/* */

தைரியம் மிக்க கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் சிறப்புதான் என்ன?

Jyeshta Star in Tamil-நட்சத்திரங்கள் மொத்தம் 27. அதில்ஒன்று கேட்டை. இதனை ஜேஷ்டா நட்சத்திரம் என்று சொல்வதும் உண்டு. இதன் பலனை பார்ப்போம்.

HIGHLIGHTS

Jyeshta Star in Tamil
X

Jyeshta Star in Tamil


Jyeshta Star in Tamil-உலக இயக்கத்திற்கே ஒரு நேரத்தில் ஜோதிடத்தில் பலன் சொல்லப்படுகிறது. அந்த வகையில் நாம் பிறக்கும் தேதி நேரத்தினை கொண்டு அன்றைய நாள் நட்சத்திரம் பிறந்த நட்சத்திரமாக கருதப்படுகிறது.

அந்த நேரம், நாள், தேதி , நட்சத்திரத்தினை வைத்து பின் ஜாதகத்தினை கணிக்கின்றனர். பலர் ஜோஷியத்தினை நம்புவதில்லை. ஆனால் ஒரு சிலர் முழுவதுமாக நம்பாமல் இதனை ஒரு வழிகாட்டியாக வைத்துக்கொள்கின்றனர். உங்களுக்கு தெரியுமா? இன்று சந்திராஷ்டமம் என்றால் அன்றைய தினம் எந்த வேலையும், பேச்சையும் பேசாமல் இருப்பவர்கள் நம்மில் எத்தனை பேர் இருக்கிறார்கள் தெரியுமா? ஆனால் உண்மையில் சந்திராஷ்டமத்தில் பிரச்னைகள் வருகிறது என்பது பலரும் அனுபவத்தில் கண்டுள்ளனர் என்பதே உண்மை.

27 நட்சத்திரம் 12 ராசிகள்

மொத்தம் 12 ராசியும் ராசிக்குரிய நட்சத்திரங்கள் மொத்தம் 27 உள்ளன. ஒவ்வொரு நட்சத்திரமும் பாதங்களாக உட்பிரிவுகளை கொண்டுள்ளது. அ தனை வைத்து அவர்களுடைய எதிர்காலம் குணநலம் உள்ளிட்டவைகளை ஜோசியர்கள் கணித்துவிடுகின்றனர். தமிழகத்தினைப் பொறுத்தவரை பாதிக்கும் மேலானோர்ஜோதிடத்தினை நம்புவதால் ஜோதிடத்தின் பலன்களை வழிகாட்டியாக தங்கள் வாழ்நாளில் பயன்படுத்திகொள்கின்றனர்.

கேட்டை நட்சத்திரத்தினை ''ஜேஷ்டா''நட்சத்திரம் என்றும் சொல்வது உண்டு. அந்த வகையில் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிக தைரியம் மிக்கவர்களாக இருப்பார்கள். புதனுக்கு உரிய நட்சத்திரங்களில் இது இரண்டாவது நட்சத்திரமாக அமைந்துள்ளது. நல்லகுணநலன் கொண்டவர்களாக இருப்பதோடு அடிக்கடி தன்னுடைய கோப குணத்தினால் மற்றவர்களை திட்டிவிட்டு பின்னர் வருந்துபவர்களாகவும்இருப்பர்.மற்றவர்களுக்கு உதவுவதில் தயாள குணம் கொண்டவர்கள். முகமலர்ச்சி கொண்டவர்கள். காசு சேர்ப்பதில் கெட்டிக்காரர். ஒரு சில நேரங்களில் கிடைத்தவரை போதும் என மனதிருப்தியடைவர். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலும் சுயதொழில் செய்யும் குணம் கொண்டவர்களாகவே இருப்பர். மற்றவர்களிடம் வேலை செய்வது இவர்களுக்கு பிடிக்காத ஒன்று. கோட்டை கட்டிஆள்வார்கள் என்று சொல்லப்பட்டாலும் ஆளாவிட்டாலும் கோட்டையில் இருப்பவர்களோடு நட்பில்இருப்பார்கள்.

சுயமான சிந்தனை கொண்டவர்கள். புத்தக வாசிப்பி்ல் அக்கறை உண்டு. சண்டை நடத்துவது என்பது இவர்களுக்கு பிடிக்காத ஒன்று. எதிராளியின் மனசு அறிந்து பேசும் குணம் கொண்டவர்கள். பேச்சாற்றல் மிக்கவர்கள் எதிர்கால நலனில் அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள். பாச்தோடு இருப்பதோடு கண்டிப்பு மிக்கவர்களாகவும் இருப்பார்கள். தெய்வ பக்தி அதிகம் கொண்டவர்களாக கேட்டை நட்சத்தில் பிறந்தவர்கள் இருப்பார்கள்.

இனி பாதவாரியான பலன்களைப் பார்ப்போம்...

கேட்டை 1-ம் பாதம்:

நட்சத்திர அதிபதி - புதன்; ராசி அதிபதி - செவ்வாய்; நவாம்ச அதிபதி - குரு

கேட்டை 1 ம் பாதத்தில் பிறந்தவர்கள் கலைகளில் நன்கு தேர்ச்சியடைந்தவர்களாக இருப்பார்கள். எழுதுவதில் கீர்த்தியையும் நல்ல எழுத்தாற்றல் மிக்கவராகவும் இருப்பார்கள். தன்னைப்பற்றி மற்றவர்களிடம் பெருமையாக பேசும் குணம் கொண்டவர்களாக இருப்பர். பெண்களிடம் அதிக பாசம் கொண்டவர்களாக இருப்பதும் உண்டு. மற்றவர்களுக்கு உதவி செய்வதில்இவர்களைப்போல் யாரும்இருக்க முடியாது. அத்தகைய தர்ம குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். மேலும்அதி தைரியம் கொண்டவர்களாக இருப்பதும் இவர்களுடைய குணம்.

கேட்டை 2-ம் பாதம்:

நட்சத்திர அதிபதி - புதன்; ராசி அதிபதி - செவ்வாய்; நவாம்ச அதிபதி - சனி

கேட்டை 2ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு முன்கோபம் அதிகம் காணப்படும்.இதனால் இவர்களுடைய குணத்தால் ஒரு சில பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புண்டு. குறும்புத்தனம் அதிகம் இவர்களிடம் காணப்படும். மேலும் அடிக்கடி உடல் நல பாதிப்பால்சிரமப்படுபவர்களாக கூட இருப்பார்கள். கலை,மற்றும் சங்கீதத்தில் விருப்பம் உடையவர்களாக இருப்பதோடு அதற்கு தம்மால் ஆன உதவிகளையும் செய்ய கூடியவர்கள். மற்றவர்களுடன் எப்போதும் அழகாகவும் இனிமையாகவும் பேசும் பண்பு கொண்டவர்களாக இருப்பது இவர்களின் சிறப்பு ஆகும்.

கேட்டை 3-ம் பாதம்:

நட்சத்திர அதிபதி - புதன்; ராசி அதிபதி - செவ்வாய்; நவாம்ச அதிபதி - சனி

இவர்கள் இயற்கை உணவுகளை விரும்பி சாப்பிடும் குணம் கொண்டவராக இருப்பார்கள். மேலும் அடிக்கடி உடல்நல பாதிப்பால் சிரமப்படுவார்கள். மற்றவர்களைக் கண்டு பொறாமை ப்படுவதும், தாழ்மையான குணம் கொண்டவர்களாக திகழ்வார்கள். ஆடு, மாடு வளர்ப்பதில் அதிக ஆர்வம் இவர்களுக்குஉண்டு. மற்றவர்களுக்காக உதவியில் தாமே முன்நின்று அனைத்தும் செய்யக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். சண்டை சச்சரவுகளில் அதிக ஆர்வம் காட்டுபவர்களாகவும்இருப்பார்கள்.

கேட்டை 4-ம் பாதம்:

நட்சத்திர அதிபதி - புதன்; ராசி அதிபதி - செவ்வாய்; நவாம்ச அதிபதி - குரு

அன்பும் கனிவும் மிக்கவர்களாக இருப்பீர்கள். சொன்ன வார்த்தையைக் காப்பாற்றுவீர்கள். ஒழுக்கத்தில் கண்டிப்பாக இருப்பீர்கள். வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று கறாராகப் பேசுவீர்கள். மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்பதற்காக ஆடம்பரமாக செலவு செய்வீர்கள். எப்போதும் தனிமையில் இருப்பதையே விரும்புவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பும் அவர்களால் நன்மைகளும் ஏற்படும். கலகங்கள், குரூர புத்தி, வஞ்சனைக்குணம், தாய்வீட்டின் பெருமைகளை கூறுபவர்களாக இவர்கள்இருப்பார்கள். பிறரைஏமாற்றும் குணம் கொண்டவர்களாகவும் ஒருசிலர்இருப்பதுண்டு.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 22 April 2024 5:31 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் தூய்மை பணியில் ஈடுபட்ட அமைச்சர்
  7. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  8. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்