/* */

வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும் அழகான ஒரு வரியில் இதோ..

Life Quotes in Tamil in One Line-மனித வாழ்க்கை மகத்தானது. வாழ்க்கை என்பதை ரசித்து வாழ வேண்டும். பிரச்னைகள் இல்லாத வாழ்க்கை ஏதும் இல்லை. அதனை உரியமுறையில் எதிர்கொள்ள வேண்டும்.

HIGHLIGHTS

Life Quotes in Tamil in One Line
X

Life Quotes in Tamil in One Line

Life Quotes in Tamil in One Line

மனமது செம்மையானால் வாழ்வது சிறக்கும். நம் வாழ்க்கையின் அனைத்து செயல்பாடுகளுமே மனதை மையமாக வைத்தே நடக்கின்றன என்பதை யாராலும் மறுக்க முடியாது.

அவரவர்களின் எண்ணம் போல் அவரவர் வாழ்க்கையானது அமைகிறது. அந்த வகையில் நாம் எவ்வளவு எளிதாக நம் வாழ்க்கையை அமைத்து கொள்கிறோமோ அதற்கு தகுந்தாற்போல் நிம்மதியை அடையலாம்.

அதுவே அகலக்கால் வைப்பவர்களின் நிலை அனைத்துமே அதோ கதிததான். வாழ்க்கையை பொறுத்தவரை ஒப்புமை கூடாது. பக்கத்துவீட்டுக்காரன் வசதியாக இருக்கிறாரே என பொறாமைப் படக்கூடாது. விரலுக்கு தகுந்த வீக்கம்தான். உங்களுக்கு என்ன வருமானமோ அதற்கு தகுந்தாற்போல் கடனில்லா பெருவாழ்வு வாழ கற்றுக்கொள்ளுங்கள். பிரச்னையில்லை.

அதனை விடுத்து அவர்கள் அது வாங்குகிறார்களே இவர்கள் இது வாங்குகிறார்களே என உங்கள் மனது அலை மோதி அப்பொருட்களை கடனுக்கு வாங்கி கடைசியில் கடனையும் கட்ட முடியாமல் வருமானத்துக்கும் வழி இல்லாமல் தவிக்கும்போதுதான் எளிமையான வாழ்க்கை உங்கள் கண்ணுக்கு புலப்படும். எனவே எளிமையே எப்போதும் நிரந்தரம்... அதுதான் தரம் என எண்ணி வாழ கற்றுக்கொள்ளுங்கள்..வாழ்க்கை வளமாகும்.

இதுபோல் வாழ்க்கையின் அர்த்தமுள்ள வாசகங்கள் அனைத்தும் ஒரே வரியில் இதோ....

போலியான புன்னகையை விட திமிரானக் கோபமே மேல்.

வானில் நீ உயர்ந்தாலும் வாழ்வதற்கு தரைக்கு தான் வரவேண்டும

வார்த்தையால் பேசுவதை விட வாழ்ந்து காட்டுவதே சிறப்பு.

தனியே நின்றாலும் தன்மானத்தோடு நிற்ப்பதில் தவறில்லை.

ஆயிரம் உறவுகள் தரமுடியாத பலத்தை ஒரு அவமானம் பெற்றுத் தரும்!

நோயும் கடனும் எதிர்பார்ப்பும் இல்லாதவனின் தூக்கம் மிகவும் சுகமானது.

அதிகமான ஆட்டம் குறுகிய காலமே என்று உணர்த்துகிறது சுற்றும் பம்பரம்.

சிரிப்பு இல்லாத வாழ்க்கை சிறகு இல்லாத பறவைக்கு சமம்.

இழப்புகள் தான் பல வலியையும் சில வலிமையையும் தருகின்றன.

தெளிவாக செய்யாத காரியங்கள் அனைத்தும் வலுவாக இருப்பதில்லை.

அன்பு செய்யும் ஒருவனால் தான் பிறருடைய அன்பை உணர முடியும்.

அளவில்லா அன்பு இருந்தாலும் அளவோடு கொடுத்தால் தான்.. மதிப்பு இருக்கும்.!!!

நடக்காத.. கிடைக்காத.. ஒன்றின் மீது தான் ஆசை அதிகமாக வருகிறது..!

துனியாத வரை வாழ்க்கை பயங்காட்டும், துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்.

யாரையும் நம்பாதே.. இந்த உலகில் தேவை இல்லாமல் யாரும் பழகமாட்டார்கள்…!

கண்டும் காணாமல் சென்று விடுங்கள் பார்த்தும் பார்க்காமல் செல்பவர்களை.

ஏமாற்றம் ஏற்படும் போது நிதானமாக யோசித்தால் நம் எதிர்பார்ப்பே தவறு என்று புரியும்..!

முடிக்க முடியாமல் போனாலும் பரவாயில்லை ஆனால் முயன்று பார்க்க மட்டும் தயங்காதீர்கள்…

யாரும் அறியாத முகம் அனைவரிடமும் உண்டு. அது தெரியாதவரை அனைவரும் நல்லவர்களே!

தவறவிட்டதை திரும்ப பெற முடியாது.. வாய்ப்பாக இருந்தாலும் வாழ்க்கையாக இருந்தாலும்!

இல்லாத போது தேடல் அதிகம்… இருக்கின்ற போது அலட்சியம் அதிகம்.. இதுதான் வாழ்க்கை…

எண்ணமும், பேச்சும், செயலும் ஒரே மாதிரி இருந்தால்… வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்..!!

அழகாய் பேசும் பல வரிகளை விட.. அன்பாய் பேசும் ஒற்றை வரிக்கே உணர்வுகள் அதிகம்…!

தாமரை இலையை போல இரு. தேவையில்லாத சிந்தனைகளை மனதில் ஓட்டிக்கொள்ளாதே!

ஆசையே துன்பத்துக்கு காரணம். எனவே ஆசையை துறந்துவிடுங்கள். முற்றிலுமாக இல்லை. தேவைப்படுவதற்கு மட்டுமே ஆசைப்படவேண்டும். கிடைக்காததற்கு ஆசைப்பட்டு வாழ்க்கையை நரகமாக்கி கொள்ளாதீர்கள்..


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 11 March 2024 7:02 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறை சார்பில் நிழற் பந்தல் அமைப்பு
  2. லைஃப்ஸ்டைல்
    சிதைந்த குடும்பம்..களைந்த கூடு..!
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 89 சதவீதம் தேர்ச்சி
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் ஆகாய கன்னி அம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண உற்சவம்
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  7. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  8. வீடியோ
    Road- ட கூறுபோட்ட நாட்டையும் கூறுபோட்டு வித்துடுவ !#seeman...
  9. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  10. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு