கோவையில் மழை பெய்ய வேண்டி அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும் திருமணம்

கோவையில் மழை பெய்ய வேண்டி அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கோவையில் மழை பெய்ய வேண்டி அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும் திருமணம்
X

கோவையில் அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

கோவையில் மழை பெய்ய வேண்டி அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

மரங்கள் மழை பெய்வதற்கு காரணமாக இருப்பதோடு கார்பண்டை ஆக்சடை ஈர்த்துக்கொண்டு சுத்தமான காற்றினை நமக்கு சுவாசிப்பதற்காக நமக்கு வழங்குகிறது. தற்போது கோடை வெயில் கொளுத்தி வருவதாால் மழை பெய்யாதா? வெப்பம் தணியாதா என்ற ஏக்கம் எல்லோருக்கும் இருக்கிறது.

மரங்களின் ராஜா என்று அழைக்கப்படும் அரச மரத்தை சிவ பெருமானாகவும், மரங்களின் ராணியான வேப்பமரத்தை அம்பாளாகவும், பக்தர்கள் பாவித்து, அரச, வேம்பு மரத்திற்கு திருக்கல்யாணம் செய்து வைத்து வருகின்றனர்.

அப்படி செய்வதன் மூலம் குறைவில்லா சந்தான பாக்கியமும், கன்னிகா தானம் செய்த பலனும் கிடைக்கும். அத்துடன் மாதம் மும்மாரி மழை பெய்யும். பெண்களுக்கு ஏற்படும் மாங்கல்ய தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. இப்பலன் அனைவருக்கும் சென்று சேர கோவை நேரு நகர் மேற்கு பகுதியில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சண்முகநாதர் கோவிலில் அரச, வேம்பு திருக்கல்யாண நிகழ்ச்சியும், ஐம்பொன் விக்ரக பிரதிஷ்டையும் நேற்று நடந்தது.

கோவில் வளாகத்தில் உள்ள அரச மற்றும் வேம்பு மரத்தின் முன் வேள்விச்சாலை அமைத்து, வேதமந்திரங்கள் முழங்க மங்கல பொருட்கள் சமர்ப்பித்து மஞ்சள் நாணை சிவாச்சாரியார்கள், பொதுமக்கள் அனைவரும் வேப்பமரத்திற்கு அணிவித்தனர். வேப்பமரத்தில் அணிவித்த மலர் மாலைகளை, அரசமரத்திற்கு மாற்றி அணிவித்தனர். தொடர்ந்து சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்த தோடு, மொய் பணமும் எழுதினர்.

Updated On: 2 Jun 2023 4:03 PM GMT

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  மின்சார ரெயில்களில் ஏ.சி. பெட்டிகள்: தெற்கு ரயில்வே முடிவு
 2. இந்தியா
  மாணவர்களின் தற்கொலைகளை தடுக்கும் நலக்குழு: வழிகாட்டுதல்களை வெளியிட்டது...
 3. இந்தியா
  சிக்கிமில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்: 23 ராணுவ வீரர்கள் மாயம்
 4. தமிழ்நாடு
  இணையதள சேவை பாதிப்பு: சென்னை விமான நிலையத்தில் விமானங்கள்...
 5. இந்தியா
  இந்திய மாணவா்களுக்கு குறைந்த விலையில் மடிக்கணினி
 6. சோழவந்தான்
  வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில், ரத்த தான முகாம்:
 7. ஆன்மீகம்
  Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
 8. திருப்பூர்
  பில்டா் காபி நிலையம் அமைக்க மானியத்துடன் கடனுதவி; கலெக்டர் தகவல்
 9. தமிழ்நாடு
  திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் திறப்பு விழா
 10. தென்காசி
  தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்