/* */

நீங்கள் பிறந்த மாதத்தின் ஜென்மநட்சத்திரத்தன்று ஜென்ம நட்சத்திர கோயிலுக்கு போங்க...பாகம்-2

Jenma Natchathiram-வாழ்க்கை என்பது மேடுபள்ளம் நிறைந்தது. கஷ்டங்களைத் தீர்க்க கடவுளை நாடுகிறோம். அதுவே ஜென்மநட்சத்திர கடவுளை தரிசித்தால் உங்கள் கஷ்டங்கள் பனி போல விலகிவிடும். படிச்சு பாருங்க...

HIGHLIGHTS

Jenma Natchathiram
X

Jenma Natchathiram

Jenma Natchathiram-மனிதர்களை வழி நடத்துவது ஆன்மீகம் ஒரு புறம் என்றாலும் ஜோசியம் வழிகாட்டியாக அவ்வப்போது நமக்கு சமிக்ஞைகளை தருகிறது. பலர் இதனை நம்புகின்றனர். செய்தித்தாளாகட்டும் காலண்டராகட்டும், விடிந்தவுடன் இன்றைய ராசி பலனை பார்க்கவே ஒரு கூட்டம் இருக்குங்க நம் நாட்டில.

ஜோசியத்தில் பல விஷயங்கள் எதிர்கால கணிப்புகள் ஒரு சில நேரங்களில் பலன் தருகின்றன. அக்காலத்தில் மன்னர்கள் ஆட்சியில் ஜோசியர்கள் சொன்னதை வைத்துதான் மன்னர்களே முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதாக வரலாறுகளும் தெரிவிக்கின்றன. அந்த வகையில் உண்மையில் முழுமையாக ஜோதிடத்தினை கற்றுணர்ந்தவர்கள் கூறுவது நிச்சயம் பலித்தும் விடுகிறது. இதனை நாமேஅனுபவ பூர்வமாக கண்டுள்ளோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அந்த வகையில் ஒவ்வொருவரும் பிறந்த மாதத்தில் வரும் ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் தவறாமல் உங்களின் ஜென்ம நட்சத்திரம் அமைந்துள்ள கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று அபிஷேகம் செய்து உங்கள் நட்சத்திரத்துக்கு ஏற்ற வஸ்திரத்தை சுவாமிக்கு அலங்காரப்படுத்தி புஷ்பம் , மஞ்சள், குங்குமம் ,எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை கோவிலுக்கு வாங்கிக் கொடுத்து உங்கள் நட்சத்திர அதிபதியின் (கிரகத்தின்) எண்ணிக்கையின் படி அன்னதானம் செய்துவிட்டு வந்தால் உங்கள் நட்சத்திர தெய்வம்உங்களுக்கு முழு யோகத்தை அளிப்பார் ... இதனைத் தவறாது செய்துதான் பாருங்களேன்... அதற்கு பிறகு உங்களுக்கு ஏற்படும் மாற்றங்களைக் கண்டு நீங்களேஅறிந்து கொள்வீர்கள் இதன் மகிமையை...

நட்சத்திரங்களுக்குண்டான கோயில் எது? எப்படி செல்லவேண்டும் என்பதைப் பற்றி விரிவாக பார்ப்போம்.

விசாகம்:

கோயில்: பண்பொழி திருமலை குமாரசுவாமி கோயில்

தல வரலாறு: பூவன்பட்டர் என்ற அர்ச்சகரின் கனவில் முருகன் தோன்றி, புதையுண்டு கிடக்கும் சிலையை திருமலையில் பிரதிஷ்டை செய்ய உத்தரவிட்டார். அதன்படி, பந்தளமன்னர் கோயில் கட்டினார். மண்டபம் எழுப்புவதற்கான கற்களை, சிவகாமி பரதேசி என்ற முருக பக்தை, மலையடிவாரத்திலிருந்து வாழைமட்டை மூலம் இழுத்துச் சென்ற பெருமையுடையது.

சிறப்பு: விசாகம் என்றால் "மேலான ஜோதி'. இந்த நட்சத்திரத்தின் ஒளிக்கிரணங்கள் இம்மலையில் படுவதால் விசாக நட்சத்திரத்தினர் வழிபட்டால் வாழ்வில் நல்ல திருப்பம் உண்டாகும்.

இருப்பிடம்: மதுரையிலிருந்து செங்கோட்டை 155 கி.மீ., அங்கிருந்து 7கி.மீ., தூரத்தில் கோயில்.

திறக்கும்நேரம்: 06.00to11.00 & 17.00to20.00

04633- 237 131& 237 343.

விசாகம் ஜென்ம நட்சத்திரத்துக்கான பண்பொழி திருமலை குமாரசுவாமி கோயில்


அனுஷம்:

கோயில்: திருநின்றியூர் மகாலட்சுமிபுரீஸ்வரர் கோயில்

அம்மன்: உலகநாயகி

தல வரலாறு: ஜமதக்னி முனிவரின் மனைவி ரேணுகா கந்தர்வன் ஒருவனின் அழகை ரசித்தாள். இதை அறிந்த முனிவர் அவளது தலையை வெட்டும்படி மகன் பரசுராமனிடம் கூறினார். பரசுராமனும் அவ்வாறே செய்து, தந்தையின் உதவியோடு மீண்டும் தாயை உயிர்பெறச் செய்தார். இந்த பாவம் நீங்க தந்தையும் மகனுமாக திருநின்றியூர் சிவனை வழிபட்டனர்.

சிறப்பு: பூமியில் புதைந்துபோன சிவலிங்கம், சோழமன்னனால் கண்டறியப்பட்டு ஒரு அனுஷ நட்சத்திரத்தன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. எனவே இக்கோயில் அனுஷத்திற்கு உரியதானது. அனுஷ நட்சத்திர ஆண்கள் துவாதசி திதியன்றும், பெண்கள் வரலட்சுமி பூஜையன்றும் சிறப்பு வழிபாடு செய்தால் செல்வவளம் உண்டாகும்.

இருப்பிடம்: மயிலாடுதுறை- சீர்காழி வழியில் 7 கி.மீ.,

திறக்கும்நேரம்: 06.00to11.00 & 16.00to20.00

04364- 320 520

கேட்டை:

கோயில்: பசுபதிகோயில் வரதராஜப்பெருமாள் கோயில்

தாயார்: பெருந்தேவி

தல வரலாறு: ராமானுஜரின் குருவான பெரியநம்பி, மார்கழி கேட்டையில் அவதரித்தவர். இவரது 105வது வயதில் சோழமன்னன் ஒருவன் ராமானுஜர் மீதிருந்த கோபத்தால் பெரியநம்பியின் கண்களைப் பறித்தான். அவர் பசுபதிகோயில் வரதராஜப் பெருமாளிடம் அடைக்கலம் புகுந்தார். அவரின் துன்பம் போக்கும் விதத்தில், பெருமாள் இங்கு மோட்சம் அளித்தார்.

சிறப்பு: பெரியநம்பியின் திருநட்சத்திர வைபவம் சிறப்பாக நடக்கும். கேட்டை நட்சத்திரத்தினர் வழிபட்டால் நல்வாழ்வு கிடைக்கும். கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் செவ்வாயன்று வரும் கேட்டையில் வழிபடுவது சிறப்பு.

இருப்பிடம்: தஞ்சாவூர்- கும்பகோணம் வழியில் 13கி.மீ.,

திறக்கும்நேரம்: 07.00to09.00 & 17.30to19.30

97903 42581& 94436 50920

மூலம்:

கோயில்: மப்பேடு சிங்கீஸ்வரர் கோயில்

அம்மன்: புஷ்பகுஜாம்பாள்

தல வரலாறு: சிவன் ஆனந்ததாண்டவம் ஆடியபோது மிருதங்கம் வாசித்தவர் சிங்கி என்ற நந்திதேவர். இசையில் ஆழ்ந்து கண்ணை மூடியபடி தாளம் போட்டதால், நடனத்தைப் பார்க்க முடியவில்லை. அதனால், மப்பேடு வந்து சிவபூஜை செய்து இறைவனின் நடனத்தைக் கண்டு களித்தார். மெய்ப்பேடு என்பதே மப்பேடு ஆகிவிட்டது. சிங்கி வழிபட்ட சிவன் என்பதால் சிங்கீஸ்வரர் எனப்பட்டார்.

சிறப்பு: மூலநட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிரதோஷத்தன்று இங்கு வழிபடுவது சிறப்பு. இங்குள்ள நவவியாகரண கல் மீது ஏறி, நந்தியையும், மூலவரையும் ஒரே சமயத்தில் தரிசித்தால் ஆரோக்கியம் மேம்படும்.

இருப்பிடம்: சென்னை கோயம்பேடு- தக்கோலம் வழியில் 45 கி.மீ.,

திறக்கும்நேரம்: 06.00to10.00 17.30to19.30

94447 70579 & 94432 25093

கடுவெளியிலுள்ள பூராடம் ஜென்ம நட்சத்திரத்துக்கான ஆகாசபுரீஸ்வரர் கோயில்

பூராடம்:

கோயில்: கடுவெளி ஆகாசபுரீஸ்வரர் கோயில்

அம்மன்: மங்களாம்பிகை

தல வரலாறு: சிவதரிசனம் பெற விரும்பிய கடுவெளிச்சித்தர் அருள்பெற்ற தலம் கடுவெளி. "கடுவெளி' என்றால் "ஆகாசவெளி'. சோழமன்னன் ஒருவன் இங்கு கோயில் கட்டினான். ஆகாயத்திற்கு அதிபதியாக ஆகாசபுரீஸ்வரர் இங்கு வீற்றிருக்கிறார்.

சிறப்பு: இத்தலம் பூராடம் நட்சத்திரத்திற்குரியது. ஆகாயவெளியில் உள்ள அனைத்து தேவதைகளும் பூராடத்தன்று இங்கு வழிபடுவதாக ஐதீகம். அன்று சிவனுக்கு புனுகு சாத்தி வழிபட திருமண, தொழில்தடை நீங்கும்.

இருப்பிடம்: தஞ்சாவூரில் இருந்து திருவையாறு 13 கி.மீ., அங்கிருந்து கல்லணை வழியில் 4 கி.மீ.,

திறக்கும்நேரம்: 09.00to11.00 & 17.00to18.00 பூராடத்தன்று: 08.00to13.00

94434 47826 & 96267 65472

உத்திராடம்:

கோயில்: கீழப்பூங்குடி பிரம்மபுரீஸ்வரர் கோயில்

அம்மன்: மீனாட்சியம்மன்

தல வரலாறு: படைப்புத் தொழிலைச் செய்ததால், சிவனை விட தானே உயர்ந்தவன் என்று பிரம்மா கருதினார். இந்த மமதையை அடக்க, பிரம்மாவின் ஐந்து தலைகளில் ஒருதலையைக் கொய்தார் சிவன். தனது பாவம் தீர பிரம்மா, பூலோகத்தில் சிவனை வழிபட்ட தலம் கீழப்பூங்குடி. பழைய கோயில் அழிந்து போனதால் புதிய கோயில் கட்டப்பட்டது.

சிறப்பு: இங்குள்ள மீனாட்சி அம்மனின் நட்சத்திரம் உத்திராடம். இதில் பிறந்தவர்கள் பிரம்மபுரீஸ்வரரையும், மீனாட்சியையும் உத்திராடத்தன்று வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். பவுர்ணமியன்று சிவனுக்கு விசேஷ பூஜை நடக்கும்.

இருப்பிடம்: மதுரையிலிருந்து 45கி.மீ., சிவகங்கையிலிருந்து காரைக்குடி செல்லும் வழியில் ஒக்கூர் 12கி.மீ., அங்கிருந்து கீழப்பூங்குடி 3 கி.மீ.,

திறக்கும் நேரம்: 07.00to11.00 & 17.00to20.00

99436 59071 & 99466 59072

திருவோணம்:

கோயில்: திருப்பாற்கடல் பிரசன்ன வேங்கடேசப்பெருமாள் கோயில்

தாயார்: அலர்மேலுமங்கைத் தாயார்

தலவரலாறு: புண்டரீக மகரிஷியின் பக்திக்கு இணங்கி பெருமாள் பிரசன்னமான தலம் திருப்பாற்கடல். சந்திரன் ஒரு சாபத்தால் இருளடைந்தான். அவன் மனைவியரில் ஒருத்தியான திருவோணதேவி வருந்தினாள். இங்கு வந்து வழிபட்டு கணவரின் சாபம் நீங்கப் பெற்றாள்.

சிறப்பு: திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருவோணம், மூன்றாம்பிறை ஆகிய நாட்களில் பெருமாளுக்கு அர்ச்சனை செய்து வழிபட நினைத்தது நிறைவேறும்.

இருப்பிடம்: வேலூர்- சென்னை வழியில் 20கி.மீ., தூரத்தில் காவேரிப்பாக்கம். இங்கிருந்து 2 கி.மீ., தூரத்தில் கோயில்.

திறக்கும்நேரம்: 07.30to12.00 & 16.30to19.30

94868 77896 & 04177 254 929

அவிட்டம்:

கோயில்: கீழ்க்கொருக்கை பிரம்மஞானபுரீஸ்வரர் கோயில்

அம்மன்: புஷ்பவல்லி

தல வரலாறு: கோரக்கசித்தர் ஒரு மடத்தில் தங்கியிருந்தார். இரவில் விழித்தபோது, அவரருகில் ஒருத்தி படுத்திருந்தாள். முந்தானை சித்தர் மீது கிடந்தது. இதற்கு பரிகாரமாக தன் கைகளை வெட்டிக் கொண்டார். சிவனருளால் கைகள் வளர்ந்தன. கையை வெட்டியதால் "கோரக்கை' என்றும், குறுகிய கைகளால் வழிபட்டதால் "குறுக்கை' என்றும் ஊருக்குப் பெயர் வந்தது. தற்போது "கொருக்கை' எனப்படுகிறது.

சிறப்பு: அவிட்ட நட்சத்திரத்தன்று பிரம்மஞானபுரீஸ்வரர், பிரம்மாவுக்கு ஞானம் தந்ததால் இத்தலம் அவிட்டத்திற்கு உரியதானது. இந்த நட்சத்திரத்தினர் ஆவணி அவிட்டத்தன்று அடிப்பிரதட்சிணம் செய்து வழிபட்டால் யோக வாழ்வு அமையும்.

இருப்பிடம்: கும்பகோணத்திலிருந்து 4 கி.மீ.,

திறக்கும்நேரம்: 11.00to13.00 & 17.00to18.00

98658 04862 & 94436 78579

அவிட்ட ஜென்மநட்சத்திரத்துக்கான கீழ்க்கொருக்கை பிரம்ம ஞானபுரீஸ்வரர் கோயில் (பைல்படம்)

சதயம்:

கோயில்: திருப்புகலூர் அக்னிபுரீஸ்வரர் கோயில்

அம்மன்: கருந்தார் குழலி

தல வரலாறு: தவமிருந்த அக்னிதேவனுக்கு சந்திர சேகரராக சிவன் காட்சியளித்து அருள்புரிந்த தலம் திருப்புகலூர். "புகல்' என்றால் அடைக்கலம். அடைக்கலம் புகுந்தவர்களை ஆட்கொள் பவராக சுவாமி இங்கு வீற்றிருக்கிறார். வர்த்தமானேஸ்வரர், மனோன்மணி அம்பாளும் இங்கு வீற்றிருக்கின்றனர்.

சிறப்பு: திருநாவுக்கரசர் தன் 81ம் வயதில் சித்திரை சதய நாளில் இங்கு சிவனோடு இரண்டறக் கலந்தார். இதை ஒட்டி பத்து நாட்கள் திருவிழா நடக்கும். சதய நட்சத்திரத்தினர் இங்கு வழிபட்டால் ஆயுள், ஆரோக்கியம், செல்வவளம் உண்டாகும்.

இருப்பிடம்: திருவாரூர் மாவட்டம் நன்னிலம்- நாகப்பட்டினம் வழியில் 10கி.மீ.,

திறக்கும்நேரம்: 06.00to1200 & 16.00to20.00

04366 236 970

திருவோணம் நட்சத்திரத்துக்கான திருப்பாற்கடல் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் (பைல்படம்)

பூரட்டாதி:

கோயில்: ரங்கநாதபுரம் திருவானேஸ்வரர் கோயில்

அம்மன்: காமாட்சி

தல வரலாறு: இந்திரனும், அவனது ஐராவத யானையும் பூரட்டாதிநாளில் திருவானேஸ்வரரை பூஜித்து நற்பலன் பெற்றனர். கோச்செங்கட்சோழன் கட்டிய முதல் மாடக்கோயில். இறைவன் இங்கிருந்தே காலச்சக்கரத்தைப் படைத்தார். கஜ கடாட்ச சக்தி விமானத்தின் கீழ் சுவாமி எழுந்தருளியிருக்கிறார்.

சிறப்பு: பூரட்டாதியன்று திருவானேஸ்வரரை வழிபட்டு ஏழு வண்ண ஆடைகளை ஏழைகளுக்கு தானம் அளித்தால் புத்திகூர்மை உண்டாகும். திருமணம், வேலைவாய்ப்பு தடையின்றி நடந்தேறும்.

இருப்பிடம்: தஞ்சாவூரிலிருந்து திருவையாறு 20 கி.மீ., இங்கிருந்து திருக்காட்டுப்பள்ளி 17கி.மீ., அங்கிருந்து அகரப்பேட்டை வழியில் 2கி.மீ.,

திறக்கும்நேரம்: 07.00to09.00 & 17.30to19.00

94439 70397 &97150 37810

உத்திரட்டாதி:

கோயில்: தீயத்தூர் சகஸ்ர லட்சுமீஸ்வரர் கோயில்

அம்மன்: பெரியநாயகி

தல வரலாறு: சிவதரிசனம் பெற விரும்பிய லட்சுமி, அகத்தியரின் ஆலோசனைப்படி பூலோகத்தில் வழிபட்ட தலம் தீயத்தூர். அவள், தினமும் ஆயிரம் தாமரை மலர்களால், சிவனை வழிபட்டதால் "சகஸ்ரலட்சுமீஸ்வரர்' என்று பெயர் வந்தது. "சகஸ்ர' என்றால் "ஆயிரம்'.

சிறப்பு: உத்திரட்டாதி நட்சத்திரத்தில் அவதரித்த தேவசிற்பி விஸ்வகர்மா, ஆங்கிரஸர், அக்னி புராந்தக மகரிஷி ஆகியோர் அரூபவடிவில் சகஸ்ரலட்சுமீஸ்வரரை தரிசிக்க உத்திரட்டாதி நாளில் வருவதாக ஐதீகம். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பொங்கல் நைவேத்யம் செய்ய பணக்கஷ்டம் தீரும். செயல்பாடுகளில் தடை நீங்கும்.

இருப்பிடம்: புதுக்கோட்டையிலிருந்து ஆவுடையார்கோயில் 40கி.மீ., அங்கிருந்து திருப்புனவாசல் செல்லும் வழியில் 21கி.மீ.,

திறக்கும்நேரம்: 06.00to12.00

99652 11768 & 04371-239 212


ரேவதி:

கோயில்: காருகுடி கைலாசநாதர் கோயில்

அம்மன்: பெரியநாயகி

தல வரலாறு: சந்திரன் தன் மனைவியான ரேவதியுடன் சிவனருள் பெற்ற தலம் காருகுடி. "கார்' எனப்படும் ஏழுவகை மேகங்களும் சிவனை வழிபட்டதால் இத்தலத்திற்கு "காருகுடி' என்ற பெயர் உண்டானது. 1800 ஆண்டுகளுக்கு முன் கொல்லிமலையை ஆண்ட வல்வில் ஓரி கோயிலைக் கட்டினான்.

சிறப்பு: ரேவதி நட்சத்திர தேவதை அரூப வடிவத்தில் (உருவமின்றி) தினமும் சிவனை வழிபடுவதாக ஐதீகம். ரேவதி நட்சத்திரத்தினர் இங்கு சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட நினைத்தது விரைவில் நிறைவேறும். தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் இனிதே நடக்கும்.

இருப்பிடம்: திருச்சியிலிருந்து முசிறி 40கி.மீ, இங்கிருந்து தாத்தய்யங்கார் பேட்டை 21கி.மீ., அங்கிருந்து காருகுடி 5கி.மீ.,

திறக்கும்நேரம்: 06.00to11.00 & 17.00to20.00 9751894339&9442358146

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 9 April 2024 11:25 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    கோவாக்சின் போட்டவர்களும் தப்ப முடியாதாம்..! புதிய வதந்தி..!
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை...
  4. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் பறிமுதல்..!
  5. கீழ்பெண்ணாத்தூர்‎
    வாசவி அம்மன் ஜெயந்தி விழா..!
  6. நாமக்கல்
    நிதி நிறுவன ஊழியரை தாக்கி வழிப்பறி- வாலிபர் கைது: சிறுவன் உட்பட 3...
  7. கலசப்பாக்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை விவசாயிகள் மகிழ்ச்சி..!
  8. ஆரணி
    முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா..!
  9. காஞ்சிபுரம்
    வாலாஜாபாத் அருகே சாலை விபத்தில் லாரி ஓட்டுனர் பலி...!
  10. காஞ்சிபுரம்
    வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன்...