/* */

சீரகம் தரும் மருத்துவ பலன் என்னவென்று பார்ப்போமா?

Cumin Seeds Meaning in Tamil-சீரகம் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து அகத்தைச் சீர்ப்படுத்தும் ஒரு அற்புதமான உணவுப்பொருள்

HIGHLIGHTS

Cumin Seeds Meaning in Tamil
X

Cumin Seeds Meaning in Tamil

Cumin Seeds Meaning in Tamil-இந்திய சமையலில் முக்கியமாக பங்கு வகிக்கும் பொருட்களில் ஒன்றான சீரகம். ஏராளமான மருத்துவ குணம் கொண்டது. நாம் உணவுக்கு மணம் சேர்க்க பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று, சீரகம். பார்ப்பதற்கு கொஞ்சம் அழுக்காக, அப்படியே சாப்பிட்டால் லேசான கசப்பாக, உலர்வாக இருக்கும் சீரகம், ஒரு மிகச் சிறந்த மருந்து. அதாவது, நோயை விரட்டும் சீரகம். நம் அகத்தைச் சீர்ப்படுத்துவதால், இதற்குச் சீரகம் (சீர்+அகம்) எனப் பெயர் வந்தது.

சீரகம், கிரேக்கத்திலிருந்து உலகெங்கும் பரவியது. சீரகத்தின் பிரத்யேக மணத்தின் காரணமாக, கிரேக்கத்தில் `வரிக்குப் பதிலாக, சீரகம் செலுத்தலாம்' எனும் அரசாணையே அந்தக் காலத்தில் இருந்ததுள்ளது.

கவி காளமேகம் ஒரு பாடலில்

வெங்காயம் சுக்கானால்

வெந்தயத்தால் ஆவதென்ன,

இங்கார் சுமந்நிருப்பார் இச்சரக்கை.

மங்காத சீரகத்தை தந்தீரேல்,

தேடேன் பெருங்காயம், ஏரகத்து செட்டியாரே!

என பாடியிருப்பார். மங்காத சீரகம் என்பது இரட்டுற மொழிதல், மங்காத சீர் அகம் (உடல்), மற்றும் சத்துகள் மங்காத சீரகம் என பாடியிருப்பார்.

அகத்தை (சீர் + அகம் =சீரகம்) சீராக்கும் அப்பேர்ப்பட்ட குணத்தை உடைய சீரகத்தின் பயன்களை பார்ப்போமா?

நீண்ட நாட்கள் செரிமான பிரச்சனையினால் அவதிப்படுறவங்க, சீரகத் தண்ணீரை, காலை வெறும் வயிற்றில் குடித்து வர, செரிமான மண்டலம் சீராக இயக்கப்பட்டு, செரிமானம் எளிதில் நடைபெறும். மற்றும் செரிமானம் சம்பந்தமான பிரச்சனைகளான அஜீரணம், வயிற்று உப்புசம், வாய்வுத் தொல்லை, நெஞ்செரிச்சல், போன்ற பிரச்சனையினால் அவதிப்படுபவர்கள், இந்த சீரகத் தண்ணீரை, காலை வெறும் வயிற்றில் குடித்து வர, எளிதில் குணமாகும். அதே சமயம், சீரகத்தில் இருக்கக்கூடிய அதிகப்படியான நார்ச்சத்து, மலச்சிக்கலையும் தடுக்கிறது.

சீரகத்தில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஏ, குடல் புற்றுநோய் வருவதைத் தடுக்கும் ஆற்றல்கொண்டது.

விடாமல் இருக்கும் விக்கலுக்கு, 8 திப்பிலியையும் 10 சீரகத்தையும் பொடித்து, தேனில் கலந்து சாப்பிட்டால் போதும், விக்கல் நின்றுவிடும்.

சீரகத்துடன் சிறிது மிளகு பொடித்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சி அந்த எண்ணெயைத் தலையில் தேய்த்துக் குளித்தால் கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் போன்ற பிரச்சனைகள் குணமாகும்.

உணவு செரிமானம் ஆகாமல் எதிர்த்துக்கொண்டு வரும்போது (எதுக்களிப்பு)), சாதாரண தண்ணீருக்குப் பதில், உணவருந்தும்போது, இளஞ்சூடான சீரகத் தண்ணீர் அருந்தலாம்.

சீரகத்தையும் ஏலக்காயையும் சம அளவில் எடுத்து, லேசாக வறுத்து, பொடி செய்து, உணவுக்குப் பின் கால் டீஸ்பூன் அளவு சாப்பிட வயிற்று உப்பசம் நீங்கும்

ரத்தசோகை பிரச்சனையினால், அவதிப்படுபவர்கள், காலை வெறும் வயிற்றில், சீரக தண்ணீரை குடித்து வர, இதிலிருக்கக்கூடிய அதிகமான இரும்புச் சத்து, உடலில் புதிய இரத்த செல்களை உற்பத்தி செய்கிறது. இதன் மூலமாக, ரத்த சோகை குணமாகும்.

காய்ச்சி வடிகட்டிய, சீரகத் தண்ணீரை குடித்து வர, மாதவிடாய் வலி, கட்டுப்படும். ஆறு, உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். சீரகத் தண்ணீரில் பொட்டாசியம், கால்சியம், செலினியம், மாங்கனீஸ், போன்ற பொருட்கள் அடங்கி இருக்கிறது. காலையில், டீ, காப்பிக்கு பதிலாக, இந்த சீரகத் தண்ணீரை குடித்து வர, அன்றைய நாள் முழுவதும், உடல் புத்துணர்ச்சியாக இருக்கும்.

சீரகத்தூளை வெண்ணெயில் குழைத்துச் சாப்பிட்டுவர, எரிச்சலுடன் கூடிய அல்சர் நோய் தீரும்.

சீரகம், சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய் இவற்றைச் சம பங்கு எடுத்து, நன்கு மையாகப் பொடி செய்து, அத்துடன் சம அளவு நாட்டுச்சர்க்கரை கலந்து பாட்டிலில் வைத்துக்கொள்ளுங்கள். சாப்பிடுவதற்கு முன்னர், இதிலிருந்து இரண்டு முதல் நான்கு சிட்டிகையை எடுத்து தேனில் குழைத்துக் குழந்தைக்குக் கொடுங்கள். இது நேரத்துக்கு பசியைத் தூண்டும்; ஆரோக்கியத்தையும் பராமரிக்கும்.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு

அதே நேரத்தில் இதை அதிகம் உணவில் சேர்ப்பதால், நமக்கு பாதிப்புகளும் அதிகம் இருக்கின்றன. அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல சீரகத்தையும் அளவாக மட்டுமே பயன்படுத்த வேண்டும். சீரகத்தை அளவிற்கு அதிகமாக பயன்படுத்தினால் என்னென்ன விளைவுகள் ஏற்படும்

சீரக விதைகளில் உள்ள அதிகப்படியான கார்மினேட்டிவ் விளைவு, ஏப்பங்களை அதிகளவில் ஏற்படுத்த காரணமாக அமைகின்றன.

சீரக விதைகளை நாம் அதிகளவில் நீண்ட காலம் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், அதில் உள்ள எளிதில் ஆவியாகும் தன்மை கொண்ட எண்ணெய், நமது கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்தி விடும்

அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் ஆண்களுக்கு மலட்டுத் தன்மையை உண்டாக்குமாம். அதோடு முந்தைய காலத்தில் கருவை கலைக்க சீரகத்தையும் அதிகமாக சாப்பிடுவார்களாம். எனவே கரு நிற்க வேண்டும் என நினைக்கும் பெண்கள் சீரகத்தை அளவாக சாப்பிட வேண்டும்.

பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் அளிக்கும் தாய்மார்கள், கட்டாயம் தங்கள் உணவில் அதிகம் சீரகம் சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், அவர்களது உணவில் சீரகம் இருந்தால், அது பால் சுரப்பை பெருமளவில் குறைத்து விடும்.

அதற்காக, அவர்கள் தங்களது உணவில் இருந்து சீரகத்தை முற்றிலும் தவிர்த்துவிடக் கூடாது. ஏனெனில், சீரகம், நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கவல்லது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 8 April 2024 11:11 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  2. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  3. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  4. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  5. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  6. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  7. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா..!
  9. வீடியோ
    திருக்கடையூர் கோவிலில் Anbumani Ramadoss குடும்பத்துடன் சுவாமி தரிசனம்...
  10. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!