/* */

ஓம் சிவாய நம...ஓம் சிவாய நம.... தீமைகள் விலகி, நன்மைகள் நடக்க தீபமேற்றி வழிபடுவோம்... வழிபடுவோம்...

special features of karthigai deepam கார்த்திகை தீபம்...தீபங்கள் பேசும் திருக்கார்த்திகை மாதம்... தீமைகள் அகன்று நன்மைகள் பரவட்டும் இந்நன்னாளில்.... தீபமேற்றுங்கள்... ஓம் நம சிவாய...

HIGHLIGHTS

ஓம் சிவாய நம...ஓம் சிவாய நம....  தீமைகள் விலகி, நன்மைகள் நடக்க  தீபமேற்றி வழிபடுவோம்... வழிபடுவோம்...
X

கார்த்திகை தீபத் திருநாளில் வீட்டின் வாசலில் கோலமிட்டு ஏற்றப்படும் தீபம்  (கோப்பு படம்)

special features of karthigai deepam

கார்த்திகை தீபம் என்பது கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் தமிழர் தமது இல்லங்களிலும் கோவில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் ஆகும்.

திருக்கார்த்திகை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குமுன், இறைவனை ஜோதியாக வணங்கி, போற்றியுள்ளனர் தமிழர்கள். இவ்வழிபாட்டை சங்க கால இலக்கியங்கள் , கார்த்திகை விளக்கீடு,என்றுகுறிப்பிட்டுள்ளன.விளக்கு வழிபாடு செய்த நிகழ்வுகள், அகநானுாறு மற்றும் நற்றிணை போன்ற நுால்களில் இடம்பெற்றுள்ளன.

special features of karthigai deepam


special features of karthigai deepam

கார்த்திகை மாதத்தையே முதல் மாதமாகக்கொண்டு , தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டதாகவும் ஒரு கருத்து உண்டு. கார்த்திகை தீபத்தன்று மட்டுமல்ல. எல்லா நாட்களிலுமே விளக்கேற்றுவது தமிழர் மரபு தினமும் , காலை, மாலை விளக்கேற்ற உகந்த நேரங்களாகும். சூரியோதயத்திற்கு முன், பிரம்மமுகூர்த்த வேளையில் காலை 4,30 -6.00மணி விளக்கேற்றினால், பெரும்புண்ணியம் உண்டாகும். முன்வினைப்பாவம் விலகும்.

மாலையில் தீபமேற்றினால், திருமணம் மற்றும் கல்வித்தடைநீங்கும் என்பது ஐதீகம் .பொதுவாக மாலை 6மணிக்கு தான் நாம் விளக்கேற்றுகிறோம். இதற்கு பதில், மாலை 4.30-6,00 மணிக்கு இடையே உள்ள பிரதோஷ வேளையில் விளக்கேற்றினால் சிவபெருமானும், நரசிம்மரும் நமக்குஅருளுவர்.

காரணம் அவர்களை வணங்க ஏற்ற நேரம் . இவை கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திரத்தன்று வீடு முழுக்க விளக்கேற்றுவது பற்றி சம்பந்தர் பாடியுள்ளார். மயிலாப்பூரில் தனக்கு நிச்சயம் செய்த பூம்பாவை என்ற பெண் திடீரென மரணமடையவே, விளக்கீடு காணாதே போதியே பூம்பாவாய்...என்று அவர் பாடுவதில்இருந்து இந்த விழாவின் மேன்மையை அறியலாம்.

special features of karthigai deepam


special features of karthigai deepam

தீபஜோதி என்பது அக்னி தத்துவம். அக்னியின் சொரூபமாக ஈசனின் நெற்றிக்கண் அமைந்துள்ளது. அதில் எழுவது சாதாரண தீ அல்ல அது. அநியாயக்காரர்களைக்கொல்லும். மற்றவர்களுக்கு ஞானஜோதியாய் தெரியும்.

ஆசையைத்துாண்டும் மன்மதனை, சிவபெருமான் எரித்தது ஞானத்தீயால் தான். ஆசைகள் அதிகரிக்க, அதிகரிக்க, பிறவிகளும்அதிகரிக்கும். அந்த ஆசைத்தீ அடங்க சிவனின் நெற்றிக் கண்ணை நாம் தரிசிக்க வே ண்டும். இதன்மூலம் பிறப்பற்ற நிலையை அடைந்து நித்ய ஆனந்தத்தை அடையலாம். கார்த்திகைத் திருநாளில் திருவண்ணாமலையில் ஏற்றப்படும் மலை தீபம், சிவாம்சம் கொண்டதோ யாராலும் அணுக முடியாத ஞானமலை அண்ணாமலை.

நினைத்தாலே முக்தி தரும் மலை அண்ணாமலை. தேவர்களாலும் அறிந்துகொள்ள முடியாத பரம்பொருள்சிவன் அவர், பூலோக மக்கள் மீது கொண்ட கருணையால் தன்னை எளிமைப்படுத்தி அருள்புரிவதற்காக நெருப்பு வடிவில் காட்சி தருகிறார். சூரபத்மனின் கொடுமைகளைத் தாங்க முடியாத தேவர்கள், சிவபெருமானிடம் முறையிட்டபோது , அவரது நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகள் கிளம்பின. அவை சரவணப்பொய்கையில் சிறு குழந்தையாக உருவெடுத்தன.

அதுபோல, பெருஞ்சுடரான அண்ணாமலை தீபமே. நம் வீட்டு சிறு அகல் விளக்குகளில் குட்டிக்குழந்தை முருகனாக ஒளி வீசுகிறது. வாசலில் கார்த்திகை தீபம் ஏற்றும்போது குறைந்த பட்சம் ஆறு தீபங்களை ஏற்ற வேண்டும். விளக்கு இல்லாவிட்டால் , குடியிருக்கும் வீடு இருண்டு விடுவதைப்போல் மனம் என்னும் வீட்டில் ஒளி இல்லாவிட்டால் அநியாயங்களே வெளிப்படும்.

special features of karthigai deepam


special features of karthigai deepam

கணவர் மற்றும் பிள்ளைகள் தீய பழக்கங்களில் ஈடுபட்டிருந்தால் அவர்கள் திருந்தி, நற்குணங்கள் பெற பெண்கள் கார்த்திகை விரதம் இருப்பர். திருக்கார்த்திகை தொடங்கி, ஓர்ஆண்டு மாதந்தோறும் கார்த்திகை நட்சத்திரத்தில் இவ்விரதத்தை மேற்கொள்ள வேண்டும். கார்த்திகை திருநாளன்று தீபமேற்றி, பிரகாசமான வாழ்வைப் பெறுவோம். உலகம் ஒளிரட்டும். தீமைகள் விலகட்டும். நன்னெறி தழைக்கட்டும் இதனால் தீபமேற்றுவோம்.

தமிழ்நாட்டில் கார்மேகம் சோணைமழை பொழியும் மாதம் கார்த்திகை மாதம். கார் என்றும், கார்த்திகை என்றும் வழங்கப்படும் காந்தள் பூ மிகுதியாக மலரும் காலம் கார்த்திகை மாதம்.பண்டைய தமிழர்கள் ஒரு மாதத்தில் உள்ள நாட்களை 27 நாள்மீன் பெயர்களால் வழங்கி வந்தனர். அந்த நாள்மீன்களில் ஒரு நாள்மீன் கார்த்திகை-நாள். இவ்வாறு ஒவ்வொரு மாதமும் வருகின்ற கார்த்திகைநாள் முக்கியமான நாளாகத் தமிழர்களால் வழிபடப்பட்டு வருகின்றது

கார்த்திகை மாதத்தில் வருகின்ற கார்த்திகை நாள் ஏனைய கார்த்திகை நாட்களினை விடவும் விமர்சையாகத் தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகின்ற ஒரு விழா. மாலை வேளையில் வீடுகளின் வெளிப்புறங்களிலும், வீட்டு முற்றத்திலும் விளக்கேற்றிக் கொண்டாடுவார்கள். திருக்கார்த்திகை தினத்தன்று ஆலயங்களில் தீபத் திருவிழா நடைபெறும். பக்தர்கள் தீப விளக்குகள் ஏற்றிவைத்து வழிபடுவர். ஆலயத்தின் முன்புறத்தே வாழை மரம் நட்டு பனையோலைகளால் அதனைச் சுற்றி அடைத்து "சொக்கப்பனை"க்குஅக்கினியிட்டு ஜோதி வடிவாகக் காட்சியளிக்கச் செய்து சிவபெருமான் ஜோதிப் பிழம்பாகத் தோன்றிய காட்சியை நினைவு கூர்ந்து வழிபடுவர். இல்லங்களை விளக்குகளால் அலங்கரித்து ஒளி வெள்ளத்தில் இல்லங்களை மிதக்கவைத்து வழிபடுவர்.

படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனும், காத்தல் தொழிலைச் செய்யும் விட்டுணுவும் நானே பெரியவன் என்று வாதாடிப் பல வருடங்கள் போரிட்டனர். சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றினார். அடியையும் முடியையும் தேடும்படி அசரீரி கூறியது. இருவரும் அடிமுடி தேடிக் காணமுடியாமல் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர். அவர்கள் இருவரும் தாம் கண்ட சோதியை எல்லோரும் காணும்படி காட்டியருள வேண்டும் என்று விண்ணப்பிக்க அவர் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று காட்டியருளினார். இந்தத் தத்துவத்தை விளக்குவதே கார்த்திகை விளக்கீடு ஆகும்.

திருவண்ணாமலை

special features of karthigai deepam


special features of karthigai deepam

காலையில் பரணி தீபம் ஏற்றியவுடன், மாலை மலையில் இத்தீபம் ஏற்றப்படும். இத்தீபம் சிவன் அக்னி பிழம்பாக, நெருப்பு மலையாக நின்றார் என்ற ஐதிகப்படி மலையில் தீபம் ஏற்றப்படுகிறது. இத்தீபம் ஏற்றும் மலையானது 2668 அடி உயரம் கொண்டது. இம்மலை மீது தீபம் ஏற்ற செம்பு, இரும்பு கொப்பரை கொண்டு தயாரிக்கப்பட்ட கொப்பரையில் தீபம் ஏற்றுவர்.இத்தீபம் ஏற்றச் சுமார் 3000 கிலோ மேற்பட்ட நெய்யும், 1000 மீட்டர் காட துணியும் கொண்டு ஏற்றப்படுகிறது.

இதன் முதல் நாளான பரணி நட்சத்திர நாளில் சைவ சமயிகள் பகலில் மட்டும் ஒருபொழுது உண்டு கார்த்திகையன்று அதிகாலையில் நீராடி இறைவனை வழிபட்டு நீர் மட்டும் அருந்தி இரவு கோயிலுக்குச் சென்று தரிசனம் பெறுவர். மறுநாட்காலையில் காலைக்கடன்களை முடித்து நீராடி பாரணை அருந்தி விரதத்தை நிறைவு செய்வர். பன்னிரண்டு ஆண்டுகள் இவ்விரதம் இருப்பவர்கள் வேண்டும் வரங்களைப் பெறலாம் என்பது ஐதீகம்.

பௌர்ணமி நிலவு கிழக்கு வானில் தென்படும் வேளையில் வீட்டு வாசலில் வாழைக் குற்றி நாட்டி வைத்து அதன் மேல் தீப பந்தம் ஏற்றியும் வீடுகளுக்குள்ளும் வெளியிலும் சிட்டி விளக்குகளில் தீபமேற்றி நேர்த்தியாக அலங்கரித்து வீடுகளை தீபங்களால் அழகுபடுத்தி வழிபடுவர்

கார்த்திகை நட்சத்திரத்தன்று பூரணை கூடுகின்ற மாதம் கார்த்திகை ஆகும்.இதனால் இக்கார்த்திகை நாள் திருக்கார்த்திகை எனப்படுகிறது. கார்த்திகை நட்சத்திரம் ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களைக் கொண்டிருந்த போதிலும் அதிலுள்ள ஏழு நட்சத்திரங்கள் பிரகாசமானவை. இதிலுள்ள மிகப்பிரகாசமான ஆறு நட்சத்திரங்களே கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் எனப்படுகிறது.

Updated On: 5 Dec 2022 2:42 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!