளம் அரசு உருவாக்கியுள்ளதாக கலெக்டர் ரத்னா தெரிவித்தார். இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திகுறிப்பில், கூறியிருப்பதாவது.

தமிழ்நாட்டில் வேலை நாடும் இளைஞர்களையும், வேலை அளிக்கும் தனியார் துறை நிறுவனங்களையும், இணைய வழியாக இணைத்து வேலைவாய்ப்புகளை பெற்றுத் தரும் நோக்கத்தில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின், வேலைவாய்ப்பு பிரிவால் பிரத்யேகமாக ~தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம் TamilNadu Private Job Portal' (www.tnprivatejobs.tn.gov.in) வடிவமைக்கப்பட்டுள்ளது.

தனியார் துறையில் பணியாற்ற விரும்பும் இளைஞர்கள் இவ்விணையதளத்தில் நேரடியாக பதிவு செய்து தங்கள் கல்வித்தகுதி, முன்அனுபவம் ஆகியவற்றிற்கு ஏற்ற பணிவாய்ப்புகளை பெறுவதற்கும், தனியார் துறை சார்ந்த அனைத்து சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரு நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் காலிப்பணியிடங்களை இவ்விணையதளத்தில் பதிவேற்றம் செய்து அப்பணிக்காலியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்து பணி நியமனம் வழங்குவதற்கும் இவ்விணையதளம் வழிவகை செய்கிறது. வேலை அளிப்போர் மற்றும் வேலை நாடுநர்களுக்கு இச்சேவை, கட்டணம் ஏதுமின்றி முற்றிலும் இலவசமாக தமிழக அரசால் வழங்கப்படுகிறது.

அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களால் சிறிய மற்றும் பெரிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போதைய சூழ்நிலையில், இதற்கு மாற்றாக "தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையதளம்" மூலம் இணையவழி நேர்காணல் மற்றும் இணையவழி பணி நியமனம் ஆகிய வசதிகளைப் பயன்படுத்தி, அதிக எண்ணிக்கையில் தமிழ்நாட்டிலுள்ள வேலைநாடும் இளைஞர்களை, இணைய வழியாக தொடர்பு கொண்டு தனியார் துறை வேலையளிப்போர்கள் பணி வாய்ப்புகளை அளிப்பதற்கான அரிய சேவை உருவாக்கி தரப்பட்டுள்ளது.

எனவே, இச்சேவையை அரியலூர் மாவட்டத்தை சார்ந்த வேலைநாடுநர்களும் மற்றும் வேலையளிக்கும் தனியார்துறை நிறுவனங்களும் பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் த.ரத்னா தெரிவித்துள்ளார்.

Updated On: 23 May 2021 9:24 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    5 ஆண்டுகள் தூங்கிய ஜெகன் அண்ணனை வறுத்தெடுத்த தங்கை..!
  2. லைஃப்ஸ்டைல்
    ரமலான் காலத்தில் உடல் பலமும், மன வலிமையும்
  3. பட்டுக்கோட்டை
    வயலில் பாசி படர்ந்தால் நெல் எப்படி சுவாசிக்கும்? எப்படி சத்துக்களை...
  4. லைஃப்ஸ்டைல்
    கஷ்டங்கள் யாவும் கடந்து போகும்.. தோல்வியா? தூசிதான்!
  5. ஈரோடு
    ஈங்கூர் இந்துஸ்தான் கல்லூரியில் மாநில கைப்பந்து முகாம் நிறைவு விழா
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் பொதுமக்களுக்கு இலவசமாக மோர் வழங்கிய போலீசார்
  7. வீடியோ
    🔥உனக்கு 24-மணிநேரம்தான் Time விஜயபாஸ்கர் மிரட்டல்🔥|மோதிக்கொண்ட...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் 'கூல்' ஆக இருப்பது எப்படி?
  9. திருவள்ளூர்
    அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
  10. ஆவடி
    ஆவடி அருகே நகைக்கடையில் கொள்ளை: கொள்ளையர்களுக்கு உதவிய இருவர் கைது