/* */

டெல்லியில் தினகரன் : ஓபிஎஸ் நிலை என்ன?

அதிமுக பாஜக கூட்டணி இடையே நடந்து கொண்டிருப்பது உண்மையா? அல்லது அரசியல் ஸ்டண்ட்டா? என்று குழம்பி போயிருக்கிறார்கள் தொண்டர்கள்.

HIGHLIGHTS

டெல்லியில் தினகரன் : ஓபிஎஸ் நிலை என்ன?
X

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா மற்றும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்.

அதிமுக, பாஜக உறவு முறிந்ததை 2 கட்சியிலுமே வரவேற்று பட்டாசு வெடித்து கொண்டாடி கொண்டிருக்கிறார்கள். இதில் எது உண்மை? அதிமுக + பாஜக இடையேயான கூட்டணி முறிந்து விட்டதாக அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

பாஜகவுடனான கூட்டணி முறிந்ததை கொண்டாடும் வகையில், அதிமுக தொண்டர்களும், பாஜக தொண்டர்களும் ஆளுக்கொரு பக்கம் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி கொண்டிருக்கிறார்கள்.

எனினும் நடந்து கொண்டிருப்பதெல்லாம் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை தந்து கொண்டிருக்கிறது. அதிமுக அறிவித்துள்ள இந்த முடிவுக்கு 2 வகையான காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று, அண்ணாமலை மீதான அதிருப்தி, மற்றொன்று சிறுபான்மையினர் ஓட்டுகள். எனினும், சிறுபான்மையினர் ஓட்டுகளை திமுக எளிதில் விட்டுத்தருமா என்பது தெரியவில்லை.

அதேசமயம், அதிமுக எடுத்த இந்த முடிவானது, மேலிட பாஜகவை அதிர வைத்துள்ளதாக சொல்கிறார்கள். உடனடியாக அண்ணாமலையை டெல்லிக்கு வர உத்தரவிட்டது. அத்துடன் கூட்டணி முறிவு குறித்து பாஜக நிர்வாகிகள் எந்த கருத்தும் தெரிவிக்க கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கேற்றவாறு, பாஜகவில் எந்த தலைவர்களுமே இதுகுறித்து கருத்து கூறாமல் அமைதி காத்து வருகிறார்கள்.

ஓபிஎஸ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பாஜக - அதிமுக இருவருமே சேர வேண்டும் என்பது தான். கூட்டணி கட்சிகளின் விருப்பமாகவும் உள்ளது. அந்த வகையில், ஜி.கே வாசன், கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் போன்றோர் மேலிட பாஜகவிடம் சமரசம் பேசி வருவதாகவும் தெரிகிறது. நிலைமை இப்படியிருக்க ஓபிஎஸ் என்ன செய்ய போகிறார்? என்பதே மிகுந்த ஆர்வத்தை கிளப்பி வருகிறது. மறைந்த முதல்வர்கள் ஜெயலலிதா முதல் அண்ணாதுரை வரை அண்ணாமலை விமர்சித்திருந்த நிலையில், இந்த விவகாரங்களில் ஓபிஎஸ்ஸின் ரியாக்ஷன் என்ன என்பதையும் அதிமுகவினர் கவனித்து வருகிறார்கள்.

பாஜகவுக்கு இணக்கமாகவும், நெருக்கமாகவும், விசுவாசமாகவும் இருந்து வருபவர் ஓபிஎஸ். "ஒரே நாடு ஒரே தேர்தல்" முதல் பாஜகவின் அனைத்து அறிவிப்புகளையும் வரவேற்று சிவப்பு கம்பளம் விரித்தவர் ஓபிஎஸ். அவ்வளவு ஏன்? பாஜகவுக்காக, ஈரோடு தேர்தலில் வேட்பாளரையே வாபஸ் பெற வைத்தவர் ஓபிஎஸ். பாஜக வெளியேற்றும் வரை, கூட்டணியிலேயே இருப்போம் என்று சொன்னவர் ஓபிஎஸ். அந்த வகையில், கூட்டணி சம்பந்தமாகவும் என்ன முடிவெடுக்க போகிறார் என்ற ஆர்வம் அதிகரித்து வருகிறது.

சமீபத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன் ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில், ", நாங்கள் தனித்து நிற்போம், பாஜகவுடன் ஓபிஎஸ் இல்லை" என்று அழுத்தம் திருத்தமாக கூறி பகீர் கிளப்பியிருந்தார். இதற்கு நடுவில், அமமுக பொதுச்செயலாளர் தினகரன் டெல்லி செல்கிறார். எப்படியும் கூட்டணி குறித்து தினகரன் பேசுவார் என்று தெரிகிறது. அதனால், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க அப்பாயிண்ட்மென்ட் கேட்டுள்ளாராம் ஓபிஎஸ். ஆகமொத்தம் பாஜகவுடன் நெருங்கியே இருக்கும் ஓபிஎஸ்ஸின் முடிவு என்ன என்பதை தெரிந்து கொள்ள அதிமுக ஆர்வமாக உள்ளது.

இந்த நேரத்தில் நாம் ஒன்றை நினைவுபடுத்த வேண்டியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு, மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், ஒரு பேட்டி தந்திருந்தார். அந்த பேட்டியில், ஓபிஎஸ் குறித்து சில விஷயங்களை பேசியிருந்தார். "பாஜகவே எங்களை வெளியே அனுப்பும் வரை, நாங்கள் வெளியே போக மாட்டோம். பாஜகவுடன் தான் இருப்போம் என்று ஓபிஎஸ் சொல்வதே, ரொம்ப கேவலமா இருக்கு.

கழுத்தை புடிச்சு பாஜக வெளியே தள்ளினால் தான் போவீங்களா? அப்படின்னா, பாஜகவை விட்டால் உங்களுக்கு வேற வழி இல்லையா? பாஜகவை நம்பித்தான் பொழப்பு ஓடுது என்று பன்னீர்செல்வம் நினைப்பது தவறு. தினகரன் தான் உங்களுடன் இருக்கிறாரே, தனித்து போட்டியிடுங்கள். ஓபிஎஸ் + தினகரன் + சசிகலா 3பேரும் சேர்ந்து, குறைந்த பட்சம் 10 தொகுதிகளிலாவது, வேட்பாளர்களை நிறுத்தினால், நிச்சயம் பாஜக & எடப்பாடி அணி தோல்வியை தழுவும். இது பாஜகவுக்கும் நன்றாகவே தெரியும்.. அதனால் தான், கடைசியாக ஓபிஎஸ்ஸை இணைத்து கொள்ளலாம் என்று கணக்குப் போடுகிறது.

இந்த விஷயத்தில் ஓபிஎஸ் + தினகரன் + சசிகலா 3 பேருமே ஏமாந்துவிடக்கூடாது. மக்கள் ஆதரவு தனக்கு உள்ளது என்று ஓபிஎஸ் நிரூபிக்க வேண்டும். அதற்கான தளத்தை இப்போதே உருவாக்க வேண்டும்" என்று ப்ரியன் பகிர்ந்து கொண்டிருந்தார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

உடைந்த சட்டி ??!!

Updated On: 29 Sep 2023 7:28 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பசுமை நிறைந்த நினைவுகளே! பள்ளி நட்பின் இனிய நினைவுகள்
  2. தேனி
    பணி நிரவல் கலந்தாய்வினை கை விட ஆசிரியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை
  3. சூலூர்
    தசைநார் சிதைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ கிரிக்கெட் போட்டி
  4. திருவள்ளூர்
    திருவள்ளூர் கடம்பத்தூர் அருகே மத போதகரை அரிவாளால் வெட்டிய மகன்
  5. சிங்காநல்லூர்
    தேர்தல் ஆணையம் வாக்குப்பெட்டிகளை முறையாக கண்காணிக்க வேண்டும் :...
  6. திருப்பரங்குன்றம்
    வெடிகுண்டு மிரட்டலையடுத்து மதுரை விமான நிலையத்துக்கு போலீஸ்
  7. தொழில்நுட்பம்
    ஆபத்தான செயலிகள்: உஷாராக இருங்கள்!
  8. ஆவடி
    திருவள்ளூர் அருகே விஷம் குடித்து ஜிம் பயிற்சியாளர் தற்கொலை
  9. லைஃப்ஸ்டைல்
    2 மாத திருமண ஆண்டு விழா வாழ்த்துக்களும் விளக்கங்களும்
  10. லைஃப்ஸ்டைல்
    முதல் திருமண நாள் வாழ்த்துக்கள் கணவருக்கு - மேற்கோள்கள் மற்றும்...