/* */

அரியலூர் : பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதும் 8795 மாணவர்கள்

அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 தேர்வு எழுதும் மாணவர்கள் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

அரியலூர் : பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதும் 8795 மாணவர்கள்
X

அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 தேர்வு எழுதும் மாணவர்கள் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி ஆய்வு செய்தார்.

அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 87 பள்ளிகளைச் சோ்ந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவா்கள் 8795 பேர் இன்று பொது தேர்வு எழுதுகின்றனர்.

தமிழ்நாடு முழுவதும் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. அந்த வகையில் அரியலூர் மாவட்டத்தில் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வினை 87 மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 4,035 மாணவர்களும், 4,760 மாணவிகளும் என ஆகமொத்தம் 8,795 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.

12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வினை அரியலூர் கல்வி மாவட்டத்தில் 1,185 மாணவர்களும், 1,551 மாணவிகளும் என மொத்தம் 2,736 மாணவ, மாணவிகள் 12 தேர்வு மையங்களில் தேர்வு எழுத உள்ளனர். இதேபோன்று உடையார்பாளையம் கல்வி மாவட்டத்தில் 1,580 மாணவர்களும், 1,792 மாணவிகளும் என மொத்தம் 3,372 மாணவ, மாணவிகள் 13 தேர்வு மையங்களிலும், செந்துறை கல்வி மாவட்டத்தில் 1,270 மாணவர்களும், 1,417 மாணவிகளும் என மொத்தம் 2,687 மாணவ, மாணவிகள் 14 தேர்வு மையங்களிலும் என அரியலூர் மாவட்டத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வினை 87 மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 4,035 மாணவர்களும், 4,760 மாணவிகளும் என ஆகமொத்தம் 8,795 மாணவ, மாணவிகள் 39 தேர்வு மையங்களில் தேர்வு எழுதுகின்றனர்.

அனைத்துத் தோ்வு மையங்களிலும் குடிநீா், கழிப்பறை, மின்சாரம் ஆகிய வசதிகளை உறுதி செய்யும் பணிகளும், தோ்வு அறைகளில் உள்ள மேசைகளில் தோ்வா்களின் தோ்வு எண் எழுதும் பணியும் அமைக்கப்பட்டுள்ளது. பொதுத் தோ்வு மைய வளாகத்துக்குள் தோ்வா்கள் கைப்பேசியைக் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல, தோ்வு பணியில் ஈடுபடும் ஆசிரியா்கள் தோ்வு அறைக்குள் கைப்பேசியை வைத்திருக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மீறப்பட்டால், தொடா்புடைய தோ்வா்கள் அல்லது ஆசிரியா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 தேர்வு எழுதும் மாணவர்கள் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி ஆய்வு செய்தார்.

தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் உரிய கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வினை எழுத உள்ள மாணவ, மாணவிகளுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும் தோ்வா்கள் தொடா்ந்து தோ்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டு, உரிய தண்டனையும் வழங்கப்படும் எனவும், ஒழுங்கீனச் செயல்களுக்கு உடந்தையாக அல்லது ஊக்கப்படுத்தும் வகையில் ஏதேனும் ஒரு பள்ளி நிர்வாகம் செயல்படுமானால், தொடா்புடைய பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Updated On: 5 May 2022 5:51 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  2. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  3. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  4. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...
  5. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  6. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...
  7. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  8. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...
  9. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  10. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...