/* */

அரியலூர் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில்11,960 புதிய மின்னணு குடும்ப அட்டைகள்

அரியலூர் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் 11,960 புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் தகவல்.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில்11,960 புதிய மின்னணு குடும்ப அட்டைகள்
X

பைல் படம்.

அரியலூர் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் புதிய மின்னணு குடும்ப அட்டை கோரி பொதுமக்களிடமிருந்து 16,024 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 13,745 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, இதுவரை 11,960 புதிய மின்னணு குடும்ப அட்டைகள் அச்சிட்டு, வழங்கப்பட்டுள்ளது மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்தார்.

தமிழக அரசின் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் மாவட்ட வழங்கல் அலுவலகம் சார்பில் பொதுமக்களுக்கு மின்னணு குடும்ப அட்டை வழங்குதல், அத்தியாவசியப் பொருட்களை நியாயவிலைக் கடைகளுக்கு ஒதுக்கீடு செய்தல், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் குடும்ப அட்டை தொடர்பான மனுக்கள் மற்றும் அனைத்து விதமான புகார் மனுக்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளுதல், அத்தியாவசியப் பொருட்கள் கடத்தலை தடுத்தல், அலுவலகத்திற்கு நேரில் வருகை தரும் / தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் குடும்ப அட்டைதாரர்களுக்கு முறையாக பதில் அளித்தல், கிடங்குகள் மற்றும் நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களின் தரம் மற்றும் இருப்புகளை கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் பொதுமக்களுக்கு நியாயவிலைக்கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்களை தங்குதடையின்றி விநியோகிக்கும் வகையில் பொது விநியோகத்திட்டம் அரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, பொதுவிநியோகத் திட்டத்தின் அனைத்து சேவைகளும் குடும்ப அட்டைதாரர்களுக்கு முறையாக வழங்கப்பட்டு வருவது உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அரியலூர் மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்டத்தின்கீழ் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் மகளிர் குழுக்கள் ஆகியவற்றின் மூலம் 186 பகுதிநேர நியாயவிலைக்கடைளும், 265 முழுநேர நியாயவிலைக்கடைளும் என மொத்தம் 451 நியாயவிலைக்கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் முன்னுரிமை குடும்ப அட்டை, முன்னுரிமை குடும்ப அட்டை அந்தியோதயா அன்னயோஜனா, முன்னுரிமையற்ற குடும்ப அட்டை, முன்னுரிமையற்ற குடும்ப அட்டை சர்க்கரை அட்டை, பொருட்கள் இல்லா அட்டை ஆகிய குடும்ப அட்டை வகைகளைச் சார்ந்த 2,44,963 மின்னணு குடும்ப அட்டைகள் அரியலூர் மாவட்டத்தில் உள்ளன. குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாயவிலைக்கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்களான அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்ணெண்ணெய், துவரம்பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பல்வேறு விதமான அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் தங்களுக்கு தேவையான நகல் குடும்ப அட்டை, மின்னணு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் மற்றும் குடும்ப தலைவர் பெயர் மாற்றம் ஆகியவற்றை www.tnpds.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மின்னணு குடும்ப அட்டையில் பதிவு செய்யப்பட்டுள்ள கைபேசி எண் மாற்றம் செய்தல் மற்றும் குடும்ப அட்டையில் திருத்தங்கள் மேற்கொள்ள தங்களது பகுதிகளிலுள்ள வட்ட வழங்கல் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும், புதிய மின்னணு குடும்ப அட்டை பெறுவதற்கு 5-வயதிற்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்களின் ஆதார் நகல், குடும்ப தலைவர் புகைப்படம் மற்றும் குடியிருப்பிற்கான ஆவணங்களுடன் www.tnpds.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக புதிய மின்னணு குடும்ப அட்டை பெற விண்ணப்பிக்கலாம்.

தற்பொழுது புதிய மின்னணு குடும்ப அட்டை வழ்ஙகக்கோரும் விண்ணப்பங்கள், 15 தினங்களுக்குள் தீர்வு காண வேண்டும் என தமிழக அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, புதிய மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பங்களை துரிதமாக தீர்வு காணும் வகையில் வருவாய் ஆய்வாளர்கள் மூலம் தளவிசாரணை செய்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், விண்ணப்பதாரர்களுக்கு விரைவில் புதிய மின்னணு குடும்ப அட்டை கிடைப்பதற்கு வழிவகை ஏற்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்த புகார்களுக்கு 1967 மற்றும் 1800 4255 901 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் குடும்ப அட்டை தொடர்பான புகார்களை குடும்ப அட்டைதாரர்கள் தெரிவிக்கலாம்.

அரியலூர் மாவட்டத்தில் புதிய மின்னணு குடும்ப அட்டை கோரி பொதுமக்களிடமிருந்து 16,024 விண்ணப்பங்கள் வரப்பெற்றது. இதில் 13,745 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, 11,960 புதிய மின்னணு குடும்ப அட்டைகள் அச்சிட்டு, வழங்கப்பட்டுள்ளது. மேலும், 259 விண்ணப்பங்கள் தேவையான ஆவணங்களுடன் சமர்ப்பிக்க தெரிவிக்கப்பட்டு, சம்மந்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம் அரியலூர் மாவட்டத்தில் புதிய மின்னணு குடும்ப அட்டை பெறுவதற்கு பொதுமக்களிடமிருந்து வரப்பெறும் மனுக்களின் மீது மாவட்ட நிர்வாகத்தின் மூலம் உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, பொதுமக்களுக்கு தாமதமின்றி புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்கப்பட்டு வருகிறது என மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Updated On: 21 May 2022 7:57 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    விடாமுயற்சியும் தன்னம்பிக்கைக்கு உதாரணமாக திகழ்கிறது நிலவொளிப் பள்ளி -...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. வீடியோ
    களம் இறங்கிய NSG Commandos | அலறும் மம்தாவின் Trinamool Congress |...
  4. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  5. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  6. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  7. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  8. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  9. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  10. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!