/* */

லஞ்சம் கொடுத்த பணத்தை வட்டியுடன் திரும்ப தரக்கோரி வழக்கு

Anti Corruption India - லஞ்சம் கொடுத்த பணத்தை வட்டியுடன் திரும்ப தரக்கோரி தொடரப்பட்ட வழக்கில் ஊழல் தடுப்பு காவல் துறைக்கு நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

HIGHLIGHTS

லஞ்சம் கொடுத்த பணத்தை வட்டியுடன்  திரும்ப தரக்கோரி வழக்கு
X

பைல் படம்.

Anti Corruption India -நிலத்தை உட்பிரிவு செய்து தனி பட்டா வழங்க கோரி விண்ணப்பம் செய்ததில் நில அளவையர் ரூ 5000 லஞ்சம் பெற்றுக்கொண்டு பட்டா வழங்கவில்லை என்பதால் பட்டா வழங்க கோரியும் கொடுத்த லஞ்சப் பணத்தை வட்டியுடன் திரும்ப பெற்றுத்தர கோரியும் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் தலைமையிலான அமர்வு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை காவல் ஆய்வாளருக்கு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரியலூர் அருகே உள்ள கோவிலூர் கிராமத்தைச் சேர்ந்த பிச்சை பிள்ளை என்பவர், அரியலூர் மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் தாக்கல் செய்த புகாரில், தமது வீடு மற்றும் விவசாய நிலத்தை தாம் வெளியூருக்கு பிழைப்புக்காக சென்றிருந்தபோது வருவாய் துறையினரின் உதவியுடன் பக்கத்து நில உரிமையாளர்கள் தங்கள் பெயருக்கு பட்டா மாற்றம் செய்துகொண்டு விட்டனர். எனவே, நில அளவை செய்து தனி பட்டா தமக்கு வழங்க வேண்டும் என்று அரியலூர் வட்டாட்சியர் அவர்களிடம் கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சேவைக் கட்டணத்தை செலுத்தி விண்ணப்பம் செய்தேன். ஆனால், விண்ணப்பம் செய்து ஐந்து மாதங்கள் கழித்தும் பட்டா வழங்கப்படவில்லை.

இந்நிலையில் தொலைபேசியில் தொடர்பு கொண்ட நில அளவையர் ஒருவர் நில அளவை செய்து பட்டா மாற்றம் செய்து கொடுக்க ரூ 25 ஆயிரம் கேட்டார். ஆனால் ரூ 10,000 மட்டும்தான் கொடுக்க முடியும் என்று கூறி ரூ 5000 அந்த நில அளவையர் அவர்களிடம் திருமானூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு இரண்டு சாட்சிகள் முன்னிலையில் கொடுத்தேன். அதன் பிறகும் நில அளவை செய்து பட்டா வழங்கப்படவில்லை.

எனவே, மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் தமது புகாரை விசாரித்து தமக்குச் சொந்தமான வீட்டிற்கும் விவசாய நிலத்திற்கு பட்டா வழங்குமாறு அரியலூர் வட்டாட்சியருக்கு உத்தரவிடுமாறும் சட்டவிரோதமாக நில அளவையர் பெற்ற தொகை ரூபாய் 5000/-தை நவம்பர் 2015 -லிருந்து 12 சதவீத வட்டியில் நில அளவையர் வழங்க உத்தரவு பிறப்பிக்குமாறும் தனது புகாரில் பிச்சை பிள்ளை கேட்டுக்கொண்டிருந்தார்இந்த சம்பந்தப்பட்ட நில அளவையரின் பெயரையும் குறிப்பிட்டு புகாரை அவர் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் அரியலூர் வட்டாட்சியர் அவர்களும் சம்பந்தப்பட்ட நில அளவையரும் பதில் தாக்கல் செய்தனர். இதன் பின்பு புகார்தாரரையும் சம்பந்தப்பட்ட நில அளவையரையும் சாட்சிகளாக விசாரித்து ஆவணங்களை பரிசீலித்து அரியலூர் மாவட்ட நுகர்வோர் ஆணைய நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் மற்றும் உறுப்பினர்கள் என். பாலு, வி லாவண்யா ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சேவை கட்டணம் செலுத்தி பிச்சை பிள்ளை அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை பரிசீலித்து மேற்கொள்ளப்பட்ட முடிவு குறித்து பிச்சைபிள்ளைக்கு எவ்வித பதிலும் தராமல் விட்டது. அரியலூர் வட்டாட்சியரின் சேவை குறைபாட்டை காட்டுகிறது என்று மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்

தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. இதனால் 4 வார காலத்துக்குள் நில அளவை செய்து தனி பட்டா கோரும் விண்ணப்பம் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு அதனை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் தவறினால் ரூ 5000 மனுதாரருக்கு அரியலூர் வட்டாட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட நில அளவையர் ஆகியோர் வழங்க வேண்டும் என்றும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் தீர்ப்பில், ஒரு அரசு ஊழியர் சட்டப்படி செய்ய வேண்டிய கடமையை சட்டவிரோதமாக பணம் பெற்றுக் கொண்டு செய்வதும் அரசு ஊழியர் சட்டப்படி செய்ய வேண்டிய கடமையை செய்வதற்கு சட்டவிரோதமாக பணம் கொடுப்பதும் சட்டப்படி குற்றமாகும். அரசு ஊழியர் சட்டப்படி செய்ய வேண்டிய கடமையை செய்வதற்கு சட்டவிரோதமாக பணம் கேட்டு இருந்தால் அதனை தகுந்த காவல் அலுவலரிடம் அல்லது தகுந்த அமைப்பிடம் புகார் தர வேண்டியது வழக்கின் புகார்தாரரின் கடமையாகும்.

சட்டப்படி அமைக்கப்பட்ட நீதிமன்றமாக செயல்படும் இந்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் அமைப்பின் முன்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள புகாரில் தாம் அரசு ஊழியர் சட்டப்படி செய்ய வேண்டிய கடமையை செய்வதற்காக சட்டவிரோதமாக கேட்கப்பட்ட பணத்தின் ஒரு பகுதியை முன்பணமாக கொடுத்தேன் என்று வழக்கின் புகார்தாரர் கூறுவதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. இதனை தமது புகாரிலும் சாட்சியத்திலும் உறுதியாக தெரிவித்துள்ள வழக்கின் புகார்தாரர் லஞ்சம் கேட்பது மட்டுமல்ல கொடுப்பதும் குற்றம் என்ற நிலையில் சட்டவிரோதமாக வழங்கப்பட்ட பணத்தை வட்டியுடன் திரும்ப பெற்றுத் தருமாறு பரிகாரம் கோரியுள்ளது சட்டப்படி ஏற்புடையதல்ல.

எனவே, இது குறித்து அரியலூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறைக்கான ஆய்வாளர் சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரியலூர் மாவட்ட நுகர்வோர் ஆணைய நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் மற்றும் உறுப்பினர்கள் என். பாலு, வி லாவண்யா ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 25 July 2022 11:54 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  2. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...
  6. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  7. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  9. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  10. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!