/* */

மௌனத்துக்கு இத்தனை அர்த்தங்களா? - ஆச்சரியம்தான் போங்க...!

'மௌனதுக்கு சம்மதம்' என்று மட்டும் அர்த்தமல்ல... மௌனத்துக்கு இன்னும் நிறைய அர்த்தங்கள் உள்ளன. அவற்றைப் பற்றி தெரிந்துகொள்ள, 'மௌனமாக' வாங்க...!

HIGHLIGHTS

மௌனத்துக்கு இத்தனை அர்த்தங்களா? - ஆச்சரியம்தான் போங்க...!
X

உங்கள் மௌனம் சத்தமாக ஒலிக்கட்டும் (கோப்பு படம்)

மௌனம் பலவிதம்; மௌனம் என்ற வார்த்தைக்குள் அடங்கியிருக்கும் 18 அர்த்தங்களைப் பற்றி தெரிந்துகொள்வது முக்கியம்.


பெண் பார்க்கும் சமயத்தில் கேள்வி கேட்கப்படும் நேரத்தில் பெண்ணின் மௌனம்- சம்மதம்

நாம் நேசித்த சில உறவுகளை பிரியும் போது மௌனம்- துன்பம்

இடையுறாது காரியம் செய்யும் விடா முயற்சியின் போது மௌனம் - நம்பிக்கை

நம் இதயத்தில் அமர்ந்த அந்தக் காதலில் மௌனம் - சித்ரவதை

நாம் தோல்வி கண்டு வெற்றிக்கு வழிதேடும் போது மௌனம் - பொறுமை

நாம் வெற்றி கண்டபோது நம்மைச் சூழ்ந்திருக்கும் மௌனம் - அடக்கம்

திருமணக்கோலத்தில் உள்ள அமைதியின் போது மௌனம் - வெட்கம்

தவறுதலாக தவறு செய்த போது மௌனம் - பயம்

ஆசைகள் நம்மை சூழ்ந்திருக்கும் போது மௌனம் - எதிர்பார்ப்பு

கோபத்தை குறைக்காமல் அடக்கும் போது மௌனம்- ரத்தக்கொதிப்பு

இலக்கை அடைய நினைத்து ஒருமுகப்படுத்தும் போது மௌனம் - சக்தி


தீவிரமாகப் போராடும் போது மௌனம் - வலிமை

பிடிக்காத விஷயங்களை ஒத்துக்கொள்ளாத போது மௌனம் - எதிர்ப்பு

பொது இடத்தில் பலர் பார்க்க கால் இடறி விழுந்த பின் எழுந்து அமர்ந்திருக்கும் போது மௌனம் - அவமானம்

நம்மை விட்டு பிரிந்தவர்களை பாசத்தோடு நினைக்கும் போது மௌனம் - துக்கம்

நம் குடி கெடுத்தவர்களை பழிவாங்க நினைக்கும் போது மௌனம்- ஆத்திரம்.

கற்ற வித்தையை கையாளும் போது மௌனம் - ஆனந்தம்

அயர்ந்த வேளையில் அமைதியான அந்த மௌனம் - தூக்கம்

மனிதர்களிடம் இருக்கும் மிகப்பெரிய பிரச்னையே மௌனம் பற்றிய புரிதல் இல்லாததுதான். மௌனமாக இருக்க வேண்டிய நேரத்தில் பேசி விடுவதும், பேச வேண்டிய நேரத்தில் மௌனமாக இருந்து விடுவதும்தான், பல சிக்கல்களுக்கு காரணமாகி விடுகிறது. ஆனால், பிரச்னைக்குரிய இடங்களில், மனக்குமுறல் நிறைந்த சூழல்களில் பேசாமல் மௌனம் காப்பதே, மேலும் அந்த பிரச்னையை பெரிதாக்காமல், தடுக்கும். பிரச்னையின் தீவிரத்தை குறைக்கும்.


ஆனால், உணர்ச்சி வேகத்தில், தன் வசத்தை இழந்துவிடும் மனிதர்கள், ஆவேசத்தை அந்த நேரத்தில் வெளிப்படுத்தி, கடுமையான வார்த்தைகளை கொட்டி விடுகின்றனர். அது, எதிரில் இருப்பவர்களின் இதயங்களை குத்திக் கிழித்து விடுகிறது. காலங்கள் மாறினாலும், அந்த காயங்களின் வடுக்கள் எப்போதும் மறைவதில்லை. 'தீயால் சுட்டப் புண் ஆறினாலும், அதன் வடு மறைவதில்லை' என, அய்யன் திருவள்ளுவர் இதைத்தான் குறிப்பிட்டார். சொற்களை கத்தி போல் பயன்படுத்தும் மனிதர்களால், இன்று மனம் முழுவதும் ஆறாத காயங்களோடு, தினம் தினம் நொந்து வருந்தி வாழும் மக்கள் மிக ஏராளமாக உள்ளனர்.

எனவே, சம்மதம் சொல்வதற்கு மட்டுமே, மவுனத்தை பயன்படுத்தாமல், அமைதியான வாழ்க்கை வாழவும் மௌனத்தை கருவியாக கொள்ள வேண்டும். பேசிக்கொண்டு இருப்பவர்கள் பேசிக்கொண்டே இருக்கட்டும். அவர்களுக்கு, நீங்கள் மௌனத்தால் மட்டுமே, பதில் சொல்லிக்கொண்டு இருங்கள். ஒரு நாள், பேச்சு நின்று போகும். மௌனம் அங்கே வெற்றி பெறும்.

Updated On: 9 Feb 2023 7:08 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. கோவை மாநகர்
    கோவை நகரில் நள்ளிரவு பெய்த மிதமான மழை: மின்னல் தாக்கி தீப்பிடித்த...
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 89.25 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  7. திருவண்ணாமலை
    மாதந்தோறும் ஊதியம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் கலெக்டரிடம் மனு
  8. வீடியோ
    🔴LIVE : டெல்லியில் Kejirwalai-யை கிழித்து தொங்கவிட்ட Annamalai...
  9. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பனை ஓலை பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்...
  10. நாமக்கல்
    பாக்கு மரத்தில் கோடையில் பூச்சி நோய் கட்டுப்பாடு: 9ம் தேதி இலவச...