/* */

தேய்பிறை பிரதோஷம் இன்று; சிவனை வழிபடுவதே நன்று

Pradosham Today -புரட்டாசி மாதம் தேய்பிறை பிரதோஷம் கூடிய சுபயோக சுபதினத்தில், இன்று (செப்டம்பர் 23) இப்பதிவை ஒருமுறை அகம் நிறைந்த பக்தியோடு இறைவனை வேண்டி படிப்பவர்களின் மாற்றம் நிகழ்வது உறுதியாகும்.

HIGHLIGHTS

தேய்பிறை பிரதோஷம் இன்று; சிவனை வழிபடுவதே நன்று
X

சிவனை போற்றி துதி பாடுவோம்; மன நிம்மதியை நாடுவோம்

Pradosham Today -ஓம் சிவசிவ சிவயநம ஓம் நமசிவாய

நந்தீஸ்ரரை வணங்கி, இறைவன் அருளுக்கு‌ பாத்தியமாகும் அனைத்து சிவபக்தர்களுக்கும் அன்னை ஆதிசக்தியின் அருளும் அம்மையப்பன் திருவருளும் நவக்கோடி சித்தர்களின் பரிபூரண ஆசியும் சப்தரிஷிகளின் வாசியும் பெற்று, வாழ்வில் இதுவரை இருந்து வந்த சகல விதமான தோஷங்களும் சங்கடங்களும் கஷ்டங்களும் விலகி இன்பம் உண்டாகும்.

ஓம் சிவசிவ சிவயநம ஓம் நமசிவாய நற்பவி! நற்பவி!! நற்பவி!!!

தென்னாடுடைய சிவனே போற்றி!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

அண்ணாமலை எம் அண்ணா போற்றி!

கண்ணாரமுதக் கடலே போற்றி.

சீரார்ப்பெருந்துறை நம் தேவனடி போற்றி

ஆராத இன்பம் அருளும் மலை போற்றி

பராய்த்துறை மேவிய பரனே போற்றி

சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி

காண்பறிய பேரருளே ஜோதியே ஜோதிவானவனே தில்லையில் கூத்தனே தென்பாண்டி நாட்டானே மதுரையின் மாப்பிள்ளையே மீனாட்சி சுந்தரேஸ்வரா எம் காவியத்தின் தலைவா விரிசடையனே எம் காதலனே எம்மை ஆளும் பரம்பொருளே பார்வதி பரமேஸ்வரா உம் திருவடி போற்றி


ஆரூர் அமர்ந்த அரசே போற்றி

சீரார் திருவையாறா போற்றி

ஏகம்பத்துறை எந்தாய் போற்றி

பாகம் பெணுரு ஆனாய் போற்றி

தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி

இன்றெனக்கு ஆரமுதானாய் போற்றி

குவளைக் கண்ணி கூறன் காண்க அவளுந்

தானும் உடனே காண்க காவாய் கனகத் திரளே போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி

நந்தீஸ்வரர் 108 போற்றி

ஓம் அம்மையப்பன் வாகனனே போற்றி

ஓம் அன்பர்க்கு உதவுபவனே போற்றி

ஓம் அநுகூலனே போற்றி

ஓம் அருந்துணையே போற்றி

ஓம் அண்ணலே போற்றி

ஓம் அருள் வடிவே போற்றி

ஓம் அனுமன் ஆனவனே போற்றி

ஓம் அரக்கர் அழிவே போற்றி

ஓம் அடியார்க்கு அடியவனே போற்றி

ஓம் அபிஷேகப் பிரியனே போற்றி

ஓம் ஆலயமுன் இருப்பவனே போற்றி

ஓம் ஆணவமழிப்பவனே போற்றி

ஓம் ஆதரிப்பவனே போற்றி

ஓம் ஆரூரில் நிற்பவனே போற்றி

ஓம் இனியவனே போற்றி

ஓம் இணையிலானே போற்றி

ஓம் இடப உருவனே போற்றி

ஓம் இமயத்திருப்பவனே போற்றி

ஓம் இன்னல் தீர்ப்பவனே போற்றி

ஓம் இசையில் மகிழ்பவனே போற்றி

ஓம் ஈர்ப்பவனே போற்றி

ஓம் ஈடிலாதவனே போற்றி

ஓம் உத்தமனே போற்றி

ஓம் உபகாரனே போற்றி

ஓம் உள்ளம் கவர்வோனே போற்றி

ஓம் உட்கார்ந்திருப்போனே போற்றி

ஓம் எளியவனே போற்றி

ஓம் ஏற்றமளிப்பவனே போற்றி

ஓம் ஐயனே போற்றி

ஓம் ஐயம் தீர்ப்பவனே போற்றி

ஓம் கனிவுருவே போற்றி

ஓம் களிப்புருவே போற்றி

ஓம் களங்கமிலானே போற்றி

ஓம் கர்வம் குலைப்போனே போற்றி

ஓம் கலைக் களஞ்சியமே போற்றி

ஓம் கயிலைக் காவலனே போற்றி

ஓம் கம்பீர உருவனே போற்றி

ஓம் குண நிதியே போற்றி

ஓம் குருபரனே போற்றி

ஓம் குறை களைவோனே போற்றி

ஓம் கூத்தனோடு உறைபவனே போற்றி

ஓம் கோயில் நாயகனே போற்றி

ஓம் சிவபுரத்தனே போற்றி

ஓம் சிவதூதனே போற்றி

ஓம் சிவனடியானே போற்றி

ஓம் சிவகணத்தலைவனே போற்றி

ஓம் சிவ ஸ்வரூபனே போற்றி

ஓம் சிவஞான போதகனே போற்றி

ஓம் சிலாதர் மைந்தனே போற்றி

ஓம் சிரஞ்சீவியே போற்றி

ஓம் சுருதிகளைக் காத்தவனே போற்றி

ஓம் சைவம் வளர்ப்பவனே போற்றி

ஓம் சொக்கன் சேவகனே போற்றி

ஓம் சோகம் தீர்ப்பவனே போற்றி

ஓம் ஞானியே போற்றி

ஓம் ஞானோபதேசியே போற்றி

ஓம் தருமவிடையே போற்றி

ஓம் தயாபரனே போற்றி

ஓம் தளையறுப்பவனே போற்றி

ஓம் தட்சணை தண்டித்தவனே போற்றி

ஓம் தவசீலனே போற்றி

ஓம் தஞ்சம் அளிப்பவனே போற்றி

ஓம் தீதை அழிப்பவனே போற்றி

ஓம் துயர் துடைப்பவனே போற்றி

ஓம் துதியாரைத் திருத்துபவனே போற்றி

ஓம் நந்தியே போற்றி

ஓம் நலமளிப்பவனே போற்றி

ஓம் நமனை வென்றவனே போற்றி


ஓம் நந்தனுக்கு அருளியவனே போற்றி

ஓம் நாடப்படுபவனே போற்றி

ஓம் நாட்டியப்பிரியனே போற்றி

ஓம் நாதனே போற்றி

ஓம் நிமலனே போற்றி

ஓம் நீறணிந்தவனே போற்றி

ஓம் நீதி காப்பவனே போற்றி

ஓம் பாரக்கிரமனே போற்றி

ஓம் பக்தியில் ஆழ்ந்தவனே போற்றி

ஓம் பசவேசன் ஆனவனே போற்றி

ஓம் பகை அழிப்பவனே போற்றி

ஓம் பதமளிப்பவனே போற்றி

ஓம் பர்வதமானவனே போற்றி

ஓம் பிரம்பேந்தியவனே போற்றி

ஓம் புண்ணியனே போற்றி

ஓம் புருஷோத்தமனே போற்றி

ஓம் பெரியவனே போற்றி

ஓம் பெருமையனே போற்றி

ஓம் மஞ்சனே போற்றி

ஓம் மலநாசகனே போற்றி

ஓம் மகிழ்வளிப்பவனே போற்றி

ஓம் மறையே கால்களானவனே போற்றி

ஓம் மால்விடையே போற்றி

ஓம் மகாதேவனே போற்றி

ஓம் முனியவனே போற்றி

ஓம் முற்றும் உணர்ந்தவனே போற்றி

ஓம் யோகியே போற்றி


ஓம் ருத்திரப்பிரியனே போற்றி

ஓம் வள்ளலே போற்றி

ஓம் வல்லாளா போற்றி

ஓம் வித்தகனே போற்றி

ஓம் வண்ணோர் திலகமே போற்றி

ஓம் வீர உருவமே போற்றி

ஓம் வீரபத்திரனே போற்றி

ஓம் வெண்ணிறமேனியனே போற்றி

ஓம் வெற்றியளிப்பவனே போற்றி

ஓம் வீரசைவ நாயகனே போற்றி

ஓம் ஸ்ரீ சைவ நாதனே போற்றி

ஓம் நம்பினோர் வாழ்வே போற்றி

ஓம் நந்திகேஸ்வரனே போற்றி போற்றி

ஓம் சிவசிவ சிவனே சிவபெருமானே போற்றி போற்றி

விரைவினில் வந்தருள் விமலா போற்றி போற்றி.

ஓம் மஹா, ஈசா மகேசா போற்றி போற்றி

மனதினில் நிறைந்திடும் பசுபதியே போற்றி போற்றி.

ஓம் மூவுலகிற்கதிபதியே முதல்வா போற்றி போற்றி

மூவா இளமையருளும் முக்கண்ணா போற்றி போற்றி.

ஓம் ஐந்தெழுத்தின் உட்பொருளே போற்றி போற்றி

திரு ஐயாறமர்ந்த குருபரனே போற்றி போற்றி.

ஓம் சத்தியமே சத்தியத்திற்கோர் திருமுகமே போற்றி போற்றி.

ஓம் உமையொருபங்கா போற்றி போற்றி

அதற்கு மோர்த்திருமுகமே போற்றி போற்றி.

ஓம் உலக நாயகனே லோக நாயகா போற்றி போற்றி

அகோரத்திற்கோர் திருமுகமே போற்றி போற்றி.

ஓம் உருத்திர பசுபதியே போற்றி போற்றி.

ஓம் உருத்திர தாண்டவ சிவனே போற்றி போற்றி.

ஓம் ஓம் அகோர மூர்த்தியே லிங்கமே போற்றி போற்றி

அதற்குமோர் திருமுகமே போற்றி போற்றி.

ஓம் உமையே அம்பிகையே அம்பிகையின் பாகா போற்றி போற்றி

அம்பிகைக்கோர் முகமே அம்பிகா பதியே போற்றி போற்றி.

ஓம் பஞ்சாட்சரனே பஞ்சமுகங் கொண்ட பரமனே போற்றி போற்றி.

ஓம் சாம்பசிவ சதா சிவனே சத்குருவே போற்றி போற்றி.

ஓம் ஜடையுடைய ஜடாதரனே ஜம்பு நாதா போற்றி போற்றி.

ஓம் சந்திரனை சூரியனை நெருப்பைக் கொண்ட முக்கண்ணா போற்றி போற்றி.

ஓம் கங்காதரனே கங்களா போற்றி போற்றி.

ஓம் இடபத்தூர்ந்து செல்லும் இறைவா போற்றி போற்றி

ஓம் சிவ சிவ ஓம் சிவ சிவ ஓம் சிவ சிவ

ஹரி ஓம் சிவசிவ அருணா போற்றி

திரிகுண் புவிவரு தேவா போற்றி

சரா சரங்களின் தலைவா போற்றி

பராபர ஒளியே பானுவே போற்றி

நவக்கோள் நாயக நடுவே போற்றி

இந்துசேய் புந்தி அந்தணன் வெள்ளி மந்தன் ராகு கேது கோள் போற்றி

கஷ்ட நஷ்ட கண்ட மணுகாது இஷ்ட சிந்தியும் இருநில வாழ்வும் செல்வமும் கீர்த்தியும் தேவே தருக

நல்லவை யென்றும் நானே பெறுக

அருள்வாய் அருள்வாய் அருநவகோள்காள் சரணம் சரணம் ஹரி ஓம் நமஸ்தும்

நங்-மங்-சிங்-வங்-அங்-உங்-ஓங்-உங்ஓங்-ஹிங்-ஸ்ரீங் மந்திர தோத்திர சித்து ஹரி நமா ஓம்

ஓம் நந்தீஸ்வரனே நற்கதி சேர்க்கும் எம் குருவே ஈசன் திருவடி சேர்ப்பாய் எம் குருவே போற்றி போற்றி

ஓம் பதினெண் சித்தர்கள் போற்றி

ஓம் குருவின் திருவடி போற்றி

ஓம் ஸ்ரீ பஹூளாதேவி சமேத ஸ்ரீ காகபுஜண்டரிஷி சித்தசுவாமியே போற்றி போற்றி

ஓம் சிவசிவ சிவயநம ஓம் ஸ்ரீ நந்திதேவாய போற்றி

ஓம் சிவசிவ சிவயநம ஓம் ஸ்ரீ சிவஞானசித்தரிஷி சித்தசுவாமியே போற்றி போற்றி

ஓம் சிவசிவ சிவயநம ஓம் நமசிவாய நற்பவி! நற்பவி!! நற்பவி!!!

இப்பதிவை ஒருமுறை அகம் நிறைந்த பக்தியோடு இறைவனை வேண்டி படிக்க வேண்டும்; நிச்சயம் அவர்களது வாழ்வில் மாற்றம் நிகழும்.

ஓம் சிவசிவ சிவயநம ஓம்



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1,Click Here-2

Updated On: 23 Sep 2022 10:11 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!