/* */

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்தியா சாம்பியன்

டேவிஸ் கோப்பை டென்னிஸ் வரலாற்றில் பாகிஸ்தானிடம் தோற்றதில்லை என்ற பெருமையை இந்தியா தக்க வைத்துக்கொண்டது.

HIGHLIGHTS

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்தியா சாம்பியன்
X

டேவிஸ் கோப்பையை வென்ற இந்திய டென்னிஸ் அணி 

டேவிஸ் கோப்பை டென்னிஸ் உலக குரூப்1 பிளே-ஆப் சுற்றில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இடையிலான ஆட்டம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. 60 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக பாகிஸ்தான் சென்றிருந்த இந்தியா முதல் நாளில் அபாரமாக விளையாடியது.

ஒற்றையர் பிரிவில் இந்தியாவிற்கு தமிழகத்தை சேர்ந்த ராம்குமார், ஸ்ரீராம் பாலாஜி இருவரும் வெற்றியை தேடித்தந்தனர். இதனால் முதல் நாளில் இந்தியா 2-0 என்ற கணக்கில் வலுவான முன்னிலை பெற்றது.

இந்த நிலையில் 2-வது நாள் நடந்த இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி- சகெத் மைனெனி ஜோடி, பாகிஸ்தானின் முஜாமில் முர்தசா- அகீல் கான் இணையை எதிர்கொண்டது. பலத்த பாதுகாப்பு மத்தியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் யுகி பாம்ப்ரி- மைனெனி கூட்டணி 6-2, 7-6 என்ற நேர் செட்டில் முர்தசா இணையை தோற்கடித்து தொடரையும் வென்றது.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் புதுமுக வீரர் நிக்கி பூனச்சா 6-3, 6-4 என்ற நேர் செட்டில் பாகிஸ்தானின் முகமது சோயிப்பை வீழ்த்தி அசத்தினார். 5-வது ஆட்டம் நடத்தப்படவில்லை.

முடிவில் இந்தியா 4-0 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இதன் மூலம் டேவிஸ் கோப்பை டென்னிஸ் வரலாற்றில் பாகிஸ்தானிடம் தோற்றதில்லை என்ற பெருமையை இந்தியா தக்க வைத்துக்கொண்டது. இதற்கு முன்பு மோதிய 7 முறையும் இந்தியாவே வெற்றி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 5 Feb 2024 4:06 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  2. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  3. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!
  4. கவுண்டம்பாளையம்
    கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை
  5. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  6. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  7. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  8. ஈரோடு
    ஈரோடு: அவல்பூந்துறை அருகே தென்னக காசி பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி...
  9. கோவை மாநகர்
    கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக
  10. ஈரோடு
    மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு